இடுகைகள்

அக்டோபர் 21, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தந்தையின் அறிவுரைகளை ....

உயிருடன் வாழும் ..... காலத்தில் தந்தையின் ..... அறிவுரைகளை ..... செவிசாய்க்க மனம் .... விரும்புவதில்லை ..... கட்டிளமை பருவம் ...... தன்முனைப்போடு ...... பேசும் ,கருதும்.......!!! தந்தையின் மறைவுக்கு ..... பின்னர் அவரின் அறிவுரை ..... மனதை கொல்லும்...... வாழ்க்கையின் ஒவ்வொரு ..... துன்பமும் வரும்போது ..... தந்தையின் அறிவுரைகளை .... ஞான கூற்றாய் தெரியும் ......!!! & குடுப்ப கவிதைகள் தந்தை  கவிதை கவிப்புயல் இனியவன்

கவிப்புயலின் குடும்ப கவிதைகள்

பிஞ்சு விரலை பஞ்சு...... போல் நினைத்து மெல்ல ..... மெல்ல அமர்த்தி சுகம் ..... காணும் உயிரே .........!!! மார்பிலே ...... போட்டுக் கொண்டே... மனம் நிறைந்து மகிழ்ந்து மனத்தால் வளர்த்த உயிரே ....!!! மளமளவென வளர்ந்தேன் .. மணமுடித்து வைத்தாள்... நான் விரும்பிய உயிரை..!! அன்னை அவள் கண் மூடியதால்... அனாதையானேன் அன்பென்னும் உறவிலிருந்து ...!!! உள்ளத்தால்  சொல்லுகிறேன்... தாயை நினைத்து கவிதை எழுதும் எந்த கவிஞனும் ...... கண்ணீரை சிந்தாமல் ....... எழுதவே முடியாது ........!!! & குடுப்ப கவிதைகள் அம்மா கவிதை கவிப்புயல் இனியவன்