இடுகைகள்

டிசம்பர் 22, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதல் பிரிவுக்கு காரணம்

நாணயத்துக்கு இரு பக்கம் தலை , பூ புத்தகத்துக்கு இரு பண்பு நல்லது, கேட்டது இதயத்துக்கு இரு அறை வலது ,இடது காதலுக்கு இருவர் நானும் நீயும் காதல் பிரிவுக்கு காரணம் அதிக எதிர்பார்க்கை புரிந்துணர்விண்மை....!!!

நான் தோற்றேன் ....!!!

பல சோதனைகள் பல இடர்கள் அத்தனைக்கும் தீர்வு கண்டேன் ....!!! நீ ஏன் என்னை பிரிந்தாய் என்று இன்றுவரை தீர்வு காணவில்லை ...!!! எல்லோரும் வெற்றி பெற்றால் காதல் எப்படி வெல்லும் ...? அதனால் நான் தோற்றேன் ....!!!

புரியுமா என் துடிப்பு ,,,,!!!

வரிகள் கண்ணீர் விட விட காதல் கவிதை தோல்வியடையும்...!!! வரிகள் இனிக்க இனிக்க காதல் கவிதை இனிமையாகும் ...!!! நினைவுகளுக்கு தெரியும் உணர்வு -உன் இதயத்துக்கு புரியுமா என் துடிப்பு ,,,,!!!

காதல் கொண்டதற்கு ....!!!

நேசம் வைத்த உறவுகள் எல்லாம் உன்னை காதலித்த வேளை பிரிந்து செல்ல காதல் என்னும் மாயையில் விழுந்தேன் ....!!! நீயும் பிரிந்தபின் தனிமை என்னும்  சிறையில் தவிக்கிறேன் வேண்டும் எனக்கு மாயையால் காதல் கொண்டதற்கு ....!!!

காதலும் கவிதையும்

நான் உனக்கு தந்த கவிதைகளையெல்லாம் நீ காகித கப்பல் செய்து விளையாடி விட்டாய் ....!!! நீ எனக்கு தந்த கவிதை உன் பெயர் தான் அதை கொண்டே நான் ஒரு அகராதி அமைத்து விட்டேன் ...!!! காதலும் கவிதையும் யார் யாருக்கு என்று புரிந்து கொள்ள வேண்டும் ....!!!

மறக்க நினைக்கிறேன்

மறக்க நினைக்கிறேன் பலவற்றை ...!!! நினைக்க விரும்புகிறேன் சிலவற்றை....!!! மறக்கவே முடியாதவை நினைக்கவே முடிந்தவை ஒன்றே ஒன்றுதான் நட்பு ....!!!

உயிர் தோழன் நீ

தோள் கொடுக்க உயிர் தோழன் நீ இருக்கும் வரை தோல்விகள் ஆயிரம் ஆயிரம் தோன்றினாலும் துவண்டு விழேன் உன் சுட்டு விரல் எனக்கு சுட்டிக்காட்டும் வெற்றியை ....!!!

புரியதெரியவில்லை...!!!

இத்தனை நாள் பழகி விட்டு உன்னை காதலிக்க வில்லை நட்போடுதான் பழகினேன் என்கிறாயே உனக்கு காதலையும் மதிக்க தெரியவில்லை நட்பையும் புரியதெரியவில்லை...!!!

இதுதான் நட்படா ....!!!

அவன் இவனிடம் என்னை பேசியபோதுதான் உணர்ந்தேன் அவன் அவனுக்காக வாழவில்லை எனக்காக வாழுகிறான் வாழ்ந்திருக்கிறான் இதுதான் நட்படா ....!!!

நட்பு நட்பு ...!!!

முகம் பார்ப்பதில்லை முகநூலில் பேசுவோம் ஊர் பேர் தெரியாது உண்மையோ பொய்யோ தெரியாது என்றாலும் ஊற்றெடுக்கும் கிணறுபோல் ஊறிக்கொண்டே இருக்கும் ஒரே விடயம் நட்பு நட்பு ...!!!

வெந்து துடிக்கும் எண்ணங்களுடன் வாழ்கிறேன் ....!!!

வாழ்க்கையில்...  நடந்து வந்தபாதையை   திரும்பி பார்க்கிறேன்  வாழ்ந்த காலத்தில்  வாசமும் இருந்தன  துர் நாற்றமும் இருந்தன  வலிகளும் இருந்தன  துடிப்புகளும் இருந்தன ....!!! பாசத்தோடு உறவாடிய உறவுகள்....  பாசத்தை ஒரு முகமூடியாய்  அணிந்து உறவாடிய உறவுகள்.....  தோள் கொடுக்கும் நண்பர்கள்....  தோன்றியதை சுருட்டிய நண்பர்கள் ...!!! கண்ட இடத்திலே கைகுலுக்கி  இவன் ஏதும் உதவி கேட்டிடகூடாது  என்று எங்கும் உறவுகள் ..... கஷ்டத்தில் கை கொடுக்கும் உண்மை உறவுகள்  இப்படியே ஏராளம்.....! பிறந்த உடன் பிறப்புக்களை  சொல்லாமல் விடுவேனா ..? பேசி திருமணம் செய்த அக்கா  குடும்பம் பாசத்தில் இமயம்  பாசத்தின் இமயத்தில் கொடுத்த  சீர்வரிசை .....!!! ஓடிப்போய் திருமணம் செய்த  தங்கையின் குடும்பத்தில்  பாசத்தை காணோம் ... கொடுத்தால் தானே பாசம் வர ...!!! தான் மட்டும் வாழ்க்கையில் உயர்ந்திட நினைக்கும் தம்பியின்  குடும்பம் ....!!! தங்களை விட உயர்ந்திட  கூடாது  என்பதில் மிக கவனமாக இருக்கும்  அண்ணியின் குடும்பம் .... சற்று உயந்தால் என் மனைவியின்  குறையை குத்திக்காட்டும் அண்ணி  இப்படியே ஏராளம்.......!!! இத்தனையை பார்த்துகொண்டு  பே

துடித்தே இறந்துவிடுவாய்...!!!

இன்று தெரியாது உன் மௌனத்தின் வலி உனக்கு காதல் உணா்த்தும்வரை காத்திருப்பேன் சில வேளை நீ காதலித்தால் என்று முதல் உணர்த்துவேன் என் மௌன மொழி துடித்தே இறந்துவிடுவாய்...!!!

அதுதான் என் துணை ....!!!

உன்னை கண்டவுடன் என்னை மறந்தேன் என்பது பழையவார்த்தை உன்னை கண்டவுடன் என் கடந்த காலத்தை மறந்தேன் என்பது புதிய வார்த்தை ....!!! எவருடன் பேசும் போது மீண்டும் மீண்டும் பேச தூண்டுதோ அவர் எனக்கான -ஞானி எவளை  கண்டவுடன் என் கடந்த காலத்தை மறந்தேனோ அதுதான் என் துணை ....!!!

உறவுகளை புரிந்து கொள்....!!!

சிரிக்கும் போது கூட்டத்துடன் சேர்ந்து சிரி அழும்போது தனியாக இருந்து அழு -அய்யா கண்ணதாசன் சொன்ன தத்துவம் இது ....!!! என் சிந்தனை ...!!! சிரித்தபோது கூடி இருந்த உறவுகள் அழும் போது தனிமையாக்கி சென்று விட்டன ...!!! உணர்ந்தேன் இப்போ ....? சிரிக்கும் போது உறவுகளை ரசித்துக்கொள் அழும்போது உறவுகளை புரிந்து கொள்....!!!

நான் வெளிமூச்சானேன் ....!!!

என் முகத்தை தொலைத்தேன் உன் முகம் வருமென்று என் முகமே இருந்தது ....!!! ஞாபகங்களுக்கு ஒரு வீடு கட்டினால் அதில் நீ ஒரு ஒட்டறை தட்டினாலும் வருவாய் ....!!! என் உள் மூச்சு நீ அதனால் தான் வாழுகிறேன் உனக்கு நான் வெளிமூச்சானேன் ....!!! கஸல் 606

இருப்பேன் - காதலோடு

உன்னை கணட நாள் என் இறந்த நாள் உன்னை பிரிந்த நாள் உனக்கு பிறந்தநாள் ....!!! காதல் எல்லோர் மனதில் இருக்கும் அது  போது விதி இதையேன் புரியவில்லை- நீ நான் இயற்கை காற்று நீ இருக்கும் வரை நானும் உன்னோடு இருப்பேன் - காதலோடு கஸல் 607

கண்ணீரைப்போல்

என் பெயரின் ஒவ்வொரு எழுத்தும் நீ எழுத்து பிழை இல்லாமல் இருந்தால் ....!!! கண்ணீரைப்போல் திடீரென வருகிறாய் வழிந்தே போய் விடுகிறாய் ...!!! பகலில் இருக்கும் நட்சத்திரம் போல் இருக்கிறது உன் ஞாபகம் .....!!! கஸல் 608

நீ சொல்வதெல்லாம் தாங்கும் ....!!!

உன்னை கண்டவுடன் நான் களவு போன பொருளானேன் ....!!! காதல் தோல்வியால் விஷம் அருந்தினேன் அதிலும் நீ நிறுத்திவிட்டேன் விஷ குடிப்பை ...!!! இதயம் ஒரு இரும்பென்றால் நீ சொல்வதெல்லாம் தாங்கும் ....!!! கஸல் 609

மருந்தும் நீதான் ...!!!

நீ பிரிந்தாய் காதல் இலைதான் உதிர்ந்ததே தவிர காதல் மரமல்ல ....!!! உன் நினைவுகளை கனவு வலையாய் பின்னி வைத்திருக்கிறேன் நீ சிக்காமலா விடுவாய் ...!!! உன் மௌனம் தான் என் இதயத்தில் காயத்தை ஏற்படுத்தியது மருந்தும் நீதான் ...!!! கஸல் 610