தாயே என்னை மன்னித்துவிடு

உறுதியில்லாத வாழ்வில்.....
உறுதியான நேர்மையுடனும்.....
உறுதியான நியாயத்துடனும் ...
உண்மையாக வாழ்வாயாக ....
என் தாயின்வேண்டுகோள் ...!!!

ஆம் என்றேன்...!!!

உண்மை பேசினேன்....
உளருகிறான் என்றார்கள்....
நியாயம் சொன்னேன்...
நீ என்ன நீதிபதியா....?
வினா எழுப்பினார்கள்.....
உண்மை கூற ஓயாமல்...
உழைத்தேன் -ஆனால்....
கேட்பார் யாரும் இல்லை.....
வெடித்தது -இதயம்...
வேதனைப்பட்டேன்...
வெட்கப்பட்டேன்......!!!

ஓயவில்லை நான் ...!!!

சமூக சேவை செய்தேன்....
இந்த பூச்சாண்டி வேலையெல்லாம்.....
எங்களுக்கு காட்டாதே என்றார்கள்.....
சமூக சீர்திருத்தத்துக்காக....
சிந்தனை பேச்சு பேசினேன்....
மாரி தவளைபோல்...
கத்துகிறான் என்றார்கள்.....!!!

ஓரமாக இருந்து யோசித்தேன்...???

சமூக சிந்தனையை ...
சுய சிந்தனையாக்கினேன்..
நியாயம் இல்லாமல்...
காலில் விழுந்தேன்....
பிழைக்க தெரிந்தவன்....
என்று பாராட்டினார்கள்......!!!

பொருள் வந்தது...
பதவி வந்தது....
தலைவா,,,!!! தலைவா ,,,!!!
கூச்சல் இட......
ஒரு கூட்டமும்....
சேர்ந்தது........!!!

எல்லாம் வந்தது...
அன்னையின்...
ஆசைபோனது......!
மனிதத்தை விற்றுவிட்டு...
மனிதனாக நடிக்கிறேன்.....
என்றோ ஒருநாள்...
மனிதம் பிறக்கும்....
நானும் அம்மாவின்....
மகனாவேன் ...!!!

அதுவரை தாயே என்னை
மன்னித்துவிடு
உன்னைவிட இந்த உலகில்
மன்னிக்கும் நீதிமன்றம் இல்லை.....!!! 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்