இடுகைகள்

மே 6, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என் இதயம் மறந்து விட்டது ...!!!

உன்னை விட அழகானவர்... இவ்வுலகில்   இருந்தும் .... உன்னையே விரும்புகிறது .. இந்த பாழாய் போன மனசு ...!!! எனக்கு காதல் செய்யத்தான் தெரியும் உயிரே ..... எப்படி மறப்பது என்பதை என் இதயம் மறந்து விட்டது ...!!!

கே இனியவனின் கஸல் - 800 வது பதிவு

நான்  எழுதிய கவிதையை ... நீ ஒரு நிமிட கனவாக்கி .... கலைத்து விட்டாய் ....!!! நீ  என்னை காதலிக்கிறாய் ... திமிர்பிடித்து அலைந்தேன் ... தீக்குச்சியின் கதையானேன் ... உன் திருமணத்தால் ....!!! பயணத்தில் உன்னை .. கண்டேன் காதலித்தேன் ... பயணம் முடிந்ததுபோல் ... காதலும் முடிந்தது .....!!! இறைவா ... எனக்கு மரணத்தை கொடு ... இல்லையேல் அவளின் ... கனவையாவது கொடு ... வதைக்காதே .....!!! நீ  சொல்ல கூடாத ஒரு சொல் ... நான் உன்னிடம் கேட்ககூடாத ... ஒரு சொல் - காதல்  இருவரும் பிரிந்தபோது .... புரிந்தது .....!!! + கே இனியவனின் கஸல் தொடர்கிறது காதல் கவிதை  800 வது பதிவு

சாம்பலாய் போய்விட்டது ....!!!

உன் கண்ணீரில் ... வெந்து துடிக்கும் ... காதல் வண்டு நான் ... அதுவும் சுகம் தான் ...!!! ஆற்றில் நிழலாய் ... விழுந்த நிலவை .... காதல் என்று நினைத்தது ... ஆற்றின் தப்புதானே ...!!! புகை போல் ஊரில் .. பரவிய நம் காதல் ... நெருப்பாய் எரிந்து ... சாம்பலாய் போய்விட்டது ....!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;799

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை

உன்னை பூ என்று ... வண்டாக சுற்றி வந்தேன் ... நீ கடதாசி பூ ....!!! கனவுலகில் வாழும் ஜீவன் ... ஒரே ஜீவன் நான் .. அதை குழப்பி விடாதே ...!!! நீ வீசிய காதல் ... வலையில் சிக்கி துடிக்கும் ... காதல் மீன் நான் ... நீ கருவாடு போடுகிறாய் ...!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;798

நம் காதல் இடைவெளி

மகுடிக்கு தான் பாம்பு ... படமெடுத்து ஆடும் ... நீ பாம்பாய் இருந்து .. மகுடியை ஆடவைகிறாய்....!!! உன் நுனிநாக்கில் காதல் ... என் அடிமனதில் காதல் ... நம் காதல் இடைவெளி .... இதுதான் ....!!! உன் மௌனத்தை... காதலென்று தப்பாய் ... நினைத்துவிட்டேன் .... கண்ணீரால் கவிதை ... வடிகிறது .....!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;797

நீ அறுத்து எறிகிறாயே ....!!!

உன் நினைவுகளை ... எண்ண கயிற்றால் ... கட்டுகிறேன் - நீ அறுத்து எறிகிறாயே ....!!! காதல் கப்பலில் ... வந்து விட்டு நீ மட்டும் நீந்தி சென்று ... விட்டாயே ....!!! நீ காதல் சூரியன் காலை உதயமாய் ... மாலை அஸ்தமனமாய் ....!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;796