இடுகைகள்

செப்டம்பர் 23, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எழுத்து தளத்தில் கே இனியவன்

இயற்பெயர் :  கே இனியவன் இடம் :  யாழ்ப்பணம் பிறந்த தேதி :  16-Nov-1965 பாலினம் :  ஆண் சேர்ந்த நாள் :  27-Dec-2012 பார்த்தவர்கள் :  35962 புள்ளி :  12624

காதலுக்கு இது பொருந்தாது ....

சிரித்து வாழவேண்டும் .... காதலுக்கு இது பொருந்தாது .... அழுதுவாழ்வதே காதல் ....!!! நானும் ஞானிதான் .... உள்ளே இருக்கும் உன்னையே ... தினமும் தியானம் .... செய்கிறேன் ....!!! நான் முதல் தோற்றதும் .... இறுதியில் தோற்றதும் ... உன்னிடம் தான் .... காதல் உனக்கு வராதத்தால் ...!!! + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன்  தொடர் பதிவு கஸல் - 865

யார் மூடுவது மற்ற கதவை ...?

இரட்டை கதவை கொண்ட .... நம் காதல் ஒற்றை கதவானது .... யார் மூடுவது மற்ற கதவை ...? காதல் மூறெழுத்தாய் .... இருப்பதுதான் தவறு .... கவலையும் மூன்றெழுத்து ....!!! காதலிப்பது கடினமில்லை .... காதலை சொல்வது கடினம் ... அதைவிட கடினம் .... காதலோடு இறப்பது .....!!! + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன்  தொடர் பதிவு கஸல் - 864

தவறுதலாக காதலித்து விட்டேன் ....!!!

இப்போதுதான் புரிகிறது .... நான் உனக்காக பிறக்கவில்லை ..... தவறுதலாக காதலித்து விட்டேன் ....!!! எழுதப்பட்ட காதல் .... காவியங்களும் காப்பியங்களும் ... போதும் இதற்குமேல் .... எவராலும் அழமுடியாது .... நாம் மனத்தால் பிரிவோம் ....!!! காதலர்கள் நல்ல நடிகர்கள்.... உனக்காக உயிர் விடுவேன் .... என்று சொல்வதில் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன்  தொடர் பதிவு கஸல் - 863

வாழ்க்கையும் தானமாக தருகிறேன்

உன் உயிராகவும்......  என் உடலாகவும் .... இருந்த என்னை ..... எலும்பாக மாற்றிவிட்டாய் .....!!! என் வாழ்க்கையையும் .... சேர்த்து உனக்கு தானம் .... போடுகிறேன் .... எங்கிருந்தாலும் வாழ்க .....!!! காதலித்தால் கிடைப்பது .... காதலியோ காதலனோ .... இல்லவே இல்லை ..... கண்ணீரும் கவலையும் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன்  தொடர் பதிவு கஸல் - 862

அடுத்த ஜென்மத்தில் பார்ப்போம் ....

உயிரே .... நீர் எழுத்து கடதாசியாய்.... மாறிவிட்டாயா....? எழுதும் கவிதைக்கு ... தாக்கம் சொல்கிறாய் .... இல்லையே ....!!! உன்னை அழக்காக .... வரைபடம் வரைந்தேன் .... கிறுக்கல் சித்தரம் போதும் .... என்கிறாயே ....!!! இந்த ஜென்மத்தில் முடியாது ... அடுத்த ஜென்மத்தில் பார்ப்போம் .... என்கிறாயே - நீ என்ன ராமனா ...? இன்றுபோய் நாளை வா என்கிறாயே ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன்  தொடர் பதிவு கஸல் - 861

கவிப்புயல் இனியவன்

படம்