இடுகைகள்

ஆகஸ்ட், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அதிகமாய் நினைப்பதற்கே அன்பே .....!!!

பிரிந்து பார்த்தேன் பிரிய முடியவில்லை ...... வெறுத்துப்பார்த்தேன் வெறுக்கமுடியவில்லை  ..... மறந்து பார்த்தேன் மறக்கவும் முடியவில்லை .... பிரிவு வெறுப்பு மறதி எல்லாம் உன்னை ..... அதிகமாய் நினைப்பதற்கே அன்பே .....!!! + ஐந்து வரி கவிதைகள் ......!!! காதல் தோல்வி கவிதை கவிதை எண் 17 +++++ சொந்த மொத்தக்கவிதை = 6230

சொந்த மொத்தக்கவிதை = 6229

சுட்டெரிக்கும் சூரியனை விட ...... உன் வார்த்தைகள் சூடானவை ..... வலிமை கொண்ட மலையை விட .... உன் மனம் கடினமானது ....... பிரிவின் பெறுபேறு உணர்த்தியது ....!!! + கே இனியவன்  ஐந்து வரி கவிதைகள் ......!!! காதல் தோல்வி கவிதை  கவிதை எண் 16 +++++ சொந்த மொத்தக்கவிதை = 6229

கவிநாட்டியரசர் கே இனியவன்

காதலை காதலால் காதல் செய் கண் உறங்கி எழுந்ததுமே ...... +++ கண்முன் சிலையாய் நிற்கின்றாய்....!!! காலையில் குளிக்கும் தருவாயில் ...... +++ முத்து நீர்த்துளியாய் நினைவில் வருகிறாய் ....!!! உணவுண்ணும் உணவு தட்டில் நீ ....... +++ முழுநிலா அழகுடன் வருகிறாயே ......!!! வேலைக்கு செல்லும் தூரம் வரை ....... +++ என்னோடு அருகில் பயணம் வருகிறாய் ....!!! உனக்கென்ன உயிரே ஜாலியாய் ....... +++ உறங்கி கொண்டே இருகிறாய் ......!!! உனக்கும் சேர்த்து நானே காதலிப்பதால் ..... +++ இரண்டு இதயவலியை நானே சுமக்கிறேன் .....!!! அடுத்த ஜென்மம் நான் நீயாக பிறந்து .... +++ நீ நானாக பிறந்து உன்வேதனைபார்க்கணும் ......!!! உனக்காக உன் வலியையும் சுமக்கும் ..... +++ என் இதயத்துக்கு எத்தனை வலிமை .....!!! என்ன காரணத்துக்காய் என்னை மறந்தாய் .... +++ என் இதயத்திலும் உயிரிலும் தேடுகிறேன் ....!!! நீ கூறும் நிஜாயங்கள் நியமாக இருந்தால் .... +++ அந்தக் கணப்பொழுதே நான் மடிந்துடுவேன் ....!!! எனக்கென்று எதுவுமே இல்லாதபோது ..... +++ நான்உயிர்இருந்தென்ன சாதிப்பேன் ...??? அடுத்த ஜென்மத்தில் நீ பிறந்தால் ..... +++ க

வாழ்வதற்கே - நீ

என் இதயத்தை .... உன்னை நினைக்காமல் .... இருக்க தடுப்பு சுவர் .... போட்டேன் - அதையும் தாண்டி உன்னை .... எட்டி வந்து பார்க்கிறது ... இதயம் ....!!! காதல் தனியே .... காதலிக்க மட்டுமல்ல .... காலமெல்லாம் உன்னோடு ... வாழ்வதற்கே - நீ காதலித்துவிட்டு சென்றுவிட்டாய் .....!!! + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை

காதல் முகவரியில் நீ

நம் காதல் கண்னில் .... ஆரம்பித்ததால் ..... கண்பட்டு விட்டது .... காயப்பட்டுவிட்டது ....!!! காதலில் நான் .... தொடக்கப்புள்ளி.... நீ வட்டம் ......!!! உனக்கு போட்ட .... காதல் கடிதம் ... எனக்கே திரும்பி .... வந்துவிட்டது .... காதல் முகவரியில் ... நீ இல்லையாம் .....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;842

அம்மா கவிதைகள்

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் .... எந்த மனகுழப்பமும் இல்லாமல் ... எந்த வேறுபாடும் இல்லாமல் ..... அன்புவைக்கும் உயிர் வேண்டும் ..... தாயே அது உன்னால் மட்டுமே முடியும் ....!!! + கே இனியவன்  ஐந்து வரி கவிதைகள் ......!!! அம்மா கவிதைகள்  கவிதை எண் 15

அம்மா கவிதைகள்

தன் தாயைப்போல் எல்லா .... தாயையும் நினைப்பவன் ஞானி ..... ஆனால் எந்த தாயையும் -நீங்கள் .... அம்மா என்று அழைத்துபாருங்க்கள் .... உங்களை தன் குழந்தையாகவே பார்க்கும் .....!!! + கே இனியவன்  ஐந்து வரி கவிதைகள் ......!!! அம்மா கவிதைகள்  கவிதை எண் 14

அம்மா கவிதைகள்

தான் எங்கிருந்து வந்தேன் .... என்பதை எனக்கு எடுத்துரைக்கவே ..... என்னை ஆலயத்துக்கு அழைத்து .... சென்றார் அம்மா என்பதை ...... மக்கு மண்டைக்கு புரியவில்லை ....!!! + கே இனியவன்  ஐந்து வரி கவிதைகள் ......!!! அம்மா கவிதைகள்  கவிதை எண் 13

அம்மா கவிதைகள்

தாயே உன்னை வார்த்தையால் ..... வரிகளால் அழைக்கும் போதும் ..... அம்மா என்று அழைத்த போதும் ..... உயிரில் அதிர்வு ஏற்படுகிறது .... உயிரில் கலந்த உறவு தானே .....!!! + கே இனியவன்  ஐந்து வரி கவிதைகள் ......!!! அம்மா கவிதைகள்  கவிதை எண் 12

அம்மா கவிதைகள்

அம்மா - இறைவனின் உன்னத படைப்பு .... அம்மா - இறைவனாக பார்க்கப்படும் பிறப்பு .... அம்மா - ஒவ்வொரு இதயத்திலிருக்கும் சாமி ..... அம்மா - இன்ப துன்பத்தை தாங்கும் கடவுள் .... அம்மா - எல்லா உயிரினங்களின் மூல கடவுள் ....!!! + கே இனியவன்  ஐந்து வரி கவிதைகள் ......!!! அம்மா கவிதைகள்  கவிதை எண் 11

என் கவிதை வேறு....!!!

பகலில் சந்திரன் ... இரவில் சூரியன் ... நம் காதல் நிலை .... இதுதான் ....!!! என்னிடம் கவிதையும் .... உன்னிடம் காதலும் ... என்னபயன் ...? நம்மிடம் காதல் ... இல்லையே......!!! நீ கனவாய் வந்தால் .... என் கவிதை வேறு.... நினைவாய் வந்தால் ... என் கவிதை வேறு....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;841

எரிகிறது காதல் ....!!!

ஆடு புலி ஆட்டம்போல் .... நம் காதல் -நீ அசைத்தால்   ... வெளியேறிவிடுவேன் ....!!! நம் காதல் இறந்துவிட்டது .... நீ கண்ணீர் அஞ்சலி ... செலுத்துகிறாய் ....!!! சந்திரன் என்று .... சூரியனை .... காதலித்துவிட்டேன்.... எரிகிறது காதல் ....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;840

நண்பா நட்பை பற்றி என்னால் ....

ஐய்ம்பூதங்கலின் கருத்தை .... ஐவகை நிலத்தை என்னால் .... ஐந்து வரியில் விளக்கிடுவேன் .... நண்பா நட்பை பற்றி என்னால் .... ஜென்மம் எடுத்தாலும் விளக்க முடியாது ....!!! + கே இனியவன்  ஐந்து வரி கவிதைகள் ......!!! நட்பு கவிதைகள்  கவிதை எண் 10

நண்பா ..நான் வறுமை பட்டபோது ....

நண்பா ..நான் வறுமை பட்டபோது .... நீ வாங்கி தந்த ஆடை இன்றும் இருக்கிறது ..... எனக்கு அது புதைபொருள் பொக்கிஷம் .... எத்தனை புது ஆடைஉடுத்தாலும் .... உன் ஆடையின் அழகுக்கு நிகரில்லை ....!!! + கே இனியவன்  ஐந்து வரி கவிதைகள் ......!!! நட்பு கவிதைகள்  கவிதை எண் 09

உலகில் புரியாத புதிர் நட்பு ....!!!

கண் பூத்து கண்பார்வை ...... குறைந்துபோகும்போதும் ...... கண்டவுடன் கட்டித்தழுவும் ..... ஒரே ஒரு உறவு நட்பு ..!!! உலகில் புரியாத புதிர் நட்பு ....!!! + கே இனியவன்  ஐந்து வரி கவிதைகள் ......!!! நட்பு கவிதைகள்  கவிதை எண் 08

நட்பு அழகை விட மனதை விரும்பும் .....!!!

நண்பா நட்பு ஒன்றுக்குத்தான் ..... நேற்று இன்று நாளை பொருந்தும் .... காதலில் இதில் ஒன்று நின்றுவிடும் ..... நட்பு காவியங்களை காப்பியங்களை .... நட்போடு வாசித்துப்பார் கண்ணீர் வரும் ....!!! + கே இனியவன்  ஐந்து வரி கவிதைகள் ......!!! நட்பு கவிதைகள்  கவிதை எண் 06 ------------------ கிழிந்த  காட்சட்டையுடன் நப்புகொண்டோம்..... இன்றுவரை கிழியாமல் இருக்குதடா .....! அழகான உடையிருந்தால் காதல் வரும் ..... அசிங்கமான உடையிருந்தாலும் நட்புவரும் ..... நட்பு அழகை விட மனதை விரும்பும் .....!!! + கே இனியவன்  ஐந்து வரி கவிதைகள் ......!!! நட்பு கவிதைகள்  கவிதை எண் 07

''அ''டக்கமாக‌ உடை அணி

''அ''டக்கமாக‌ உடை அணி ''ஆ''பாசமாக‌ உடை அணியாதே ''இ''ருக்கமாக‌ உடை அணியாதே "ஈ'' ரமான‌ உடை அணியாதே "உ"டலுக்கேற்ற‌ உடை அணி "ஊ"ருக்காக‌ உடை அணியாதே "எ"ளிமையான‌ உடை அணி "ஏ"மாற்றும் காவி உடை அணியாதே ''ஐ''யத்தை(ஆணா?பெண்ணா?)ஏற்படுத்தும் உடை அணியாதே ''ஒ"ழுக்கத்தை கெடுக்கும் உடை அணியாதே ''ஓ"சையை ஏற்படுத்தும் உடை அனணியாதே "ஔ"வை சொன்னதுபோல் கந்தையானாலும் கசக்கி கட்டு

என்னவளின் கண்கள் ......!!!

மேகத்திடம் கருநீலத்தை இரவல் வாங்கி விழிமண்டலமாய் உருவாக்கி .....! மழையிடம் நீர்துளிகளை இரவல் கேட்டு..... கண்ணீர்த்துளிகளை உருவாக்கி ....! விண்மீன்களை .... கடனாககேட்டு கண்சிமிட்டும் காந்த சக்திகொண்ட கண்களே .... என்னவளின் கண்கள் ......!!! + கே இனியவனின் புதுக்கவிதைகள் ”

என்னை நீ காதலிக்கும் அழகு

உன் தந்தைக்கு பயந்து... தாயை சமாளித்து... அண்ணனிடம் பொய் சொல்லி தம்பியை வசப்படுத்தி .... தங்கையிடம் மறைத்து .... என்னை நீ காதலிக்கும் .... அழகோ அழகு .....!!!

காற்று போனால் பேச்சு போகிடும் ....!!!

கா ற்றை  போல் பலமாய் இரு .... கா ற்றை  போல் மறைமுகமாய் இரு .... கா ற்றை  அசுத்தபடுத்தாதே ..... கா ற்று  போனால் பேச்சு போகிடும் ....!!! கா டு களை அழிக்காதீர் .... கா டு  மிருகங்களின் வீடு ...... கா டு களை போணுவோம் ..... கா டு  சமூகத்தில் பொதுச்சொத்து .......!! கா க்கை  போல் ஒன்று கூடி வாழ்வோம் .... கா க்கை  போல் கற்புடன் வாழ்வோம் .... கா க்கைக்கு  கண்மணி ஒன்று பார்வை தெளிவு ...... கா க்கை  போல் சூழலை பாதுகாப்போம் ........!!! காதல்  என்பது இருபால் கவர்சியல்ல ..... காதல்  எல்லாவற்றிலும் அன்பு செலுத்துவது .... காதல்  செய்யுங்கள் இயற்கைமீது .... காதலோடு  காலமெல்லாம் வாழ்ந்திடுவோம் ....!!! + இயற்கை மேல் அன்பு செலுத்துவோம்  இயற்கை கவிதை 

நான் தனிமையில் இருப்பேன் ...!!!

உன்னை .... ஆசை வார்த்தையால் .... வர்ணிப்பவர்களை நம்பாதே .... உன் அழகையே ரசிக்கிறார்கள்....!!! நான் ... உனக்கு முள் போல் இருந்தாலும் .... உயிர் உள்ளவரை உன்னையே ... நேசிப்பேன் -என்றோ ஒருனாள் ... நீ என்னை திரும்பி பார்க்கும் ... நான் தனிமையில் இருப்பேன் ...!!! + கே இனியவனின் புதுக்கவிதைகள்

கே இனியவனின் புதுக்கவிதைகள்

நீ தந்த ரோஜா செடியில் .... உணர்வேன் உன் நிலை .... நீ ஆனத்தமாய் இருக்கும் ... போது  வீட்டு முற்றத்தில் ... ரோஜா சிரித்த முகத்தோடு .... பூத்திருக்கும் .....!!! உனக்கு என்ன நடந்தது ....? ஒவ்வொரு ரோஜா பூவும் .... வாடிவருகிறதே.....? இதழ்கள் உதிர்ந்து வருகிறதே ...!!! + கே இனியவனின் புதுக்கவிதைகள்

காதல் விவசாயி

உன் நினைவுகளை.... எனக்குள் விதைத்த..... காதல் விவசாயி நான் .... நினைவுகளாலும் கனவுகளாலும் காதல் கதிரானேன் .....!!! காதல் அறுவடை ஏன்....? செய்தாய் உயிரே .... என் இதயத்தை தரிசு .... நிலமாக்கிவிட்டாயே....!!!

நட்பிலும் காதலிலும்

நட்பு என்றாலும் ... காதல் என்றாலும் .... இதயத்தில் வைக்க .... இரண்டு கல் வெட்டுக்கள்.... பழகும் வரை உறுதியாயிரு ... பழகிய பின் உயிராய் இரு ...!!! நட்பிலும் காதலிலும் .... இதயத்தில் வைக்க கூடாதவை .... சந்தேக படாதே .... சந்தர்ப்பதுகேற்ப பேசாதே ....!!!

கருணை என்பது உதவியல்ல

க ண்ணில் காந்த சக்தியுடன் .... க டமையை மூச்சாய் கொண்டு.... க திரவன் முக மலர்வுடன் ஆசியுடன் ... க ண்ணியத்துடன் பணிகளை தொடர்வோம் ....!!! க ட்டளை செய்துவிட்டு நீ மட்டும் .... க டப்பாட்டில் இருந்து விலக்கிவிடாதே ..... க ண்டதே காட்சி கொண்டதே கோலமாகிவிடதே .... க ண்ணால் கண்டதும் கேட்டதும் பொய் .....!!! க ரும்புபோல் பேச்சில் இனிமையும் ....... க திரவன் போல் மனதில் ஒளிமையும் ......... க ற்பூரம் போல்சிந்தனையில் விரைவும் ....... க ல்வியும் உடையவனே மாமனிதன் .......!!! க ம்பீரம் என்பது உடல் அல்ல ,செயல் ..... க ண்ணியம் என்பது பேச்சல்ல ,நடத்தை .... க ருணை என்பது உதவியல்ல ,அன்பு ...... க டவுள் இருப்பது வெளியே இல்லை ,உள்ளே ......!!!

உனக்கு இல்லாத இதயம் வேண்டாம் ....!!!

என்னை நன்றாக காயப்படுத்து ..... உனக்கு அதில் இன்பமென்றால் .... நன்றாக காயப்படுத்து -எதையும் ... தாங்கும் இதயம் என்று சொல்லமாடேன் .... உனக்கு இல்லாத இதயம் வேண்டாம் ....!!! + கே இனியவன் ஐந்து வரி கவிதைகள் ......!!! கவிதை எண் 05

நீ என் கவிதை அழகு என்கிறாய் .....

நீ என் கவிதை அழகு என்கிறாய் ..... நீ  அழகாய் இருப்பதால் கவிதை ..... அழகாக இருக்கிறது - நீ என்னை .... பிரிந்துபார் கவிதை அழுது படி ...... உன் மடியிலேயே வந்து தூங்கும் ....!!! + கே இனியவன் ஐந்து வரி கவிதைகள் ......!!! கவிதை எண் 04

நீ இருக்கும் வரை துடிக்கணும் ....

என்இதயம் நீ இருக்கும் வரை துடிக்கணும் .... கண்கள் உன்னை மட்டுமே பார்க்கணும் .... உன் தெருவைநோக்கி கால்கள்  நடக்கணும் .... நம் காதல் உலகம் வரை இருக்கணும் .... இல்லை- கல்லறையில் இருவரும் தூங்கணும் ....!!! + கே இனியவன் ஐந்து வரி கவிதைகள் ......!!! கவிதை எண் 03

நானும் நீயும் பிரிந்துவிட்டோம் ....

நானும் நீயும் பிரிந்துவிட்டோம் .... நீ என் நினைவுகளை மறந்து .... நான் உன் நினைவுகளை மறந்து ..... வாழவே முடியாது - காதல் பிரிவை...  ஏற்படுத்தும் மறதியை ஏற்படுத்தாது ....!!! + கே இனியவன்  ஐந்து வரி கவிதைகள் ......!!! கவிதை எண் 02

ஐந்து வரி கவிதைகள் ......!!!

மனம் நினைக்கும் வார்த்தைகள் ..... பேச உதடுகள் துடியாய் துடிக்குது .... தடுக்கிறது நீ குடியிருக்கும் இதயம் ..... உன் இதயம் வேதனைபட்டால் ...... இறந்திடுவேன் என்கிறது என் இதயம் ....!!! + கே இனியவன் ஐந்து வரி கவிதைகள் ......!!! கவிதை எண் 01

ஓவியம் போல் மனதை அழகாக்கு....

ஓ கோ என்று வாழ ஆசைப்படாதே ..... ஓ ர்மம் மட்டும்கொண்டும் வாழ்ந்திடாதே .... ஓ டம்போல் தத்தளிக்கும் முடிவெடுக்காதே ..... ஓ டு ஓடு இலக்கு அடையும் வரை ஓடு .....!!! ஓ ட்டுக்காக அரசியல் நடத்தாதீர் ..... ஓ ரங்கட்டி மக்களை ஒத்துக்காதீர் .... ஓ ரம்போய் மக்களை விற்காதீர் ..... ஓ லமிட்டு மக்களை மயக்காதீர் .....!!! ஓ வியம் போல் மனதை அழகாக்கு.... ஓ சையின் சொற்களை இனிமையாக்கு .... ஓ லை போல் விழுந்தாலும் பயன் கொடு ..... ஓ ய்வெறாலும் அளவோடு பயன்படுத்து .......!!! ஓ ர் அறிவு தாவரம் முதல் அன்பு செய் .... ஓ ராயிரம் உதவிசெய். பெருமைகொள்ளாதே.... ஓ தல் மூலம் உலகை விழிப்படைய செய் ... ஓ ரினமே உண்டு அதுவே மனித இனம் ....!!!

வறண்ட நதியில் ...

காதலில் நான் சூரிய உதயம் -நீ அந்திவானம் ....!!! வறண்ட நதியில் ... கப்பல் ஓட அலைகிறாய் ... நான் எப்போது காதல் ... மழை பொழியும் ....? காத்திருக்கிறேன் ....!!! உண்மை காதல் என்ற ஒன்று இருக்கவே ... கூடாது என்று நினைத்து ... விட்டாயோ ....? + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;839

என் இதய நரம்பு ....

என் இதய நரம்பு .... முற்களாய் மாறுகிறது .... நீ பூக்களின் மீது .... தூங்குகிறாய் ....!!! என் கண்ணில் நெய் .... இருப்பதாய் நினைகிறாய் .... இப்படி உருக்குகிறாய் ....!!! காதலின் தோல்விக்கு ... தண்டனை -உன்னை தலைகுனிந்து வாழ ... வைப்பதே .....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;838   

காயமடைந்து விட்டேன் ....!!!

பூவுக்குள் இருக்கும்... தேன் போல் நீ .... மறைந்திருகிறாய் .... நான் அலைகிறேன் ....!!! கண்ணாம் பூச்சி ... விளையாட்டை .... காதலிலும்..... விளையாடுகிறாய் ....!!! உன் கண்ணோடு.... என் கண் மோதுபட்டு .... காயமடைந்து விட்டேன் ....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;837

காதலும் விழுந்தது ....!!!

வெண் முகிலின் நிலாவே .... உன்னை அண்ணாந்து .... பார்ப்பதுபோல் தான் ... என் காதலும் .....!!! காற்றில்லா பட்டம் .... தள்ளாடி தள்ளாடி ... விழுவதுபோல் என் ... காதலும் விழுந்தது ....!!! உனக்கு என்னில் .... அக்கறையில்லை ... அதுதான் நீ காதலில் ... அக்கரையில் நிற்கிறாய் ....!!!   + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;836

இனிய வரவேற்பு கவிதைகள்

ஒ ளி கொண்ட இதயங்களே ..... ஒ ன்றுபட்டு வாழ்வோம் வாருங்கள் .... ஒ ற்றுமைதான் உலகத்தின் தேவை .... ஒ ன்றே குலம் ஒருவனே தேவன் ......!!! ஒ டுக்கு முறைகள் நிலைப்பதில்லை ..... ஒ ன்று கூடியே துடைத்தெறிந்தோம் ..... ஒ ற்றர் கூட்டம் ஒற்றுமையை கெடுக்கும் .... ஒ ரு அணியில் வாழ்வோம் வாரீர் .....!!! ஒ ழுக்கமாக வாழ்ந்தால் உலகை ..... ஒ ரு குடையின் கீழ் கொண்டு வரலாம் ..... ஒ ற்றுமையின்றியும் ஒழுகமின்றியும் வாழ்ந்தால் .... ஒ ற்றர்களின் நோக்கமே நிறைவேறும் .....!!! ஒ ளிவட்டம் போல் இதயத்தை மாற்று ..... ஒ ளிவு மறைவின்றி பேசிப்பழகு ..... ஒ ளி கொண்ட அறிவை பெருக்கிடு ..... ஒ டுக்கு முறைக்கு ஒடுக்கு முறைசெய்....!!!