இடுகைகள்

ஜூலை 20, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நினைவுகள் இறக்காது உயிரே .....!!!

இத்தனை நாள் வரையும்.... எத்தனையோ உறவுகள் ... என்னை தூக்கி எறிந்தபோது .... இதயம் வலிக்கவில்லை  ....!!! ஒரு நொடியில் என்னை .... மறுத்துவிட்டாய் தூக்கி .... எறிந்து விட்டாய் .... வலிக்கவில்லை இதயம் .... இறந்துகொண்டிருக்கிறது ....!!! என்றோ ஒருநாள் ..... என்னை திரும்பி பார்ப்பாய் .... என் உடல் வலுவிழந்தாலும் .... நினைவுகள் இறக்காது உயிரே .....!!! + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை

இனிய வரவேற்பு கவிதை

இ னிய  இ னிமையான  இ ன்பமான  இ ல்லத்தில்  இ றையருள்மிக்க  இ ல்லறவாழ்க்கை  இ ன்றும் என்றும்  இ றையருளால்  இ டையூறுகள் நீங்கி  இ ன்பமே  இ டைவிடாமல் கிடைக்க  இ ந்தநாள் மட்டுமல்ல  இ தயத்துடிப்பு உள்ளவரை  இ ன்பலோகத்தில் வாழ  இ ந்த  இனியவனில்  இ தயம் கனிந்த  இ னிய வணக்கம்  இ யன்றவரை அயலவரையும் இ ன்பமாய் வைத்திருங்கள்  இ றைவன் விரும்புவதும்  இ வ்வுலகில் எல்லோரும்  இ ன்பமாய் வாழவைக்கும்  இயல்புடைய மனிதனை தான் ....!!!

தனிமை இனிக்கிறது ....!!!

காதலே உலகம் .... வாழ்ந்துவிடாதீர் .... கடலால் சூழப்பட்ட .... தீவுப்போல்   .... கண்ணீரால் சூழப்பட்ட ..... இதயமாக வாழ்வீர்கள்......!!! தனிமையில் இருந்து .... சிந்தித்தேன் காதல் இனித்தது .... காதலோடு இருந்து சிந்தித்தேன் ... தனிமை இனிக்கிறது ....!!! + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை

அழுவதற்கு நாதியில்லை ...

மீண்டும்  என்னை காதலிக்காதே ..... அழுவதற்கு  நாதியில்லை ... கண்ணீரும் இல்லை ...!!! உன்  நினைவுகளின் ஈட்டிகள்  தினமும் இதயத்தை சல்லடை ... போடுகிறது - அப்போதும் ... என் இதயம் சிரித்தபடியே ... துடிக்கிறது ......!!! + கே இனியவன்  வலிக்கும் இதயத்தின் கவிதை