நட்பென்றால் இதுதான் நண்பா
நட்பென்றால் இதுதான் நண்பா ---------------- நட்பு உலகின் தோற்றத்திலிருந்து ..... படைத்தவனால் கிடைத்த அமிர்தம் ....! காவியங்கள் காப்பியங்கள் கதைகள் .... இலக்கியங்கள் புராணங்கள் மற்றும் .... மறை நூல்கள் ,சொல்லாத விடயத்தையா .... நான் சொல்லிவிடப்போகிறேன் ....? எல்லாம் அங்கிருந்தே எடுக்கிறோம் ....!!! புனித குர்ரானில் சொல்லாத நட்பா ....? புனித பைபிளில் சொல்லாத நட்பா ....? மறைநூல் திருக்குறளில் சொல்லாத நட்பா ....? இதுவரை எழுதிய கவிஞர்கள் சொல்லாததா...? நடித்து கலைத்த நாடகங்கள் சொல்லாததா...? சிந்தனையாளர் கொட்டி தீர்த்த சிந்தனையை .... விடவா நான் நட்பை விளக்கிடபோகிறேன்...? முடிந்தவரை நண்பா நட்பு என்றால் என்ன ....? பொறுக்கி எடுத்ததில் பெருக்கி சொல்கிறேன் ...!!! மனைவியிடம் எதையும் மறைக்காமல் ..... பகிர்ந்தால் குடும்பம் பிரியும் என்று .... புரிந்தும் உண்மையை சொல்லும் கணவன் .... " குடும்ப நட்பின் தலைவன் " ....!!! அவனுக்கு அவளுக்கு தலைவலித்தால் .... இவனுக்கு இதயம் வலிக்கும் என்று ... உள்ளத்தால் வேதனை படும் உயிர் .... " உறவு நட்புக்கு தலைவன் ".....!!! ...