இதயம் உருகும் வார்த்தைகள் ஏக்கம் நிறைந்த பார்வைகள் நிலையில்லாமல் ஓடித்திரியும் கால்களும் மனமும் துடித்து துடித்து சாகும் உன் இதயம் -போதுமடா நீ படும் வேதனை உன்னை நான் எப்போதோ நினைத்துவிட்டேன் ....!!!
காதல் இனிமைதரும் இனிமை நினைவு தரும் காதல் பிரிவு வலிதரும் வலிகள் வரிகள் தரும் வரிகள் கவிதை தரும் கவிதை கற்பனை தரும் கற்பனை புதுமைதரும் புதுமை இளமைதரும் ...!!!
நீ அழகாக ஆணழகன் என் இதயத்தை உடைத்தவன் அரும்பிய மீசையில் காந்த கண்ணில் என்னை தூண்டில் போட்டவன் - நீ பருவத்தில் வரும் காதலில் மயங்கிடாமல் பக்குவத்தால் காதல் வசப்படுத்துபவன்.....!!!
என்னை திருடியிருந்தால் போனால் போகட்டும் என்று விட்டிருப்பேனடா உள்ளம் கவர்கள்வனே இதயத்தை மட்டுமல்லா திருடிவிடாய் - உயிர் உன்னிடம் வெறும் உடல் என்னிடம் இருந்து என்ன பயனடா ....? வந்து விடு என்னை கொண்டு செல் -இல்லையேல் என் இதயத்தை தந்துவிடு ....!!!
என்ன துணிவடா உனக்கு பெண் கேட்டு வீட்டுக்கு வரப்போகிறேன் என்று அடம்பிடிக்கிறாய் ...!!! பெண் கேட்டு வரமுதல் என்னை புரிந்து கொள் காதல் உடனடியாக நிறைவேறினால் இன்பமில்லை -வாடா சிலநாட்கள் காரணமே இல்லாமல் சண்டையிடுவோம் வேண்டுமென்றே கோபிப்போம் காதலில் ஊடல் இல்லாவிட்டால் இரண்டு சடப்பொருள் காதலிப்பதுபோல் ஆகிவிடும்
உன்னுடன் பேசும் போது.... என் தாய்மொழியின் .... இன்பம் தெரிகிறது .....!!! எடுத்த வார்த்தைகளை உன்னையும் காதலையும் வர்ணிக்கும் போதுதான் காதலில் ஆழமும் -என் தாய் தமிழின் ஆழமும் எல்லை யற்றிருப்பதை உணர்ந்தேன் கண்ணே
அறிவான ஒருவனை அறிவிலியாக்கியது உன் அழகும் சிரிப்பும் அதனால் தான் எல்லாவற்றையும் இழந்து உன்னை காதலிக்கிறேன் மனதை மட்டும் அல்ல என் வாழ்க்கையையும் கொன்றவள் நீ
வணக்கம் *********** நட்புகளே எல்லா வகை கவிதையும் கேட்பதற்கேற்ப என்னால் முடிந்த வரை எழுதுகிறேன் -உங்கள் ரசனைக்கும் ஆர்வத்துக்கும் என்று நாம் தலைவணங்குகிறேன் கவிதை எனது துணைப்பணியே நன்றி ;மீண்டும் சந்திப்போம்