இடுகைகள்

மார்ச் 15, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவிதையால் காதல் செய்கிறேன்

உலகின் ஒவ்வொரு உயிரினதுக்கும்... ஜோடி படைக்கபடுகிறது.... எந்த மூலையில் இருந்தாலும் .... இணைந்தே தீரும் -நீயும் இணையாமலாவிடுவாய்....? சுய புத்தி இருந்து பயனில்லை காதல் புத்தி வரவேண்டும் ... காதல் செய்வதற்கு ....! + கவிதையால் காதல் செய்கிறேன் 22 கவிப்புயல் இனியவன் + பிரபஞ்சமே .... எனக்கு ஒரு சக்தி கொடு .... பார்க்கும் பொருளெல்லாம் .... என்னவளாக தோன்றவை .... கேட்கும் ஓசையெல்லாம் .... என்னவளின் குரலாய் ... இருக்கவேண்டும் .....!!! தூக்கம் தொலையவேண்டும் .... தூக்கத்தில் கனவாய் வரவேண்டும் .... நினைவுகளால் இறக்கவேண்டும் .... நினைவுகளேவாழவைகவேண்டும் .....!!! + கவிதையால் காதல் செய்கிறேன் 23 கவிப்புயல் இனியவன்

உனக்காக எழுதும் உயிர் மடல் ........!!!

இதய மன்மதன்  இதய கோயில் வீதி  இதயத்துடிப்பு ஒழுங்கை  இதய நகர் -02 என்னுயிரே உனக்காக எழுதும் உயிர் மடல் ........!!! நீ என்னிடம் நலமாகவே இருகிறாய் , இருப்பாய் உன்னை நான் இதயத்தில் வைத்திருப்பதால் நீ வேறு நான் வேறாக எப்பவுமே இருக்க முடியாது . என் இதயம் துடிப்பதே என் இதயத்தில் இருந்து நீ விடும் மூச்சு காற்றால் தான் என்பதை நான் கூறித்தான் நீ புரியவேண்டும் என்பதில்லை ......!!! என்னவளே ....!!! உன்னை பிரிந்து சிலமணிநேரம் வாழ்வது பிராணவாயு இல்லாத இடத்தில் நான் வாழ்வதற்கு நிகரானது உன் நினைவு என்னை வதைக்கும் போதெலாம் எனக்கு ஒன்றே ஒன்று தோன்றும் உனக்கு கடிதம் எழுதுவதே . இடை இடையே கவிதை போல் ஒன்றை கிறுக்குவேன் . அதை நீ கவிதையாக  வாசித்துகொள் .......!!! ஒரு  நிமிடமேனும் உன்னை .... நினைக்கவில்லை .... என்றால் அந்த மணிநேரம் ... நான் இறந்து பிறந்தேன் .... என்பதுதான் கருத்து .....!!! உன்னிடம் இருந்து வரும் கடிதம் வெறும் காகிதம் இல்லை. உன் இதயத்தின் உணர்வுகள் என்பதை  அறிவேன் . காலம் தாழ்த்தாமல் எனக்கு ஒரு கடிதம் எழுது உயிரே .....!!! இப்படிக்கு  இதயத்தோடு காத்திருக்கும்  இதய மன்மதன்