இடுகைகள்

செப்டம்பர் 11, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதலர் சிரிப்பின் அர்த்தம் ....!!!

சிரிப்பு ஆயுளுக்கு .... நல்லதென்றாய்..... இப்போதான் புரிகிறது .... காதலர் சிரிப்பின் ... அர்த்தம் ....!!! எல்லா பார்வைக்கும் .... பின்னால் ஒரு காதல் .... இருக்கும் - உன் பார்வைக்கு .... பின்னால் கவலை இருக்கிறது ....!!! நான் காதல் விதைகள்..... விதைத்தேன் - காதல் பயிரே என்னவளே .... முளைகிறாயில்லை....!!! + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன் தொடர் பதிவு கஸல் - 855

காதலையே தரவில்லையே ....!!!

ஆரம்பத்தில் ... உனக்காய் உயிரையே .... தருவேன் என்றாய்..... இன்னும் காதலையே .... தரவில்லையே ....!!! காதலில் எல்லோரும் .... ஒன்றுதான் தவிக்கவிட்டு ..... வேடிக்கை பார்ப்பதில் .....!!! என் காதல் பசிக்கு .... நீ வெறும் சோளன் பொரி.... காற்றடித்தால் பறந்தும்.... விடுகிறாய் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன் தொடர் பதிவு கஸல் - 854

என் நினைப்பே தப்பு

இறைவா எனக்கு .... பாச கயிறை தந்துவிடு .... அவள் கழுத்தில் -தாலி கயிற்றை பார்க்கமுன் ....!!! நான் மட்டும் நினைக்கும் .... காதலில் நீ என்ன செய்கிறாய் ....? என் நினைப்பே தப்புதானே ....!!! நீ பாவமன்னிப்பு கேட்டபின் என்னை காதலிதிருகிறாய் ... கவலையில்லாமல் இருகிறாய் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன் தொடர் பதிவு கஸல் - 853

உனக்கும் சேர்த்து அழுகிறேன் .....!!!

நீயும் கண்ணீரும் ... உடன் பிறப்புகள் .... அதுவும் இரட்டை .... பிறவிகள் .....!!! நானும் தெரு சுற்றி .... உன்னை தொலைத்து  .... தேடி அலைகிறேன் ....!!! தயவு செய்தது .... கண் கலங்காதே .... உனக்கும் சேர்த்து .... காதலித்த நான் .... உனக்கும் சேர்த்து .... அழுகிறேன் .....!!! + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன் தொடர் பதிவு கஸல் - 852

எப்படி காதல் வரும் ....?

நீ எல்லோருக்கும் .... பாசமானவள் ..... எனக்கோ -நீ வேஷமானவள்....!!! ஒற்றை பாதையால் .... சென்றே பழகியவன் .... எப்படி காதல்  வரும் ....? நீ இல்லையென்றால் .... எனகென்ன ...? என்னோடு உன் காதல் .... இருக்கிறது ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன் தொடர் பதிவு கஸல் - 851

கூத்து தமிழனின் பாரம்பரியம் .....

கூ டு துறந்து போனால் ..... கூ ச்சலிட்டு பயனில்லை .... கூ ட்டுறவு வாழ்கை முறையில் .... கூ ச்சலிடல் தவிர்க்க முடியாது ....!!! கூ டா ஒழுக்கம் வாழ்க்கைக்கு கேடு ..... கூ ட்டு குடும்பம் வாழ்கைக்கு பலம் ..... கூ டி பேசுதல் சச்சரவை கொண்டுவரும் ..... கூ டி பேசினால் மனக்குழப்பம் தீரும் .....!!! கூ த்தாடி பிழைப்பது குற்றமில்லை ..... கூ த்தாடியே ஊர் சுற்றுவது கேவலம் ..... கூ த்து தமிழனின் பாரம்பரியம் ..... கூ ட்டத்தோடு கூத்தை ஆதரிப்போம் ....!!! கூ க்குரல் கூட்டத்தில் எழுந்தே தீரும் ..... கூ னல் முதுமையில் வந்தே தீரும் ..... கூ ந்தல் என்றால் உதிர்ந்தே தீரும் ..... கூ ட்டம் என்றால் குழப்பம் இருந்தே தீரும் .....!!!

உனக்கு வேதனையில்லை அதுபோதும்....!!!

உனக்கு வேதனையில்லை அதுபோதும்....!!! நல்லவேளை ..... உன்னை ஒருதலையாக .... காதலித்தேன் ..... நீ காதலனோடு வந்து .... நலம் விசாரித்தபோது ..... உதடு சிரித்தது .... இதயம் கண்ணீர் விட்டது ....!!! போகட்டும் விட்டுவிடு ..... எனக்கென்ன தோல்வியென்ன ....? புதிதா ...? நல்லவேளை உயிரே .... உனக்கு வேதனையில்லை ... அதுபோதும் என் காதலுக்கு ....!!! + ஒருதலை காதல் உறவுகளுக்காய் .... கவிப்புயல் இனியவன் தரும் . கவி மழை தொடர் 05

ஒருதலை காதலருக்கு .....!!!

ஒருதலை காதலருக்கு .....!!! எங்கிருந்தாலும் வாழ்க .... இது காதல் தோல்வியால் .... வரும் வார்த்தை .....!!! ஒருதலை காதலருக்கு ..... எங்கிருந்தாலும் வாழ்க ..... இதயத்தில் நிரந்தரமாய் .... எழுதபட்டிருக்கும் வாசகம் ..... இணையமாட்டோம் என்பது .... நிச்சய நிகழ்வுதானே ....!!! + ஒருதலை காதல் உறவுகளுக்காய் .... கவிப்புயல் இனியவன் தரும் . கவி மழை தொடர் 04

உன் புகைப்படத்தோடு பேசுகிறேன்

உன் புகைப்படத்தோடு பேசுகிறேன் எல்லோரும் காதலியோடு .... போசுவார்கள் ..உண்பார்கள் .... சுற்றி திரிவார்கள் .......!!! நான் .... உன் புகைப்படத்தோடு .... பேசுகிறேன்..சுற்றி திரிகிறேன் ..... ஒருதலை காதல் என்றால் ... ஒரு இதயம் தானே .... வலியை தாங்கவேண்டும் ....!!! + ஒருதலை காதல் உறவுகளுக்காய் .... கவிப்புயல் இனியவன் தரும் . கவி மழை தொடர் 03

உன் இதயத்துக்கு எப்போது புரியுமோ ....?

உன் இதயத்துக்கு எப்போது புரியுமோ ....? போதும் உயிரே .... உன்னை நினைத்து நான் ... ஏற்கும் இதய வலியின் வலி .... என்னை நீ ஏற்பாயா....? தூக்கி எறிவாயா ..........? உனக்கும் எனக்கும் இடையே .... உள்ள இடைவெளி -காதல் ....!!! நீயோ .... கோபுரத்தில் வாழ்பவள் .... நானோ கோபுரத்தின் முன் .... தரிசனத்துக்கு நிற்பவன் .... இதயத்துக்கு புரியவில்லை .... உன் அந்தஸ்து -என்னசெய்வது ....? கூலிக்கும் காதல் வரும் ....! உன் இதயத்துக்கு......  எப்போது புரியுமோ ....? + ஒருதலை காதல் உறவுகளுக்காய் .... கவிப்புயல் இனியவன் தரும் . கவி மழை தொடர் 02

ஒரு தலைக்காதல் கவிதை

ஒற்றை பூ தான் பூக்கிறது.....!!! உயிரே .... என் பிறந்தநாளுக்கு ..... ரோஜா செடியை தந்தாய் .... பிரியாத வயதில் நீ தந்தது .... பரிசு என்று நினைத்தேன் .... இன்றுவரை அது ஒற்றை பூ .... தான் பூக்கிறது.....!!! உன்  திருமண நிகழ்வில் ...... என்னை கண்டதும் .... உன் கடைகண்ணில்..... வழிந்த கண்ணீரில் புரிந்தது .... உன் ஒற்றை காதலின் வலி ....!!! + ஒருதலை காதல் உறவுகளுக்காய் .... கவிப்புயல் இனியவன் தரும் . கவி மழை தொடர் 01