இடுகைகள்

அக்டோபர் 24, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உலகம் அழிய வாய்பேயில்லை ....!!!

இதயம்  .... இறக்க நேர்ந்தாலும்... அதில் இறவா வரம்பெற்றது.... உன் நினைவுகள் மட்டும்தான்... கண்மணியே...!!! உலகம் ஒருநாள் .... அழியும் என்கிறார்கள் ... எனக்கு நம்பிக்கைஇல்லை .... காதல் இருக்குவரை உலகம் .... அழிய வாய்பேயில்லை ....!!! + கே இனியவன் காதல் கவிதைகள்

உதறி விட்டு சென்றுவிட்டாள்...!!!

அலைகளை பார்த்தேன் ... காதலின் தத்துவம் வந்தது .... காதலில் விழுவது பெரிதல்ல ... விழுந்தால் உடனே எழவும் ... கற்று தந்தது ....!!! அவள் உதறிவிட்டு சென்றாள்.... என்று சொல்லமாட்டேன் .... காதலை தந்துவிட்டு -கையை உதறி விட்டு சென்றுவிட்டாள்...!!! + கே இனியவன் காதல் சோக கவிதை

பறிக்க முடியாத பரிசு ....!!!

பிரிவு நமக்கு தவிர்க்கவும் .... மறக்கவும்  முடியாத வலி… நினைவு என்பது யாராலும் என்னிடமிருந்து உன்னால் .... பறிக்க முடியாத பரிசு ....!!! நீ .... எனக்காக மூச்சு விடும்போது .... நான் ..... உனக்காக இறப்பதில் .... என்ன தப்பு ...? + கே இனியவன் காதல் கவிதைகள்

காலத்தாலும் மறக்க முடியாது ....!!!

உன்  உள்ளம் நேசிப்பதை மறந்து விடலாம் ஆனால் உன்னை நேசித்த உள்ளத்தை மட்டும் உன்னால் மறக்க முடியாது ....!!! நீ  பேசிய வார்த்தைகளை -நீ  மறந்துவிடலாம் .... நாம் வாழ்ந்த காதலை .... காலத்தாலும் மறக்க முடியாது ....!!! + கே இனியவன்  காதல் கவிதைகள்

காதல் தத்துவ கவிதை

ஞாபக  சக்தி குறைவானவர்கள் .... காதலில் பொய்சொல்ல .... முயற்சிக்க கூட்டாது .... அதுவே சந்தேகமாக .... உருப்பெற்று விடும் ....!!! பெற்றோர் காதலித்து .... திருமணம் செய்தாலும் ... பிள்ளைகளின் காதலுக்கு .... தடையாகவே இருப்பார்கள்  இல்லையேல் விருப்பம் .... இன்றி ஏற்கிறார்கள் ....!!! காதலின் பின்னால் ஓடாதீர் .... காதல் இல்லாமலும் வாழாதீர் .... காதல் பேச்சை கூட்டி .... மூச்சை நிறுத்தும் ,,,,,!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞர்  காதல் தத்துவ கவிதை 

காதலிக்கதெரியாத உள்ளம்

காதல் மலர் போல் .... காலையில் அழகாய் .... மாலையில் வாடிவிடும் .... என்றாலும் காதல் ... அழகும் மென்மையும் ....!!! மரணத்தில் கூட நாம் இணைய முடியாது நீ உள்ளூர் மயானத்தில் ... நான் வெளியூர் மயானத்தில் ....!!! உன்னைப்போல் காதலிக்க ... தெரியாத உள்ளமும் ஒரு .... அங்கவீனம் தான் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 875

நம் பிரிவு

ஓராயிரம்... நினைவுகளுடன் .... ஆழமான  துயரத்துடன்... நிகழ்ந்து விட்டது ... நம் பிரிவு......!!! நீ என்னை மறந்து போய் நினைத்திருக்கலாம் இப்போதான் உனக்கு ... காதல் புரிந்திருக்கும் ....!!! ஒப்பாரி என்றால் என்ன ...? இப்போது புரிந்தது எனக்கு ... உன் ஒவ்வொரு செயலும் ... என் காதலுக்கு ஒப்பாரிதான் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 874

பலஜென்மம் காதலிப்பாய்

உன்னை காதலித்து ... நானும் கற்றுகொண்டேன் .... எப்படி வலிக்காமல் .... மறப்பதென்று ....!!! உன்னை நினைக்காமல் .... கவிதை எழுத முயற்சித்தேன் ... வெற்றிபெற்றது -நீ இக்கரைக்கு அக்கரை பச்சை - நீ அடிக்கடி இப்படிதான் ,,, ஏமாற்றுகிறாய் ,,,,, ஒருமுறை என்னை காதலித்துப்பார் ,,,, பலஜென்மம் என்னை ... காதலிப்பாய் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 873

நீடூடி காதல் வாழ்க

நீ என் மூச்சாக இருந்த .... காலமெல்லாம் நான் .... உன் உயிராக இருந்தேன் .... நீ மூச்சை நிறுத்தினாய் ... காதல் இறந்தது ....!!! இதயத்தில் ரோஜாவை .... வளரவிடாமல் -எதற்கு ..? முள்ளை வளர்கிறாய் ....? நீடூடி வாழ்க .... வாழ்த்துவோர் உள்ளார் ... நீடூடி காதல் வாழ்க ... வாழ்த்துவோர் யாரும் இல்லை ...!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 872

கே இனியவன் காதல் கவிதை

படம்

ஆதரவின்றி அலைகிறேன்

படம்

காதல் சுமைகளின் சுமை

படம்

எப்போது ஓயும் காதல்

படம்