இடுகைகள்

செப்டம்பர் 24, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அகராதி நீ என் அகராதி

அகராதி நீ என் அகராதி ..... அகரம் முதல் அந்தம் வரை..... அங்குலமாய் வர்ணிக்கும் அகராதிநீ..... அழகு தமிழ் வார்த்தைகளை...... அடுக்கடுக்காய் உனக்காக தொகுப்பேன்....!!! அகோராத்திரமும் உன்னை நினைத்து..... அல்லோலகல்லோலப்படுகிறேன்...... அணைக்கவும் முடியவில்லை....... அகலவும் முடியவில்லை ........ அகம் படும் பாட்டை எப்போ அறிவாய்......? அழகு தேவதையே அகத்தரசியே & அகராதி சொற்களில் கவிதை கவிப்புயல் இனியவன் மேலும் தொடரும்

என் விழி கொண்டு ....!!!

உன்னை .... சிற்பமாக .... செதுக்கியுள்ளேன் ..... இதயத்தில் ..... உளி கொண்டு அல்ல..... என் விழி கொண்டு ....!!! டிக் டிக் டிக் .. துடிக்க மட்டும் தெரிந்த என் இதயத்திற்கு,-இப்போ திக் திக் திக் என்று .... தவிக்கவும் கற்றுத் தந்தது உன் அன்பு...!!! & சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன்

சின்ன கிறுக்கல்கள்

உன்னை.... தெரியாதவர்களுக்கு ...... நீ கொடுப்பது ....... நினைவு பரிசு .. உன்னை புரிந்த எனக்கு .... உன் நினைவே பரிசு... & சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன் ^^^ உன்னை ..... பிரிய சொல்கிறாயே ..... என்னையா ......? உயிரையா ........? உன்னை பிரிய ..... நொடிபோதும்....... உன் நினைவுகளை ..... பிரிய எத்தனை ..... ஜென்மமும் போதாது ....!!! & சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன்

கதைக்கும் கவிதைக்கும் காதல்

அவன் -இனிமை -------- எப்படியாவது அவளின் பெயரை கண்டறிய துடித்தான் .இனிமை தண்ணி குடிக்க போவதுபோல் எல்லா இடத்திலும் அவளை தேடினான் . அவள் வேண்டுமென்றே கதவு திரைக்குப்பின்னால் நின்றாள் .தேடிப்பார்க்க இனிமை அவளை காணாமல் சுவாதிடத்துடன் .வரும்போது . வின்னியாவின் அம்மா குரல் ஒலித்தது .......!!! வின்னியா ...வின்னியா ....எங்கம்மா இருக்கிற .....? வின்னி வின்னி ....என்று கூப்பிட்டபோது  திரைக்குப்பின்னால் இருந்து வந்தாள் வின்னியா ...... ஓ பெயர் வின்னியாவா ஓகே ஓகே என்று அவள் காதில் மட்டும் கேட்கும் படி சொல்லிவிட்டு தெரு முனைக்கு வந்தான் நண்பர்களுடன் தெருவை அலங்காரம் செய்வதற்கு ......இன்னும் விடிவதற்கு ஒரு சில மணி நேரமே இருந்தது . ஒரு சின்ன தூக்கம் கூட ஒருவரும் தூங்கவில்லை . விடிந்தால்  கல்யாணம் . தூரத்தில் இருந்து வின்னியா சைகை கொடுத்தாள். தூங்குங்க என்று பதில் சொல்ல முடியாமல் இனிமை தானும் சைகையால் நீ முதல் தூங்கு என்பதுபோல் சொன்னான் . தலையை அசைத்தபடி தூங்க சென்றாள் - வின்னியா அவள் - வின்னியா ------ தூக்கம் என்பது கண் ...... மூடுவது மட்டுமல்ல ..... மனமும் மூடவேண்டும் ..... இத்தன

கவலையில்லை ....!!!

கடற்கரையில் ...... பேசியதுபோல் ஆகிவிடாது .... நம் காதல் ...... தொட்டு தொட்டு ..... சென்று விடுகிறாய் .......!!! எப்படியும் வாழலாம் ..... என்றால் உன்னை ..... காதலிக்க தேவையில்லை ...... உன்னை காதலித்ததால் ..... இப்படியும் வாழுகிறேன் .... என்பதிலும் கவலையில்லை ....!!! ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

வலிக்கும் இதயத்தின் கவிதை

இதயம் இருட்டாக ..... இருந்தாலும் காதல் ..... வெளிச்சமாக்கி ..... விடுகிறது ........!!! இருட்டறையில்....... தவிக்கும் குழந்தை .... வீறிட்டு அழுவதுபோல்...... நானும் அழுகிறேன் ..... இதய விளக்கை ..... நூற்றத்துக்காக ......!!! துடித்து கொண்டு .... இருந்த என் இதயத்தை .... துடி துடிக்க வைத்துவிட்டாய் .....!!! &  ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்