இடுகைகள்

ஜூன், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என்னோடு வந்துவிடு .....!!!

உன் நினைவுகளின் .... எண்ணங்களோடு .... தூங்கினேன் -நீ கனவில் கூட வரவில்லை ....!!! காதல் நிறைந்த இடத்தில் .... வாழ பொருத்தமில்லாதவள் .... காதலே இல்லாத இடத்தில் .... உன்னை சேர்த்து விடுகிறேன் .... என்னோடு வந்துவிடு .....!!! நான் விடுவது கண்ணீர் .... என்று நினைக்கத்தே .... நீ தந்த நினைவுகள் ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1027

இதயத்தை முள்ளாய் வைத்திராதே

உன்முகம் ..... பூரண சந்திரன் .... வார்த்தைகள் சூரியன் ... நம் காதல் சிலவேளை குளிர்கிறது  ..... சுடுகிறது .....!!! இதயத்தை முள்ளாய் .... வைத்துக்கொண்டு ... கண்ணை மலராய் .... வீசுகிறாய் ....!!! காதல் குயவன் .... கையில் பானைபோல் .... அழகாக வடித்தால்.... அழகுதான் ,.........!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1026

உன்னை பார்க்க மாட்டேன்

உன்னை பார்க்க மாட்டேன்... என்று கண் மூடியது .... பார்த்துவிட்டு பார்த்துவிட்டு ... அவள் உன்னை விட்டு .... விலகப்போகிறாள்.... சீக்கரம் பார் என்று .... கண்ணை சுறண்டுது .... இதயம் ...!!! & சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன்

நிறுத்தி விடாதே ...

என் .... சின்ன கவிதை... உன் சின்ன சின்ன ... செல்லசண்டையால் .... வருகிறது.... நிறுத்தி விடாதே ... செல்லகுறும்பு .... சண்டையை ....!!! & கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன் & சுவாசிக்கும் மூச்சாய் -நீ பேசும் பேச்சாய் -நீ சிரிக்கும் சிரிப்பாய் -நீ காணும் கனவாய்-நீ விடும் கண்ணீர்- நீ இத்தனையும் -நீயாக அத்தனையும் -நானாக காதல் எப்படி நீவேறு ... நான் வேறாகியது ....? & கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன்

விசித்திர உலகமாய் மாறிவிட்டது ....!!!

விசித்திர உலகமாய் மாறிவிட்டது ....!!! ------ தின பத்திரிகையை வாசித்து .... உலக நடப்பை விவாதித்து .... கொண்டிருந்த இருவரை பார்த்து .... தோளில் இருந்த துணியால் .... வாயை பொத்திய படி சிரித்த .... வழிப்போக்கன் ........!!! பேசத்தொடங்கினான் ....!!! விசித்திர உலகமையா ...... உண்மை உலகை ஒருமுறைசுற்றி..... வரமுதல் பொய் எட்டுமுறை சுற்றி ..... வந்து விடுகிறது - இதுதான் இன்றைய ..... உண்மையின் இன்றைய நிலை ....!!! இதனால் தான் ..... தீர்ப்புக்களும் தீர்வுகளும் ..... காலம் கடந்தே போய்விடுகிறது ..... உண்மையை நிரூபிக்க முன் .... பொய் உண்மையை கொஞ்சம் .... கொஞ்சமாய் தின்று விடுகிறது .......!!! உலகை ஏமாறுவதர்காக ..... இன்றைய சட்டங்களும் விதிகளும் ..... உண்மையும் பொய்யும் கலந்த .... சட்டத்தில் இயங்கி வருகின்றன ...... எல்லோருக்கும் நல்லவனாக ..... சட்டம் வேஷம் போடுகிறது ......!!! உலகில் ஒருபக்கம் அழிவு ..... மறுபக்கம் ஆனந்த கூத்து ...... இதற்கெல்லாம் காரணம் ...... சட்டம் "உண்மை பாதி" ..... " பொய் பாதி" ஆக இருப்பதே ..... வேதனை என்வென்றால் ..... உண்மையை  நியாயப்படுத்த .... முன்னர் பொய் அதனை

வழிப்போக்கனின் கவிதை

தெருவோரத்தில் உச்சி வெய்யிலில் ..... வாய்க்கு வந்தததை உளறியபடி ...... சென்ற வழிப்போக்கன் ஓரத்தில் .... இருந்த "அரசடிப்பிள்ளையாரை".... வாயில் வந்ததையேல்லாம் ..... தொகுத்து கவிதையாக்கினான் .....!!! & பார்க்கும் இடமெல்லாம் ..... இருக்கும் தெருவெல்லாம் ...... ஆற்றங்கரையெல்லாம்  ....... வீற்றிருக்கும் பிள்ளையாரே ...... என்போன்ற வழிப்போக்கனுக்கு ..... பக்தியை அள்ளிவழங்க உம்மை .... விட்டால் யார் உள்ளனரோ .....? மிருகம் பாதி மனிதன் பாதி .... கலந்திருக்கும் கடவுள் நீர் ....... அதனால் தானோ எல்லா .... உயிரினங்களும் உம்மில் ...... இத்தனை அன்போ .....? உம் வயிறும் நிரம்ம போவதில்லை ..... என் போன்ற வழிப்போக்கனின் ..... வயிறும் நிரம்ம போவத்தில்லை ..... பணம் படைத்தவன் வயிறும் .... மனமும் நன்றாக நிரம்புகிறது ..... அவர்கள் பார்த்து நமக்கு .... படைத்தால் தான் நம் வயிறு ...... நிரம்ப முடியும் ..........!!! அதுசரி உமக்கும் புத்தனுக்கும் ..... அப்படியென்ன அரசமரத்தில் .... காதல் - எங்கெல்லாம் அரசு  முளைக்கிறதோ அங்கெல்லாம் .... இருவரும் அரசை பிடிப்பதுபோல் .... அரச மரத்தை பிடிக்கிறீர்கள் ..... அரசை

இருட்டு தான் அழகு

-------------------------------- கடல் வழிக்கால்வாய்  -------------------------------- .........இருட்டு தான் அழகு  ....... ^^^^^^^^^^^^^^^^^ எல்லோரும் வெளிசத்தை .... பார்த்தே மகிழ்ச்சி அடைகிறோம் ...... காலையில் சூரிய ஒளி அழகு .... மதிய சூரிய ஒளி இன்னுமொரு அழகு ..... அந்திவான சூரிய ஒளி அழகிலும் அழகு ..... இரவு நேர நட்ஷத்திரங்கள் அழகு ....!!! ஆலயங்களில் தீப ஒளி அழகு .... வீடுகளில் குத்து விளக்கு அழகு ..... திரை அரங்கில் வெள்ளி திரை அழகு .... ஆளுக்காள் போட்டிபோடும் .... அலங்கார விளக்குகளும் அழகு ... செயற்கை மின் குமிழ்களும் அழகு .....!!! வெளிசத்தில் அழகுதான் அதிகம் ..... இருளில் அழகும் அதிகம் ..... இருளில்தான் அறிவும் உதயம் ..... நாம் பிறக்கமுன் கருவறை இருள் .... விதை முளைக்கமுன் விதை இருள் ..... கருவறையில் சாமி  இடமும் இருள் .... கல்லறையும் இருள் தான் .....!!! வெளிசத்தில் தான் வேறுபாடுகள் ..... வெளிசத்தில் பார்க்கும்போதே .... குட்டை  நெட்டை வேறுபாடு ..... அழகு  அசிங்கம் வேறுபாடு .... இத்தனை ஏற்றத்தாழ்வுகள் .... இருளுக்கு எல்லாம் சமத்துவம்.....! இருளில் மனிதனும் ஒன்றுதான் .... இருளில்கதிர

சிந்திக்க ஹைக்கூ க்கள்

பறப்பதாக நினைத்து பரலோகம் போகிறான் போதைக்காரன் @@@ அரசாங்க அனுமதியோடு உடலை கருக்கும் செயல் சிகரெட் @@@ பேச்சில் ஒரு வாழ்க்கை நிஜத்தில் ஒரு வாழ்க்கை அரசியல் & கவிப்புயலின் ஹைக்கூக்கள்

இணைவது இரட்டிப்பு மகிழ்ச்சி ...!!!

யார் என்ன சொன்னாலும் பிரியமாட்டேன் என்பது நட்பு ...!!! யாருடைய ஏவலுக்கு.... பிரியக்கூடியது ..... காதல் ......!!! காதலில் பிரிந்தவர்கள் இணைந்தாலும் கசப்பு தான் ...!!! நட்பில் மட்டும் தான் பிரிந்தவர்கள் மீண்டும் இணைவது இரட்டிப்பு மகிழ்ச்சி ...!!! நட்பு என்றும் புனிதமானது புனிதர்கள் மத்தியில் ....!!!

நட்பின் காவியம் ..

சாதி பார்க்காது தகுதி பார்க்காது மொழி பார்க்காது மதம் பார்க்காது .... தோன்றுவதுதான் ... நட்பு .......!!! கண்ட நொடியில்... தோன்றுவது நட்பு..... கண்ட இடத்தில் .... தோன்றுவது நட்பு ....!!! நட்பின் காவியம் .... காலத்தால் வாழ்கிறது ....!!!

அன்பை காட்டவிலையே

ஏனடி பிரிந்த பின் இவ்வளவு அன்பு காட்டுகிறாய் .................?  உன்னோடு இருந்தபோது இவ்வளவு அன்பை காட்டவிலையே .......? இருந்த போது நான் பட்ட துன்பத்தை விட பிரிந்த பின் துன்பம் சுகமாக உள்ளது ....!!! பிரிந்து இருந்து அன்பு காட்ட வேண்டாம்! நீ அருகில் இருந்து சண்டை போடு அது போதும்!!!...

இருதய மாற்று சிகிச்சையா செய்து விட்டாய்

நீ என்ன இருதய மாற்று சிகிச்சையாசெய்து விட்டாய் ..? இத்தனைகாலம் பழகி எத்தனையோ நினைவுகளை தந்துவிட்டு .. எதுவுமே இல்லததுபோல் .. தலையை குனிந்துகொண்டோ செல்லுகிராயே நீ என்ன ? இருதய மாற்று .... சிகிச்சையா செய்து விட்டாய் ?

சொல்வதாயின் சொல்லிவிடு

நீ ஓடி விளையாடுவது என் இரத்த ஓட்டத்தில் நீ ஒழித்து என் மூட்டு எலும்புகளில் நீ வீணை வாசிப்பது என் நரம்பு தொகுதியில் நீ  நடந்து திரிவதுஎன் இதய வீதியில் நீ கூதல் காய்வது என் மூச்சு காற்றில் நீ கோபப்படுவது என் வியர்வையில் தெரியும் நீ சந்தோசப் படும் போது என் உடல் சிலுக்கும் நீ தூங்கி எழுவது இதய அறையில் நீ சொல் நான் இல்லாமல் நீ வாழமுடியுமா ..? நீ இல்லாமல் நான்தான் வாழமுடியுமா ..? செலவதாயின்சொல்லி விட்டு செய் ...!

கலங்கியிருக்க மாட்டேன்....!!!

பிரிவை விட கொடுமை ..... காதலில் மௌனம் ...... மௌனத்தை விட கொடுமை .... காதலில் சந்தேகம் ....!!! உன்னை கனவில் .... மட்டும் காதலித்திருந்தால் .... கலங்கியிருக்க மாட்டேன்.... நினைவில் மட்டும் .... காதலித்திருந்தாலும் ..... கலங்கியிருக்க மாட்டேன்....!!! உன்னை உயிராய் காற்றாய் காதலித்து ..... அவஸ்தைப்படுகிறேன் .....!!!  ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

உன்னை காதலித்தேன் .... !!!

படம்
எவரோடும் வாழலாம் .... என்றிருந்திருந்தால் .... காதல் தேவையில்லை ....!!! உன்னோடு மட்டுமே .... நான் வாழவேண்டும் .... உனக்காகவே நான் .... வாழவேண்டும் ..... என்பதால்  உன்னை.... காதலித்தேன் .... !!! இப்போ .... உனக்காகவும் வாழ .... முடியவில்லை ..... எனக்காக வாழவும் .... முடியவில்லை ..........!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

கவிதை வந்தது .....!!!

வாளால் வெட்டும் கொடுமையை .... காட்டிலும்  கொடுமையானது .... வாயால் கொட்டும் .... வார்த்தைகள் .....!!! & கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன் & மெல்ல மெல்ல .... கிறுக்கினேன் வரிகள் .... வந்தது - உன்னை ... காதலித்தேன் -கவிதை ... வந்தது .....!!! & கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன்

கண்ணீர் வடிவில் ....!!!

மனதில் உள்ள வலியை .... வார்த்தையாய் சொல்லமுன் .... கண் முந்திக்கொள்கிறது ... கண்ணீர்  வடிவில் ....!!! & கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன்

நினைவு எப்போதெல்லாம்

உன் நினைவு எப்போதெல்லாம் வருகிறதோ .... அப்போதெல்லாம்.... என்னை வலிமையாக்கி ... வரிகளாக்கிவிடுவேன் ... வரிகளுக்கு தான் வேதனை புரியும் .....!!! & கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன்

நீயோ அக்கறையில்லாமல்

உன்னை கடவுளாக .... நினைத்து கவிதை .... எழுதுகிறேன் -நீயோ .... கடவுளை வணங்க .... கோயில் போகணும் .... என்கிறாய் ......!!! நான் கவிதை .... எழுதும்போது நீ .... அருகில் இருக்கவேண்டும் .... என்று ஆசைப்படுகிறேன் .... நீயோ அக்கறையில்லாமல் .... இருக்கிறாய் .....!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

உன் அதிக நிராகரிப்பு ....!!!

நாணயத்துக்கு இரு பக்கம் போல் நான் தலை , நீ  பூ.....!!! புத்தகத்துக்கு பண்பு போல் நான் எழுத்து நீ வரிகள் ...!!! இதயத்துக்கு இரு அறை நான்வ லது நீ ,இடது....!!! காதல் பிரிவுக்கு காரணம் என் அதிக எதிர்பார்ப்பு .... உன் அதிக நிராகரிப்பு ....!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

நீ என்னை பிரிந்தாயோ ....?

பல சோதனைகள்... சந்தித்து பல ... வேதனையையும் .... சந்தித்தேன் .... அத்தனைக்கும் தீர்வு கண்டேன் .... நீ காதல் செய்ததால் ....!!! நீ ஏன் என்னை பிரிந்தாய் என்று இன்றுவரை தீர்வு காணவில்லை ...!!! எல்லோரும் வெற்றி பெற்றால் -காதலை ... யார் காதலிப்பார்கள் .... என்பதற்காக நீ .... என்னை பிரிந்தாயோ ....? ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

எதற்காக இரண்டையும் தருகிறாய் .....?

வலிகள் தோன்ற தோன்ற ..... வரிகள் கண்ணீர் விடும் ..... கண்ணீர் விட விட.... காதல் கவிதைகள் தோல்வியடையும்...!!! வரிகள் இனிக்க இனிக்க இதயம் துள்ளிக்குதிக்கும் ... காதல் கவிதைகள்..... இனிமையாகும் ...!!! கண்கள் தான் இரண்டு .... இதயம் ஒன்றுதானே .... எதற்காக இரண்டையும் .... தருகிறாய் .....? ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

உன்னை காதலிக்காமல் ....

ஒருமுறை என்னை ... காதலிப்பதாய் சொல்லு .... அதற்கு அப்புறம் உன்னை ... நான் காதலிக்க மாட்டேன் .... உன்னை காதலிக்காமல் .... என் மூசசு பிரிந்து விட ... கூடாது என்பதற்காக .... அவளிடம் கேட்டேன்....!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

உன் பிரிவு ......!!!

நீ -அன்று இல்லாத வேளை -தன் விருப்பப்படி கொல்லுகிறது என் தனிமை ....!!! நீ -இன்று இருக்கும்போதே .... உயிரோடு கொல்கிறது.... உன் பிரிவு ......!!! & என் காதல் நேற்றும் இன்றும் கவிப்புயல் இனியவன்

வரிகளாக்கிவிட்டேன் இன்று ....!!!

ஆயிரம் முறை வலம்வந்தேன் .... ஆயிரம் வலிகளை.... தந்தாய் அயராமல் .... காதலித்தேன் அன்று .....!!! துன்பங்களும் ..... துயரங்களும் தூசிபோல் .... ஆக்கிவிட்டாய்... வலிகள் எல்லாவற்றையும் .... வரிகளாக்கிவிட்டேன்  இன்று ....!!! & என் காதல் நேற்றும் இன்றும் கவிப்புயல் இனியவன்

என் காதல் நேற்றும் இன்றும் ....!!!

அன்று ........!!! நீ பேசவரும் வார்த்தை சொல்லுகிறது நீ பேசாமல் இருக்கும் காரணத்தை ...!!! இன்று .....!!! நீ பேசாமல் இருக்கும் ... காரணத்தை -நீ பேசிய வார்த்தைகளே .... காரணம் .....!!! & காதல் நேற்றும்  இன்றும் கவிப்புயல் இனியவன் 

கதைக்கும் கவிதைக்கும் காதல்

படம்
 அவன் ; இனிமை ---------- அழகான அமைதியான இயற்கை அழகுகள் நிறைந்த சூழலில் வாழ்கிறான் .ஒரு புறம் கடல் . வாழ்வாதாரமாக விவசாயம் . வீட்டுக்கு முதல் மகன் . அவனுக்கு கீழ் இரண்டு தங்கை ஒரு தம்பி . அன்பான அம்மா அப்பா . உறவுக்கு சூழ்ந்துள்ள உறவுகள் . தோள் கொடுக்கும் உயிர் நண்பர்கள் . படித்த படிப்புக்கு ஒரு வேலை . வேலை நேரம் மீதியில் விவசாயம் . இப்படி இன்பமான சூழலில் வாழும் " இனிமை " வாழ்க்கையில் நடக்கப்போகும் வாழ்க்கை எண்ணங்களை பகிரப்போகிறேன் அவன் வாழும் கிராமத்தில் .அவன் நண்பனின் அக்காவின் திருமணத்துக்கு வந்தாள் .முற்றிலும் நகரப்புறத்தில் பிறந்து  வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் "வின்னியா " என்ற அழகு தேவதை . அவள் வாழும் இடம் தான் நகரம் .ஆனால் வாழ்க்கை முறையில் கிராமிய காற்றும் அடிக்க தான் செய்கிறது . இந்த இரட்டை வாடை அடிக்கும் இவளுக்கும் .கிராமிய வாடை கொண்ட இவனுக்கும் எப்படி காதல் வந்தது . என்ன நடைபெறப்போகிறது என்பதை தொடர்ந்து பார்ப்போம் . இது தொடர் பதிவுதான் என்றாலும் .ஒவ்வொரு பதிவும் முற்று பெறும் . அவள் ;வின்னியா --------- மெல்லியதாய் பூசிய ...... உதட்ட

நீ வரும்போது நான் மலர்கிறேன் ...!!!

உனக்கென்ன -நீ கண் சிமிட்டி விட்டு ..... சென்று விட்டாய் ....!!! என் இதயம் .... இறந்து பிறந்து .... துடிக்கும் வேதனையை .... எப்படி அறிவாய் .....? & கவிப்புயல் இனியவன் தேனிலும் இனியது காதலே நீ தாவணியில் வரும் போது -தாவும் என் மனம் சேலையில் வரும் போது செத்தே போகிறேன்....!!! அதிகாலை சூரியன் வரும் போது பூக்கள் மலர்வதுபோல் நீ வரும்போது நான் மலர்கிறேன் ...!!! & கவிப்புயல் இனியவன்  தேனிலும் இனியது காதலே 

நீ சித்திரையில்

நீ மார்கழியில் தான் .... பிறந்தாயோ ...? உன்னை கண்டவுடன் .... உடம்பு சில்லென்கிறதே .....!!! நீ சித்திரையில் என்னை .... சந்தித்துவிடாதே .... கத்திரி வெயில்போல் .... சுட்டெரிதிடுவாய்.....!!! & கவிப்புயல் இனியவன் தேனிலும் இனியது காதலே

இதயத்தை எடுத்துவிடு ....!!!

நீ சிரித்த சின்ன சிரிப்பை .... தாங்கிக்கொள்ளாமல் ... தத்தளிக்கிறது .... இதயம் .... தத்து பிள்ளையாகவேணும் ... இதயத்தை எடுத்துவிடு  ....!!! & விழிகளால் வலிதந்தாய் காதல் சோகக்கவிதை கவிப்புயல் இனியவன்

விழிகளால் வலிதந்தாய்

காதலை தருவாய் .... என்றால் எத்தனை .... வலிகளையும் .... தந்து விடு .... இழவுகாத்த கிளி .... ஆக்கிவிடாதே ....!!! & விழிகளால் வலிதந்தாய் காதல் சோகக்கவிதை கவிப்புயல் இனியவன் 

நினைத்து கண்ணீர் விடுவாய் ....!!!

நீ புரிந்து கொள் .... பிரிந்து செல் .... இரண்டும் .... கலந்த கலவை .... காதலுக்கு ..... விஷம் .....!!! நீ என்னை புரியும் .... வரை நான் உனக்கு .... பொய்யாகவே .... இருக்கும் .... புரிந்தபின் இழந்த .... காலத்தை நினைத்து .... கண்ணீர் விடுவாய் ....!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

காதலில் கொடுமை ....!!!

பேசாமல் விட்டு விடலாம் ... பேசாமல் இருப்பதுபோல் .... நடிப்பதுதான் கடினம் ....!!! காதலிக்காமல் இருக்கலாம் ... காதலிப்பதுபோல் நடிப்பது .... காதலில் கொடுமை ....!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

காதலை செய்யாதீர் .....!!!

காதலிக்க உள்ளம் ... இருப்பவர்கள் மட்டும் .... காதலியுங்கள் .....!!! ஆயிரம் காரணத்தை .... காதலுக்கு ஆயுதமாய் .... ரணகனமாக்கும் .... காதலை செய்யாதீர் .....!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

மௌனத்தின் வலியை

உனக்கு  தெரியாது உன் மௌனத்தின் வலி உனக்கு காதல் உணா்த்தும்வரை....!!! சில வேளை நீ காதலித்தால் என்று முதல் உணர்த்துவேன் மௌனத்தின் வலியை துடித்தே இறந்துவிடுவாய்...!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

இனியவன் ஹைகூக்கள்

குடிசை வீட்டுக்குள் பிரகாச ஒளி . கட்டணமில்லாமல் கிடைகிறது . நிலவொளி *********** பிறந்த உடனேயே எச்சில் இலை பொறுக்கிறது தொட்டி குழந்தை *********** கோயில் தீர்த்த குளம் மாமிசம் உண்டவர்கள் இறங்க தடை குளத்துக்குள் மீன் *********** & ஹைக்கூ கவிதை  கவிப்புயல் இனியவன்

வலியை நீயும் சுமக்க வேண்டும் ...!!!

ஈரமான நாக்கில் எரிகிறது ... காதல் வார்த்தை .....!!! காதல் ஒரு பயிரிடல் பருவம் ... அறுவடை ... திருமணம் ....!!! உன் மனதில் ... வில்லனாக நான் ... தூக்கி எறிந்து விடாதே ... வலியை நீயும் .... சுமக்க வேண்டும் ...!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1023

எதற்காய் கண்ணில்...?

தென்றல் காற்றாய் .... வீசிய நீ எதற்காய் கண்ணில்... தூசியை கொட்டினாய் ...? காட்டாறு வெள்ளம் -நீ கொஞ்சம் இரக்கப்படு.... சிறு படகாக உன்னில் .... மிதக்கிறேன் ....!!! எனக்கு நீ மட்டுமே ... உனக்கு நான் ...? நான் மட்டுமா ....? ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1022

உனக்காக வாழ்ந்தேன்

காதலின் .. கல் வெட்டு .... திருமண அழைப்பிதழ் ....!!! காதல் ஒரு முக்கோணம் ..... எந்தப்பக்கம் .... உடைந்தாலும் .... குப்பைதொட்டி ....!!! உனக்காக வாழ்ந்தேன் .... காதல் இனித்தது .... உனக்காகவே வாழ்ந்தேன் .... உவர்க்கிறது ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1021

உனக்காக வாழ்ந்தேன்

காதலின் .. கல் வெட்டு .... திருமண அழைப்பிதழ் ....!!! காதல் ஒரு முக்கோணம் ..... எந்தப்பக்கம் .... உடைந்தாலும் .... குப்பைதொட்டி ....!!! உனக்காக வாழ்ந்தேன் .... காதல் இனித்தது .... உனக்காகவே வாழ்ந்தேன் .... உவர்க்கிறது ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1021

காதல் கடல் போன்றது

காதல் கடல் போன்றது .... உண்மைதான் ... கண்ணீர் உவர்க்கிறது ....!!! நீ பேசிய நாள் ... பௌணமி ... பேசிய வார்த்தை ... அமாவாசை .....!!! காதல் ... திருமண அழைப்பிதல் ... வரும் வரை தான் .... இன்பம் .....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1020

காதல் கருகிப்போகட்டும் ......!!!

நெருப்பாக நீ இரு .... நீராக நான் வந்து .... அணைக்கிறேன் ... காதல் .... கருகிப்போகட்டும் ......!!! என் புருவத்தில் .... ஊஞ்சல் ஆடியவலே .... இப்போ கண்ணில் ... இருந்து........ வெளியேறுகிறாள் ....!!! உச்ச கட்ட காதல் .... காட்சி முடிவுக்கு .... வந்தது ..... காட்சியை பார்ப்பவர் .... கண்களில் கண்ணீருடன் ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1019

உன் இதயத்தை காதல் பூவனமாக்க ....!!!

விடிய விடிய காதல் கதை பேசினாலும் காலையில் என்னை எழுப்புவது என்னவோ உன் கைப்பேசி அழைப்பு....!!! இரவு இரவாய் ..... எழுதிய கவிதைகள் அனைத்தும் .... விற்பனைக்கு அல்ல.. உன் இதயத்தை .... காதல் பூவனமாக்க ....!!! & கவிப்புயல் இனியவன் தேனிலும் இனியது காதலே காதல் கவிதை 04

நான் எரிந்துகொண்டிருப்பதை ....!!!

நீ ..... தந்த வலியால்... உடல் முழுவதும் ... மறுத்து விட்டது ... இதயம் கொஞ்சம் ஈரமாக .. உள்ளது நீ என்னை .. புரிந்து கொள்வாய் .... விரும்பிகொள்வாய் ...!!! உன் மெளனத்தை கலைத்து வெகு தூரம் சென்று.... திரும்பிப் பார்..... உன் நினைவுகளால் .... நெருப்பாய் நான் .. எரிந்துகொண்டிருப்பதை ....!!! + இதயம் வலிக்கும் கவிதை கவிப்புயல் இனியவன்

உன்னோடு பேசுவேன் ...!!!

உனக்காக காத்திருந்து ... களைத்து விட்டேன் .. உன்னை  இழக்க மாட்டேன் ... அடிக்கடி வருவாய் ... !!! நினைவிலும் கனவிலும் ... நிச்சயம் வருவாய் .... நினைவில் வரும் போது உன்னை ரசிப்பேன் .. கனவில் வரும் போது .... உன்னோடு பேசுவேன் ...!!! & கவிப்புயல் இனியவன் தேனிலும் இனியது காதலே காதல் கவிதை 03

முள்ளில் மலர்ந்த பூக்கள் 18

காதலில் பாத சுவடு  ..... எதிரும் புதிருமாக .... காணப்படுவது .... நம்மில் தான் ....!!! உன்னை நினைக்கும் ... போதேல்லாம் ... என் எழுதுகருவி .... தீப்பந்தமாகிறது .....!!! உனக்காக .... கல்லறையில் .... காத்திருக்கிறேன் .... என்றோ ஒரு நாள் .... நீயும் அங்கு வருவாய் ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K - A 0AH 1018

நான் சிக்கிய மீன் -நீ ...?

நீ  காதல் தூண்டில் .... நான்  சிக்கிய மீன் ......!!! இறைவன் ... அழகாக படைக்கும் .... போது அவஸ்தையையும் .... படைக்கிறான் ....!!! காதலை விட .... கண்ணீர் வலுவானது .... நிச்சயம் வரும் ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள்  கஸல் கவிதை  K இ K - A 0AG 1017

கண்ணீர் கவிதையாக

உன்னை காதலிக்க ..... எழுதிய கவிதைகள் ..... கண்ணீர் கவிதையாக ..... மாறி வருகிறது ....!!! மறந்துபோய் உன்னை .... மறந்து நினைத்துவிட்டேன் ... காதலில் மட்டும்தான் .... மறதி தொழிற்படாது .....!!! கண்ணுக்குள் பூவாக .... இருந்த -நீ முள்ளாய் ஏன் மாறினாய் ...? கண்ணீரை எதற்காக .... வரவழைக்கிறாய் ....? ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K - A 0AF 1016

விசித்திர உலகமாய் மாறிவிட்டது ....!!!

விசித்திர உலகமாய் மாறிவிட்டது ....!!! ------ தின பத்திரிகையை வாசித்து .... உலக நடப்பை விவாதித்து .... கொண்டிருந்த இருவரை பார்த்து .... தோளில் இருந்த துணியால் .... வாயை பொத்திய படி சிரித்த .... வழிப்போக்கன் ........!!! பேசத்தொடங்கினான் ....!!! விசித்திர உலகமையா ...... உண்மை உலகை ஒருமுறைசுற்றி..... வரமுதல் பொய் எட்டுமுறை சுற்றி ..... வந்து விடுகிறது - இதுதான் இன்றைய ..... உண்மையின் இன்றைய நிலை ....!!! இதனால் தான் ..... தீர்ப்புக்களும் தீர்வுகளும் ..... காலம் கடந்தே போய்விடுகிறது ..... உண்மையை நிரூபிக்க முன் .... பொய் உண்மையை கொஞ்சம் .... கொஞ்சமாய் தின்று விடுகிறது .......!!! உலகை ஏமாறுவதர்காக ..... இன்றைய சட்டங்களும் விதிகளும் ..... உண்மையும் பொய்யும் கலந்த .... சட்டத்தில் இயங்கி வருகின்றன ...... எல்லோருக்கும் நல்லவனாக ..... சட்டம் வேஷம் போடுகிறது ......!!! உலகில் ஒருபக்கம் அழிவு ..... மறுபக்கம் ஆனந்த கூத்து ...... இதற்கெல்லாம் காரணம் ...... சட்டம் "உண்மை பாதி" ..... " பொய் பாதி" ஆக இருப்பதே ..... வேதனை என்வென்றால் ..... உண்மையை