இடுகைகள்

பிப்ரவரி 4, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன் 02

தந்தை தாய் உட்பட .... குடும்ப உறுப்பினர் பத்து .... ஆதவன் நடுப்பிள்ளை ஐந்து.... பிறந்த நாளில் இருந்து .... ஒருவாரம் வரை கடும் மழை .... அருகில் இருந்த ஆறு உடைக்கும் ... ஆபத்தான நிலையில் .... ஆற்றுக்கு அருகே ஆதவன் .... குடிசை வீடு .......!!! ஆதவன் தந்தை சாமி .... சாமி ஆறு உடைக்கபோகுது .... சீக்கிரம் வீட்டுக்குள் இருந்து .... வெளியே வா என்ற அயலவர் ..... அவசர குரல் கேட்க - ஆதவனை .... ஒரு துணியால் சுற்றிய படி .... வெளியே சாமி குடும்பம் .... வந்த போது  சில நிமிடத்தில்.... அந்த மண் குடிசை இடித்து .... விழுந்தது ......!!! ^^^ தொடரும் இவன் போராட்டம்  ^^^ வாருங்கள் இவனின் வாழ்கையை கேட்போம் .... ^^^ நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன் ^^^ கவிப்புயல் இனியவன் 

கனவாய் கலைந்து போன காதல் 03

பூவழகன் .... பரீட்சை முடிவுகள் ... அந்தளவுக்கு சிறப்பில்லை .... இதனால் இவனை எல்லோரும் .... விவேகம் அற்றவன் என்றே.... கருதினர் - அது கூட உண்மை ....!!! பூவழகனின்.... ஒரு சிறப்பு இருப்பதை ... அழகாக பாவிப்பது .... இல்லாதவற்றை நினைத்து .... ஏங்குவதில்லை ...... தினமும் அழகாக உடுத்து .... வருவான் ஆனால் அவை .... புதியதல்ல .....!!! இந்த காலத்தில் தான் .... பூவழகன் படிக்க சென்ற .... பாடசாலைக்கு வெளிமாவட்ட .... பெண் ஒருத்தி புதிய மாணவியாய் .... வரப்போகிறாள் அந்த செய்தியுடன்..... இந்த நாள் பாடசாலை நாளும் .... முடிவுக்கு வந்தது ....!!!  ^^^ தொடர்ந்து வருவான் ... இவன் கதை கூட உங்கள் ... கதையாக இருக்கலாம் .... கனவாய் கலைந்து போன காதல் வசனக்கவிதை....!!! ^^^ கவிப்புயல் இனியவன்

தோல்வியால் கவிஞர் ஆகிறோம்

வாழ்க்கை  .... அடைமழை காதல் .... வழிந்தோடும் ... வெள்ளம் .....!!! காற்றை போல் நீ எப்போது வருவாய் ... எங்கே முடிவாய் ....? காதலித்ததால் .... கவிஞராவதில்லை .... காதல் தோல்வியால் .... கவிஞர் ஆகிறோம் ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 960

கண்மணி நீ .....!!!

என் கண்ணீரில் ... பூத்த கண்மணி .. நீ .....!!! உன் காதலோடு காணாமல் .... போன ஆண்மகன் நான் ....!!! குளம் வற்றியபின் .... கொத்த காத்திருக்கும்... மீன் கொத்தி பறவை ... நீ ......!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 959

தண்டிக்கிறேன்

உன்னை நினைத்து ... நினைத்து -நான் அனாதையாகினேன்....!!! நீ என் கண்ணீர் துளியில் நீச்சல் அடிக்கிறாய் ....!!! உன்னை .... என்னை கேட்காமல் ... காதலித்த  இதயத்தை.... நீ தந்த வலிகளால்... தண்டிக்கிறேன் ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 958

நீ ஆழ்கடல் காதல்

நீ ஆழ்கடல் காதல் .... அதில் தத்தளிக்கும் .... சிறு ஓடம் நான் ....!!! துப்பாக்கியால் .... காயப்படுவதும் .... உன் " கண்" படுவதும் .... ஒன்றுதான் ....!!! நீ கனவாய் இருக்கபார் .... இல்லையேல் தூக்கமாக .... வந்துவிடு ... இல்லையென்றால் ... காதலில் என்னபயன்...?  ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 957

கல் எறியாதே

நீ..... காதல் வீட்டில் இருந்து ... கல் எறியாதே .....!!! என்னை காயப்படுத்தி ..... உன்னால் வாழமுடியும் .... என்றால் இன்னும் நல்லா ... காயப்படுத்து ....!!! நான் ..நீ ...காதல் ஒரு முச்சந்தி .... சந்தித்தே ஆகவேண்டும் ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 956