இடுகைகள்

மே 13, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஊட்டி விடுமாம் தாய் ....!!!

கூடி சாப்பிடுமாம் .... காக்காய் ....!!! தான் சாப்பிடாமல் ... ஊட்டி விடுமாம் ... தாய் ....!!! + அம்மா கடுகு கவிதை

அம்மாவே ஒளி ...!!!

அம்மா .... வீட்டின் சூரியன் துணை கோளான ... அப்பா இயங்கவும் ... நட்சத்திரங்கள் பிள்ளைகள் மினுங்கவும் ... அம்மாவே ஒளி ...!!! + அம்மா கடுகு கவிதை

அம்மா கடுகு கவிதை

திரு வாசகம் போதாது ... தாயே உன்னை பற்றி ... எழுத பெரு வாசகம் .... வேண்டும் ....!!! + அம்மா கடுகு கவிதை

மண்ணுலக வெண்ணிலாவை .....

காரிருள் வானத்தில் பளிச்சிடும் நிலாவே .... காரிருள் கூந்தலோடு பளிச்சிடும் .... என்னவளின் வதனமும் ..... மண்ணுலக நிலாதானடி .... விண் நிலவே - நீ தான் .... என்னவளை படைத்தாயோ ....!!! நீ படைத்த என்னவளோ .... தரையில் உலாவரும் முழுநிலா ..... விண் நிலவே வந்துவிடாதே ..... வெட்கப்படுவாய் வேதனை படுவாய் .... மாதமொருமுறை எடுக்கும் ஓய்வை.... மாதம் முழுதும் எடுத்துவிடுவாய்....!!! அண்ணாந்து பார்த்த வெண்ணிலாவை .... அருகில் இருக்கும் அற்புதம் பார்த்தேன் ...... தேய்ந்து வளரும் வெண்ணிலாவை .... தோளோடு சார்ந்திருக்கும் வரமும் பெற்றேன் .... விண்ணுலக வெண்ணிலாவே ..... மண்ணுலக வெண்ணிலாவை ..... என்னவளாக தந்தமைக்கு நன்றி ....!!!

நிலவே இறங்கிவா ....!!!

நிலவே .... உன்னை உவமையாக கூறி .... காதல் செய்தும் காதலரை .... வாழ்த்திட ஒருமுறை வருவாயோ ..? உன்னையே உவமையாக கூறி .... காதலியை ஏமாற்றிய .... காதலனை சுட்டெரிக்க .... ஒருமுறை வருவாயோ ..? நிலவே உன்னிடம் .. நீர் ,நிலம், காற்று இருக்கிறதா ..? தொடரட்டும் விஞ்ஞான ஆய்வு ....! பூலோகத்திலோ உன்னால் ... நீர் ,நிலம், காற்றுமாசடைகிறது ....!!! நிலவே ஒருமுறை வருவாயோ .. சூழலை மாசுபடுத்தும் இவர்களை .... எச்சரிக்க மாட்டாயோ ...? நிலாவில் பாட்டி இருக்கிறார் .... இன்றுவரை நம்பும் குழந்தைகள் ....!!! பாட்டியுமில்லை பாட்டனுமில்லை ... வான் வெளி தூசிகளே அவை .... நிரூபிக்க ஒருமுறை வருவாயோ ...? மூடநம்பிக்கையை உடைத்தெறிய ... ஒருமுறை இறங்கி வருவாயோ ...?