ன்னை வைத்து ஒருநாள் துவிசக்கர வண்டியில் பயணம் செய்தபோது -நான் துவிசக்கரவண்டியை ஓடவில்லை அது காற்றில் பறந்ததாகவே உணர்ந்தேன் என்றும் நினையில் இருக்கும் அற்புத நிகழ்வு ....!!!
உன்னை திருவிழாவில் முதல் முதலில் பார்த்ததை இப்போது நினைத்தாலும் இனிமைதான் ....!!! நீயும் சுவாமியை பார்க்கவில்லை நானும் சுவாமியை பார்க்கவில்லை ஆனால் இருவரும் சுவாமிக்கு அருகில் தான் நின்றோம் உனக்கு நான் சுவாமி எனக்கு நீ சுவாமி போல் சரணடைந்து நின்றோம் ....!!!
காதலித்த எந்த இதயமும் கல்லாக இருந்ததில்லை காதலின் பின் அனைத்து இதயமும் பூவாக மாறிவிடும் ....!!! அந்த மேன்மை வரவில்லை என்றால் அது தூய்மையான காதல் இல்லை மென்மை தோன்றிய காதல் தோற்பதுமில்லை - காதலித்தபின் அவன் உலகையே நேசிக்கிறான்
உன் வீட்டுக்கு ஏதோ ஒரு பொய்யை சொல்லி வந்தேன் வந்த வேளை என் அதிஸ்ரம் மழையும் பெய்தது -நீ ஒரு துவாயை தந்து துவட்ட சொன்னாய் -துவட்டியது நான் ஆனால் நீயே துவட்டியதுபோல் உணர்வு -நீ தந்த துவாய் அல்லவா ...? எனக்கு ஒரு பரிசு தருவாயா ...? அந்த துவாயை நினைவு பரிசாக தருவாயா ....? (கதை கதையாய் கவிதையாய் )
உன்னிடம் கொடுக்க பூவோடு வந்தேன் -உன் முகம் பார்த்து பூ வெட்கப்பட்டது -என்னிடம் கெஞ்சியது என்னை அவளிடம் கொடுக்காதே கொடுக்காதே ...!!! பூவின் விருப்பத்தையே நிறைவேற்றினேன் ....!!! வண்டாக வருவோம் என்றால் கையில் இருந்த பூ சொன்னது வேண்டாம் அவளை தீண்டாதே வேண்டுமென்றால் என்னிடம் வா என்றது ...!!! (கதை கதையாய் கவிதையாய் )
உனக்கு கவிதை எழுத என்று தனியே ஒரு பேனாவும் காகிதங்களும் வைத்திருக்கிறேன் நான் கவிதை எழுத போகிறேன் என்றவுடன் அந்த பேனாவும் காகிதமும் முதலில் தம்மை காதலிக்கும் -அன்பே அதை பார்த்துகொண்டே இருக்கலாம் -அத்துணை இன்பம் ...!!!
நீ எண்ணை நான் தண்ணீர் எப்படி காதல் வரும் ...? நீ விறகாக மட்டும் இரு உனக்கும் சேர்த்து நானே எறிகிறேன் ....!!! மின்னியபோது உன் நினைவு இப்படித்தான் முதல் முதல் நீ சிரித்தபோது -நான் கருக்கினேன் ....!!! கஸல் 481
ஒன்றை இழந்து ஒன்றை ஒன்றை பெற்றேன் கவிதை வந்தது ...!!! கண்ணால் பார்த்தேன் இதயம் வந்தது -கண்ணீர் விட்டேன் கவிதை வந்தது உன் பெயரை பேனையால் தான் எழுதினேன் மின்னலாய் தெறிக்கிறதே...? ஏன் கோபமாய் இருக்கிறாய் ...? கஸல் 482
உனக்கு வாழ்க்கை வரும் என்றால் நான் வாழ்க்கையை இழக்கத்தயார் ....!!! உன் வீட்டில் வந்து நிற்கிறேன் உள்ளே வா என்று கூப்பிடாமல் தயங்குகிறாய் ....!!! வற்றாத கடல் நீர் உன் நினைவுகள் -ஆனால் கசக்கிறதே கடல் நீர் கஸல் ;483
உனக்கு என் இதயம் உதைப்பந்தாட்ட மைதானம் எப்படி வேண்டுமென்றாலும் உதை.....!!! என் தென்றலும் நீ சூறாவளியும் நீ நினைவுகள் சுனாமி ...!!! நீ என்னை விட்டு யாரிடம் போனாலும் உன் காதலன் நான் தான் கஸல் ;484
என் இதயத்தில் நுழைந்த நீ -ஏன் உன் இதயத்தில் நுழைய விடுகிறாயில்லை எட்டாத பழம் புளிக்கும் என்ற சிறுவயது கதை நினைவுக்கு வருகிறது நம் காதலில் ....!!! உனக்கு தந்த பூ என்னை பார்த்து ஏளனம் செய்கிறது ....!!! கஸல் 485