இடுகைகள்

நவம்பர் 24, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கடலுக்குள் செல்ல ஆசை.....!!!

கடலில் சுதந்திரமாக .. தூண்டிலிலும் வலையிலும் ... சிக்காத கடல் மீனுக்கு -வீட்டில் உள்ள கண்ணாடி பளிங்கு தொட்டிக்குள் குமிழியுடன் வரும் கற்றை சுவாசிக்க ஆசை ........!!! கண்ணாடி தொட்டிக்குள் இருக்கும் மீனுக்கோ சொகுசு சிறையில் இருந்து வெளியேறி சுதந்திரமாக திரியும் கடலுக்குள் செல்ல ஆசை.....!!! & முரண் பட்ட ஆசைகள் கவிப்புயல் இனியவன் 

தனிமை கொடுமையிலும் கொடுமை ...

தனிமை... அது ஒரு பெரும் வலி...! ஒரு கிடைக்கக்கூடாத சாபம்..! தவறுகளின் பிறப்பிடம்...! தண்டனையின் உறைவிடம்..! பிரிவுத்துயர் சொல்லித்தரும் கலாசாலை..! கவலைகளுக்கு தூபமிடும் பலிபீடம்..! வெறுமையின் வாசிகசாலை..! பசிப்பவனின் வெற்றுக்கோப்பை..! வாய் இருந்தும் நாவறுந்ததாய்.. கேள்செவியிருந்தும் செவிடானதாய்... எண்ணத்தோன்றும்  கொடிய நிலை ....!!! உறவுகள் பிரிந்து.... தனிமையின் பிடியில்....... கோரமாய் சிக்கிக்கொண்டவன் ...... மனநிலை…!! தனிமை கொடுமையிலும் கொடுமை ... & கவிப்புயல் இனியவன் சமுதாய கவிதை 

பிணக்கு இல்லாமல் பிரிவதே ...!

நானோ ..... பூவின் மென்மையில் .. இருக்கிறேன் ....! நீயோ ...... வண்டின் குணத்தில் ....... இருக்கிறாய் ...! காதல் என்றால் ...... ஒன்று பட்டு வாழவேண்டும் ..! இல்லையேல் ....? நல்ல காதலுக்கு அழகு ...! பிணக்கு இல்லாமல் பிரிவதே ...! & கவிப்புயல் இனியவன் சின்ன சின்ன கிறுக்கள்

எத்தனை ஜென்மாவும் பிறப்பெடுப்பேன் ..........!!!

உன்னை காதலிக்கும் ..... பாக்கியத்தை நான் இந்த .... ஜென்மத்தில் பெறவில்லையடா .... எனக்காக அடுத்த ஜென்மம் .... பிறந்துவிடு உன்னை .... காதல் செய்தே ஆகவேண்டும் .....!!! உன் கவிதைக்காக .... எத்தனை ஜென்மாவும் பிறப்பெடுப்பேன் ..........!!! & கவிப்புயல் இனியவன் சின்ன சின்ன கிறுக்கள்

இறந்து விடு என்று சொல்...!!

இறந்து விடு என்று சொல்...!! மறுபடியும் பிறந்து வருவேன்.. மறந்து விடு என்று...!!! சொல்லாதே ஒரு நொடி கூட இருந்துவிடமாட்டேன் ...!!! & கவிப்புயல் இனியவன் சின்ன சின்ன கிறுக்கள்

நட்பும் காதலும் கவிதை

இறைவா எனக்கு ஒரு வரம் தா ..? காதல் உணர்வை என்னில் இருந்து தயவு செய்து எடுத்துவிடு ....! அவனை உயிர் நண்பனாகவோ உயிர் காலம் வரை நினைக்க .......... விரும்புகிறேன் இடைக்கிடையே பாழாய்ப்போன மனம் காதலையும் எட்டிப்பார்க்கிறது ....! நட்பு ஒன்றில் விட்டுக்கொடுப்பு அதிகம்...... அவன் விட்டுக்கொடுத்துவிட்டான் -காதலை இறைவா ....... என் காதல் நரம்பை துண்டித்து விடு ...! & கவிப்புயல் இனியவன் நட்பும் காதலும் கவிதை