இடுகைகள்

ஏப்ரல் 4, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என் இதயம் இறந்து விட்டது

நான் உன்னை ஏமாற்றினால் ... என்ன செய்வாய் ... என்று விளையாட்டுக்கு .... கேட்டபோதே .... என் இதயம் இறந்து விட்டது ....!!! + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை

மீண்டும் காதலிப்போம் "

உனக்கு ....  முதல் நான் ...  இறந்தாலோ ....  எனக்கு....  முதல் - நீ  இறந்தாலோ ....  நம் ....  கல்லறையின் ...  வாசகம் - " மீண்டும்  காதலிப்போம் " ....  அடுத்த ஜென்மத்தில் ...!!!  +  கே இனியவன்  வலிக்கும் இதயத்தின் கவிதை

அழகில் மயங்கி விடாதே

வேண்டாமடி ... என்னை காதலித்து விடாதே .... நான் படும் அவஸ்தையை .... நீயும் படாதே ....!!! இதயத்தின் காயங்கள் உள்ளேயே இருப்பதால் .... வெளியே தோன்றும் .... அழகில் மயங்கி விடாதே ...!!! + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை

கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை

ஒவ்வொரு காதலனும் .... முத்தமுட முன்னர் ... விரும்புவது .... காதலியின் தோளில்... சாய்வதற்கே .... ஏன் என்று கேட்டுப்பாருங்கள் .... யாராலும் காரணம் .... சொல்லிவிட முடியாது ....!!! + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை

கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

கரு சிதைவை காட்டிலும் .... எண்ண சிதைவே கொடூரமானது .... வளர்ந்த மனிதனையே .... கொல்கிறது.....!!! & கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் கே இனியவன் 

கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

காதலை கேட்டேன் ... கண்ணீரை தந்தாள் .... அதிர்ச்சி ஒன்றுமில்லை .... ஆண்டவனை பார்க்க .... மனமுருகித்தானே .... வேண்டினார்கள்....!!! & கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன்

பூவின் இதழ்களால் ஆனது ...!!!

அவள் இமைகள் முடிகளால் ஆனதில்லை .... முற்களால் ஆனது ....!!! அவள் பார்வை அக்கினி கொழுந்துக்கு ... சமனானது -ஆனால் ... என்னை பார்க்கும்போது .... பூவின் இதழ்களால் ஆனது ...!!! ^ முள்ளும் ஒரு நாள் மலரும் காதல் கவிதை கவிப்புயல் இனியவன்

ஒரு மரணம் மறு ஜனனம்

-------------------------------- கடல் வழிக்கால்வாய் -------------------------------- .........ஒரு மரணம் மறு ஜனனம்  ....... ^^^^^^^^^^^^^^^^^ மழைத்துளி மரணமே .... பயிரின் ஜனனம் .... பயிரின் மரணமே .... வாழ்க்கை ஜனனம் ....!!! பூவின் மரணமே .... காயின் ஜனனம் .... காயின் மரணமே .... கனியின் ஜனனம் ....!!! சூரியனின் மரணமே .... சந்திரனின் ஜனனம் .... சந்திரனின் மரணமே .... பகலின் ஜனனம் ....!!! பழமையின் மரணமே .... நவீனத்தின் ஜனனம் .... நவீனத்தின் மரணமே .... உலக அழிவின் ஜனனம் ....!!! அறியாமையின் மரணமே ..... அகந்தையின் ஜனனம் ... அகந்தையின் மரணமே ..... ஞானத்தின் ஜனனம் .....!!! & கடல் வழிக்கால்வாய் ஆன்மீக கவிதை கவிப்புயல் இனியவன்

செருப்பின் வாழ்கை

ஜோடியாக இருந்தாலும் வீட்டுக்கு வெளியே ஒற்றையாக இருந்தாலோ தெருவில் வாழ்கை செருப்பின் வாழ்கை @ கவிநாட்டியரசர் கே இனியவன் ஹைக்கூ கவிதை

ஹைக்கூகவிதை -ஒற்றை செருப்பு

ஹைக்கூகவிதை  ---- மிதிபட்டது போதும்  அடிமை தனத்திலிருந்து விடுதலை  ஒற்றை செருப்பு  @ ஒரே இனத்துக்குள்  கலப்பு திருமணம் செய்ய முடியாத அவலம்  ஒற்றை செருப்பு  @ முதுமை வாழ்க்கை ஒருவர் பிரிந்தால் மற்றவர் அநாதை  ஒற்றை செருப்பு  @ பிறப்பில் இரட்டை பிறவிகள்  கவனிப்பார் அற்று கிடக்கிறேன் தெருவில்  ஒற்றை செருப்பு @ கவிநாட்டியரசர் கே இனியவன் ஹைக்கூ கவிதை

ஹைக்கூகவிதை

ஹைக்கூகவிதை ---- மிதிபட்டது போதும் அடிமை தனத்திலிருந்து விடுதலை ஒற்றை செருப்பு @ கவிநாட்டியரசர் கே இனியவன்