புதன், 12 நவம்பர், 2014

முதல் காதல் - முதல் காதலிஎத்தனை 
காலம் கடந்தாலும் ..... 
ஆயிரம் ஆயிரம் உறவுகள் ... 
அழகழகாக தோன்றினாலும் ... 
சிதையாத சிற்பம் -நீ ..! 
என் உயிரே உன் நினைவுகள் ... 
காலத்தால் அழியாத ... 
காவியமடி என் வாழ்வில்-நீ ....!!! 

உன் முதல் பார்வையே .... 
என்னை முட்டாள் ஆக்கியதை ... 
இன்றுவரை உணர்கிறேன் ... 
உன்னை நினைத்து சிரிக்கிறேன் ... 
உன் முதல் பேச்சு -என் மூளையில் 
நீங்காத அழிக்க முடியாத ... 
கல்வெட்டு வாசகம் ....!!! 

உன் முதல் கடிதம் .... 
உலகில் விலைமதிக்க முடியாத ... 
அருங்காட்சி சாலையின் ... 
பொக்கிஷம் - வைத்திருக்கிறேன் ... 
பத்திரமாக பொட்டகத்தில் இல்லை ... 
நீ என்றும் குடிகொண்டிருக்கும் ... 
என் இதய அறையில் .....!!! 

முதல் காதல் தோற்பதில்லை .... 
வாழ்க்கையில் இணைவதில் தான் ... 
தோற்றுவிடுகிறோம் - காதல் 
அழிவதில்லை என்பது இதுதான் ....! 
புரியாத பருவத்தில் தெரியாமல் ... 
புகுந்திடும் இந்த உயிர் கொல்லி ... 
முதல் காதல் முதல் காதலி ....!!! 

கட்டிய மனைவியுடன் .... 
பெற்ற பிள்ளைகளுடன் ... 
பகிரமுடியாத பாழாய் போன ... 
இந்த முதல் காதல் -இதயத்தில் .. 
தோன்றும் ஒரு புற்று நோய் ...! 
எத்தனை இன்பங்கள் வந்தாலும் .. 
அடிக்கடி முதல் காதல் நினைவுகள் ...!!! 

காதலிப்பது தவறில்லை .... 
முதல் காதலை இழப்பது கொடுமை ... 
வாழ்க்கை முடியும் வரை ... 
எங்கேயோ ஒரு மூலையில் ... 
ஏங்கிக்கொண்டு இணைப்புஇல்லாத ... 
தொலைபேசிபோல் தமக்குள்ள பேசி .. 
அழும் முதல் காதல் கொடுமை ...!!!

நான் உன்னை நேசித்தேன்

நான் உன்னை நேசித்தேன் ...
சாகும் வரை மறக்க மாட்டேன் ....
நீ என்னை நேசித்தது உண்மை ...
அதனால் தான் யோசித்துக்கொண்டு ...
வாழ்கிறேன் ....!!!

இரக்கத்தால்
காதல் வரகூட்டாது ....
இரக்கமே இல்லாமல் ...
பிரிந்து விடுவார்கள் ...!!!

இன்னுமொரு ஆனந்தம் ...!!!

இதுவரை
எழுதிய கவிதை பல்லாயிரம் ...
வலிகள் ஆயிரம் ஆயிரம்....
அத்தனையும் நீ தந்த வலி ...!
அதுவும் எனக்கு கிடைத்த ...
இன்னுமொரு ஆனந்தம் ...!!!

இன்னும் இருக்கிறது ....
நீ தந்த வலியின் வரிகள் ...
காத்திரு எழுதிக்கொண்டே ...
இருப்பேன் ....!!!


இறந்த பின் புகழாரம்

ஒருவன் உயிருடன் ...
இருக்கும் போது ...
மகிமை புரிவதில்லை...
இறந்த பின் புகழாரம் ...
செய்வர் ....!!!

என் காதல் ...
நீ ஏற்று கொள்ளவில்லை ...
கவலையும் இல்லை ...
நிச்சயம் என்னைப்போல் ...
உன்னை காதலிக்க ...
உலகில்  யாரும் இல்லை ...!!!

உன் நினைவுகளுடன் வாழ்கிறேன்

நீ என்னை ...
விலக்குவது வேறு...
விலகுவது வேறு ...
வலிகளின் தாக்கமும் ...
வேறு ....!!!

நீ விலகுகிறாயா ...?
விலக்குகிறாயா ...?
அது உன் விருப்பம் ...
காதல் தான் இல்லை ...
நீ தந்த வலியோடு ...
வாழ்வேன் - வாழ்நாள் ...
முழுதும் ....!!!

சின்ன தன்னம்பிக்கை கவிதை

தோல்வி என்னும் ..
நெருப்பில் எரிந்து ..
சாம்பலாகு....!!!

அப்போதுதான் ...
தோல்வி என்ற சொல் ..
எண்ணம் உன்னில் ...
இருக்காது ....!
தோல்வியின்
சாம்மல் தான் வெற்றி ...!!!
+
சின்ன தன்னம்பிக்கை கவிதை 

சின்ன தன்னம்பிக்கை கவிதை ...!!!

நிறைவேறாத ஆசை ...
கோபமாகிறது....
நிறைவேறிய ஆசை ...
சாதனை ஆகிறது ...!!!

உன் நிலை பார்த்து ...
நிச்சயம் ஆசைப்பட்டு ...
உன் நினைக்கு அப்பால் ..
பட்டத்துக்கு திட்டம் ..
போட்டு ஆசைப்படு ....!!!

வலியை தா ....!!!

இன்பம் துன்பம் ...
நடுவில் நம் ..
காதல் இரு தலை ...
எறும்பு போல் ...!!!

என் இதயம் சுமை ..
தாங்கி எவ்வளவு ...
வேண்டுமென்றாலும் ...
வலியை தா ....!!!

காதல் ஆடுபுலி ..
ஆட்டம் ...
நீயா ..? நானா ..?

+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 745

பாவம் நம் காதல்

பாவம் நம் காதல் ...
முகவரி தெரியாமல் ...
தெரு தெருவாய் ...
அலைகிறது ....!!!

இரவு நட்சத்திரம் ....
அழகுதான் -பகலில் ..?
நான் பகல் நட்சத்திரமாகி ...
விட்டேனோ ...?

உன்
காதலில் இருந்து
விடுபட விஷத்தை...
எடுத்தேன் ....
விஷ கோப்பையிலும் ....
நீ .....!!!

+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 744

இதயம் வேண்டும் ...

உன்னை நினைத்து ...
மூச்சு விட்டேன் ...
நான் இறந்த உணர்வை ...
பெற்றேன் ........!!!

காதல் கடலை விட ...
ஆழமானதாம் - நம்
காதலில் ஆழம் தெரிந்து ..
விட்டதே ....!!!

உன்னிடம் இருந்து ...
கற்றுக்கொண்டேன் ...
இதயம் வேண்டும் ...
காதலுக்கு  எங்கே...?
உன் இதயம் ....!!!

+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 743

வியாழன், 6 நவம்பர், 2014

என் உயிரும் தான் ...!!!

உன்னை காதலித்து ...
உறவை பெற்று ...
கொள்வதற்காக   ....
எத்தனை உறவை ...
தொலைத்து விட்டேன் ....!!!

இப்போ
உன் உறவும் இல்லை....
எந்த உறவும் இல்லை ...
வலிக்குது  இதயம் மட்டும் ...
அல்ல என் உயிரும் தான் ...!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

சிறப்புடைய இடுகை

உள்ளத்தில் பூவை.....

உள்ளத்தில் பூவை..... மலர வைக்காவிட்டாலும்.... பரவாயில்லை..... பூமரத்தின் வேரை.... சேதமாக்கும்செயல்களை நினைக்காதீர்....... என்றோ ஒருநா...