இடுகைகள்

ஆகஸ்ட் 4, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இனிய வரவேற்பு கவிதை -07

எ ழுந்திரு மனிதா .... எ ழுச்சி மிகு வெற்றி காத்திருக்கிறது .... எ ன்றும் இனிமையாய் வாழ்வதற்கு ..... எ ழுந்திரு அதிகாலை - விரைந்திடு .... எ ட்டு திசையும் பரப்பிடு பணியை ....!!! எ வன் பிறருக்காய் வாழ்கிறானோ ..... எ வன் பிறர் துன்பம் துடைகிறானோ..... எ வனல்ல அவன் - இறைவன் .....! எ ல்லோர் இதயத்திலும் இருக்கும்  எ ல்லையற்றவன் அவன் ....!!! எ ங்கே செல்கிறோம் சரியாக தீர்மானி .... எ ப்போது செல்கிறோம் உறுதியாக முடிவெடு ... எ தற்கு செல்கிறோம் நிதானமாக இருந்திடு .... எ ந்த தடைவரினும் அனைத்தையும் உடைத்தெறி ..... எ ல்லாம் சிறப்பாக நிச்சயம் அமைந்திடும் ....!!! எ திரியென்று ஒருவனை நினைத்துவிடாதே .... எ டுப்பார் கைபிள்ளைபோல் வாழ்ந்துவிடாதே ..... எ ல்லாம் எனக்கே என்று ஆசைபடாதே ..... எ டுத்த காரியத்தை இடையில் நிறுத்தி விடாதே ..... எ ல்லாம் வல்ல இறைவன் இருப்பதை மறந்துவிடாதே .......!!!

பறித்துவிட்டாயே....!!!

ஒருவனுக்கு பெரும் .... பாக்கியம் .....? தாயின் மடியில் பிறந்தவன் .... தாய் மடியில் இறப்பதுதான் .... இறைவா அந்த பாக்கியத்தை .... எனக்கு தராமல் அன்னையை .... பறித்துவிட்டாயே....!!! + கே இனியவனின் பல்வகை கவிதைகள் அம்மா கவிதை

முயற்சி கவிதை

முயற்சியாளன்... ஆபத்தை சந்திக்கிறான் .... வெற்றி பெறும்போது ... மறு முதலீடு செய்கிறான் .... தோல்வியடையும்போது .... புதுமையை தேடுகிறான் ....!!! நான் ஒரு முயற்சியாளன் ...!!! + கே இனியவனின் பல்வகை கவிதைகள் முயற்சி கவிதை 

இயற்கையின் அற்புதத்தை பார்

இயற்கையின் அற்புதத்தை .... பார்த்தாயா ....? மனிதனுக்கு ஓட்சிசனை தந்து .... வாழவைக்கிறது ....! மனிதன் வெளியேற்றும் .... காபனீர் ஓட்சைட்டில் .... தாவரத்தை வாழவைக்கிறது ....! + கே இனியவனின் பல்வகை கவிதைகள் இயற்கை கவிதை

குறுங்கவிதை

மனிதனும் மண் பானையும் ... மண்ணில் தோன்றி ... மண்ணில் முடிகிறது ....!!! மனித மனசும் .... மண் பானையும் ... இருக்கும் வரை அழகு ... உடைந்தால் இணையாது !!! + கே இனியவனின் பல்வகை கவிதைகள் குறுங்கவிதை

தமிழ் மொழி கவிதை

" அ " அன்புக்கு அம்மா  "ஆ " ஆசீவாதத்துக்கு ஆண்டவன்  "இ " இரண்டும் கிடைத்தால் இன்பம் ... "ஈ " ஈகை செய்தால் வள்ளல் ... "உ " உலகம் உன் கையில் .... "ஊ " ஊணுண்னும் போது பகிர்ந்து உண் .... "எ " எழுத்தை கற்றுதந்தவர் இறைவன் .... "ஏ " ஏர் பிடித்தவரே ஏற்றமானவர்கள் .... "ஐ " ஐம்பூதங்களை ரசிப்பவர் ஞானி .... "ஒ " ஒருவருடனேயே உறவை பகிர்ந்துகொள் .... "ஓ " பிரபஞ்ச்சத்தின் உன்னத ஓசை ..... + கே இனியவனின்  பல்வகை கவிதைகள்  தமிழ் மொழி கவிதை

தோல்விகள் அறிவை கூட்டும் ....

பிறக்கும்போதே வாழ்கையை ... கற்று பிறப்பவர் யாருமில்லை ... இறக்கும் போது வாழ்க்கையை ... கற்காமல் இறப்பதில்லை ....!!! அனுபவங்களே வாழ்கையின் சிறந்த ஆசான் .... தோல்விகள் அறிவை கூட்டும் .... வெற்றிகள் அறிவை சேமிக்கும் ...!!! + கே இனியவனின் பல்வகை கவிதைகள் வாழ்க்கை  கவிதை

கண்ணீரால் ஈரமாகியதே ....

தண்ணீரால் என் முகம் ஈரமாகியத்தை காட்டிலும் .... கண்ணீரால் ஈரமாகியதே .... அதிகம் .....!!! என் சுவாசம் உன்  நிவைவுகள் ..... வருவதும் போவதுமாய் .... இருகிறதே ....!!! + கே இனியவனின் பல்வகை கவிதைகள் காதல் தோல்வி கவிதை 

கைபேசி கவிதை

உன் கைபிடித்து .... காதல் செய்தததை .... கைபேசி செய்கிறது ....!!! உன்னையும்  விட முடியவில்லை ... கைபேசியையும் .... விடமுடியவில்லை ....!!! + கே இனியவனின்  பல்வகை கவிதைகள்  கைபேசி கவிதை 02

ஹைக்கூ கவிதை 03

தாயே உலகம் தாயே உணவு குழந்தை பருவம் @@@ தாயே உலகம் கல்வியே உயர்வு பள்ளி பருவம் @@@ தாயே கடவுள் உழைப்பே உலகம் இளமைப்பருவம் + கே இனியவனின் பல்வகை கவிதைகள் ஹைக்கூ கவிதை 03

நட்பு ஜொலிக்கும் ....!!!

நட்பு ... நட்சத்திரம்போல் .... இரவில் பிரகாசிக்கும் .... பகலில் மறைந்திருக்கும் .... நட்பும் அவ்வாறே .....!!! இன்பத்தை விட ... துன்பகாலத்தில் .... எமக்கு ஓடிவந்து ... உதவும் - இரவு  நட்சத்திரம்போல் .... நட்பு ஜொலிக்கும் ....!!! + கே இனியவனின்  பல்வகை கவிதைகள்  நட்பு கவிதை 02