இடுகைகள்

அம்மா கடுகு கவிதை 06

நினைத்தவுடன் கண்ணீரை வரவைக்கும் ஒவ்வொருவரின் ஜீவனும் அம்மாதான் ....!!! உடலின் ஒவ்வொரு அணுவும் துடிப்பது அம்மாவுக்கே ....!!! அம்மா கடுகு கவிதை

அம்மா கடுகு கவிதை 05

உயிருடன் ... இருக்கின்ற போது மட்டும் ... அழைப்பதில்லை ... அம்மா ....!!! மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும் இன்பத்துக்கும் துன்பத்துக்கும் அழைக்கும் உடன் சொல் .... ஒரே உலக சொல் -அம்மா ....!!! அம்மா கடுகு கவிதை

அம்மா கடுகு கவிதை 04

பிறந்தபோது... ஈரத்துடன் பார்த்த ... முகத்தையே - இறந்து ... கிடக்கும் போது இதே ... முகமாக பார்க்கும் ... ஒரே -ஜீவன் - அம்மா ....!!! அம்மா கடுகு கவிதை

அம்மா கடுகு கவிதை 03

எவராலும் முடியாது .. நொடிக்கு நொடி என்ன ... தேவை என்பதை... உணரும் மனோ தத்துவ .. ஞானதன்மை ...!!! அம்மா கடுகு கவிதை

அம்மா கடுகு கவிதை 02

துன்பம் வரும் போது இறைவனை நாடுகிறோம் அழைக்கிறோம் ....!!! சிறு முள்ளு குற்றிய .. நொடியில் அழைக்கிறோம் அம்மாவையே ....!!! அம்மா கடுகு கவிதை

அம்மா -கடுகு கவிதை

யார் சொன்னது ...? கூப்பிட்ட குரலுக்கு ... கடவுள் வராது என்று ...? கூப்பிட்டு பார் உன் அம்மாவை  ......!!! அம்மா கடுகு கவிதை 

துன்பத்தை தாங்க முடியாது ....!!!

துன்பத்தை என்னால் தாங்க முடியாது ....!!! என்னை  காக்க விரும்பினால் .. என்னவன் என்னை ... பிரியக்கூடாது ..... பிரிந்த பின் அவனுடன்  சேர்வது எளிதல்ல .....!!! என்னவனை எப்படியாவது  என்னில் இருந்து பிரிவதை  தடுத்தே ஆகணும்  இல்லாவிடில் அவனின்  துன்பத்தை என்னால் தாங்க  முடியாது ....!!! திருக்குறள் : 1155 + பிரிவாற்றாமை + ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்  நீங்கின் அரிதால் புணர்வு. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 75

நம்பியது தவறோ ....!!!

நம்பியது தவறோ ....!!! உன்னை எப்போதுமே .. பிரிந்திடமாட்டேன் பிரிந்திட மாட்டேன்  அடிக்கடி சொன்னவனே ....!!! அஞ்சாதே கண்ணே என்று .. ஆறுதல் சொன்னவனே ...!!! பிரிவு  நிச்சயமாகி விட்டதடா ... நீ கூறிய ஆறுதலை .. நம்பியது தவறோ ....!!! திருக்குறள் : 1154 + பிரிவாற்றாமை + அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்  தேறியார்க்கு உண்டோ தவறு. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 74

புரிந்துகொள்ள முடியவில்லை

புரிந்துகொள்ள முடியவில்லை  நான் படும் துயரம் ... அறிந்தவனே என்னவனே ... என் துயரத்தை அறியாதவன்  நீ அல்ல ..... அத்தனை அறிவும் அழகும்  உடையவன் - நீ நீ  திரும்பிவருவாய்  என்று நினைத்தாலும் ... உன் அறிவுக்கு ஆற்றலுக்கும்  புரிந்துகொள்ள முடியவில்லை  என்னவனே ....!!!  திருக்குறள் : 1153 + பிரிவாற்றாமை + அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்  பிரிவோ ரிடத்துண்மை யான். + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 73

என் உள்ளம் அச்சப்படுகிறது ...!!!

என் உள்ளம் அச்சப்படுகிறது ...!!! என்னவனின் பார்வை ....!!! உள்ளம் முழுதும் இன்பம் ... ஊற்றெடுப்பதாய் இன்புற்றேன் .. அவரின் பார்வையால் இன்பம்  காணாத பொழுதே இல்லை ...!!! பிரியப்போகிறார் .... என்கிறாரே - இப்போதான்  அவர் பார்த்த பார்வை  கொடுமையை ஏற்படுத்துகிறது .. எப்படி தாங்குவேன் என்று  என் உள்ளம் அச்சப்படுகிறது ...!!! திருக்குறள் : 1152 + பிரிவாற்றாமை + இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்  புன்கண் உடைத்தால் புணர்வு. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 72

என் மரண நொடிகள் ...!!!

என் மரண நொடிகள் ...!!! என்னவனே .....!!! உன் பிரிவை உயிர் தாங்காது  பிரிய மாட்டேன் என்பதை  என்னிடம் சொல் - நான்  அந்த செய்தியுடன் உயிர்  வாழ்வேன் .....!!! பிரிந்தே ஆகவேண்டும் ... என்றால் நீ திரும்பி வரும் .. வேளையில் உயிருடன் .. இருப்பவரிடம் சொல் உயிரே ... உன்னை பிரிந்து வாழும்  நொடிகள் என் மரண நொடிகள் ...!!! திருக்குறள் : 1151 + பிரிவாற்றாமை + செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்  வல்வரவு வாழ்வார்க் குரை. + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 71

இதயத்தில் ஏற்பட்ட காயம் ....!!!

திங்கள் முகத்தழகியே ... செவ்வாய் உதட்டழகி ... புன் சிரிப்பால் என்னை .. புண்ணாகியவளே....!!! உன்  உதட்டின் சிறு அசைவும் ... உறைய வைக்குதடி இரத்தத்தை... உன் உதட்டின் சாயம் -என்  இதயத்தில் ஏற்பட்ட காயம் ....!!! + + அவளின்  ஒவ்வொரு செயலும்  கவிதை (05)

இதயத்தை தொலைத்து நிற்கிறேன் ...!!!

ஏனடி விழியில் வாள்  வைத்திருகிறாய் ....? அணுவணுவாய் வெட்டி .. தொலைக்கிறாய் .... என் உடலை ...!!! ஒருபுறம் விழி பேசுகிறது .. மறுபுறம் புருவம் என்னை ... வா வா என்று அழைகிறது ... இரண்டு நாட்டு யுத்தத்தில் .. அகப்பட்ட ஜீவன் - நான்  உன் யுத்தத்தில்  இதயத்தை  தொலைத்து நிற்கிறேன் ...!!! + + அவளின்  ஒவ்வொரு செயலும்  கவிதை (04)

தேடி அழைக்கிறேன் ….!!!

நான் காதலிக்கிறேன் நீ வெறுகிறாய் காதல் நேர் மறையோ ….!!! முள்ளின் மீது தூங்குவதும் …. உன் நினைவோடு வாழ்வதும் ஒன்றுதான்…!!! நீ காதலோடு விட்ட மூச்சை காற்றில் தேடி அழைக்கிறேன் ….!!! கஸல் 724

மீண்டும் அழகு படுத்துவது ….?

என்னவளே … வெண் நிலாவின்  முக .. அழகியே  எதற்கடி …? முகமஞ்சல் பூசுகிறாய்…? அழகை எப்படி மீண்டும்  அழகு படுத்துவது ….? காற்றுக்கே அழகு … உன் கொழுசு ஓசையை  கேட்கவைத்ததே … நிலவுக்கே அழகு உன்  திருமேனியில் பட்டு  தெறிப்பது தான் …….!!! + + அவளின்  ஒவ்வொரு செயலும்  கவிதை (02)