இடுகைகள்

சிந்தித்து சிரிக்க சென்ரியூ

சிந்தித்து சிரிக்க சென்ரியூ --------------- நண்பர்கள் கடும் சண்டை காயம் ஏற்படவில்லை முகநூல் நட்பு ---------------- காதலர் மனமுறிவு மணிக்கணக்கில் வாக்குவாதம் தொலைபேசி நிறுவனம் மகிழ்ச்சி ---------------- சுவாமி தரிசனம் நூற்றுக்கணக்கான பக்தர் குவிந்தனர் ஆயிரக் கணக்கான படைகள் பாதுகாப்பு ---------------- பொய் சொன்னால் மெய் மறக்கும் காதல் -------------- கார் கதவை திறந்து சலுயூட் அடித்தான் காவலாளி இறங்கியது நாய் ^^^ கவிப்புயல் இனியவன்

காதல் இல்லாமல் வாழ்வது வாழ்வா...?

காதல் இல்லாமல் வாழ்வது வாழ்வா...? ----------------------- கோயிலில்லா ஊரில் ... குடியிருக்கலாம் .... காதல் இல்லா ஊரில் ... குடியிருக்காதீர்கள்...! உப்பில்லா பண்டம் ... குப்பையிலே .... காதல் இல்லா இதயம் .... குழியினிலே .....! ------- அதிகாலையில் .... காதலோடு துயிலெழுங்கள்.... அதுவே உன்னத தியானம் ...! இரவில் .... காதலோடு உறங்குங்கள் .... அதுவே உன்னத நிம்மதி ....! ------- எங்கும் ... நிறைந்த காதலே .... நீ என்னோடு இருக்கிறாய் .... என்ற தைரியத்தில்தான் .... கவிஞனாக இருக்கிறேன்....! நீதிமன்ற கூண்டில் நின்று .... சொல்வதெல்லாம் உண்மை.... உண்மையை தவிர வேறு.... எதுவுமில்லை -என்று ... சொல்வதுபோல் -நானும் ... உறுதிமொழி சொல்கிறேன்....! ^^^ கவிப்புயல் இனியவன்

கவிப்புயல் - ஹைகூக்கள் - சென்ரியூகள்

---------------------------------------- சமூக அவலக்ஹைகூக்கள் கவிப்புயல் இனியவன் --------------------------------------- அருந்ததி பார்த்தவள் அருந்தி இறந்தாள் வரதட்சனை கொடுமை ^^^ வயிற்றில் சுமந்தவளால் கைகளால் சுமக்க முடியவில்லை புத்தகப்பை ^^^ வாழ்கையும் இழந்தாள் தொழிலையும் இழந்தாள் விதவை பூக்காரி ^^^ ----------------------------------- சமூக அவலம் சென்ரியூ கவிப்புயல் இனியவன் ----------------------------------- குழந்தைகளுக்கு தாய்ப்பால் அவசியம் டாக்டர் அறிவுரை பசுகன்று இழுத்து கட்டபப்டுகிறது ^ நேர அட்டவனனைப்படி சிறையில் அடைக்கப்படுகிறார்கள் பள்ளி மாணவர்கள் ^ உயிரை கொன்று அலங்கரிக்கப்படுகிறது பட்டுப்புடவை ^ நகரத்தில் கட்டண கழிப்பிடம் கட்டணமின்றி தூங்கலாம் நடைபாதை ^ பகலிரவு ஆட்டம் இரவு சூதாட்டம் பகல் கிரிகட் ஆட்டம்

தந்தை....! அப்பா...! தந்தை.....!

தந்தை....! அப்பா...! தந்தை.....! ----------------------------------- அம்மாவை ....... இழந்து நான் வேதனைபடுவதை..... காட்டிலும் அம்மா இல்லாத காலத்தில்..... அப்பா படும் வேதனையை தான்..... தங்க முடியவில்லை.........! ^^^ பிள்ளை தான் படும்வேதனையை....... அனுபவிக்க கூடாது என்பதற்காய்..... தன் தொழிலையே மறைப்பவர்..... தந்தை.....! ^^^ தந்தையின் தியாகம்....... தந்தை இறந்தபின் தான்....... முழுமையாக தெரிகிறது...... தந்தையாய் இருக்கும் போது..... ரொம்ப வலிக்கிறது...... தந்தைகாய் செய்ததென்ன...? ^^^ கவிப்புயல் இனியவன்

உயிரே .! உனக்காய்..! மூன்று வரிகள்....!

உயிரே .! உனக்காய்..! மூன்று வரிகள்....! ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ இதயத்தில் குடியிருப்பவளே.... மெதுவாக மூச்சு விடுகிறேன் ..... மூச்சுகாற்று சுட்டுவிடகூடாது....! ------------------------------- கல்லை செதுக்கினேன் உன் உருவம் கண்ணால் செதுக்கினேன் நம் காதல் இதயம் சலவை கல்லாய் அடிவாங்குகிறது ...! ------------------------------- காதலித்து பார் உள்ளம் சுத்தமாகும்.... கவிதை எழுது உலகம் சுத்தமாகும்...... இரண்டையும் செய்பவன் ஞானி.....! ------------------------------- உலக போதையிலேயே கொடூரம்....... உன் போதை கண் தான் -இன்னும்....... போதையில் இருந்து மீளவில்லை........! ------------------------------- சிவன் கண் திறந்தார் நக்கீரன் எரிந்தார் நீ கண் திறந்தாய்  நான் எரிந்தேன் நீ எப்போது என்னை உயிர்ப்பிப்பாய்.......? ------------------------------ நீ வேறு நான் வேறு இல்லை வாழ்க்கை வேறு காதல் வேறுமில்லை உன் நினைவு வேறு உணர்வு வேறுமில்லை --------------------------------------- நான் ஒருதலை காதலாக இருந்திருந்தால் வலியை உனக்கு தந்திருக்க மாட்டேன் இர...

என் அன்புள்ள ரசிகனுக்கு

என் அன்புள்ள ரசிகனுக்கு கவிப்புயல் எழுதும் கவிதை --------------------------------------- ஒரு கவிஞன் தன் வலிகளை.... வரிகளாய் எழுதுகிறான் .... ஒரு ரசிகன் அதை ஆத்மா ... உணர்வோடு ரசிக்கிறான் ..... கவிதை அப்போதுதான் ... உயிர் பெறுகிறது .....! # என் உயிரை உருக்கி .... நான் எழுதும் கவிதைகள் என்னை ஊனமாக்கி மனதை ... இருளாக்கி இருந்தாலும் .... கவிதைகள் உலகவலம் வருகிறது ... உலகறிய செய்த ரசிகனே ... உன்னை நான் எழுந்து நின்று .... தலை வணங்குகிறேன் .....! # என்இரவுகளின் வலி...... விழித்திருந்த கண்களுக்கு தெரியும் .... பகலின் வலி அவள் எப்போது .... இரவில் கனவில வருவாள் ....? ஏங்கிக்கொண்டிருக்கும்..... இதயத்துக்கு புரியும் ..... ரசிகனே உனக்குத்தான் புரியும் .... நான் படுகின்ற வலியின் வலி ......! # ஒருதலையாக காதலித்தேன் ... காதலின் இராஜாங்கம் என்னிடம் .... காதலை சொன்னேன் .... என் இராஜாங்கமே சிதைந்தது ..... காதல் ரகசியத்தில் ஒரு துன்பம் .... பரகசியத்தில் இன்னொரு துன்பம் .... காதல் என்றாலே இன்பத்தில் துன்பம் .... கண்டு கொல்லாதே ரசிகனே .....! # என் காதலுக்கு ...

கவிப்புயல் இனியவன் காதல் வெண்பா

---------------- கவிப்புயல் இனியவன் காதல் வெண்பா ---------------- உனக்குள்ளே நானிருப்பதால் ,இங்கு எனக்குள்ளே மூச்சு வெந்து துடிக்குதடி தனியாக பேசி இன்பம் காணாமல் துணையாக பேசி இன்பம் காண்போம் வா -------------------------------------! வரைந்தேன் கண்ணால் உருவத்தை நானே கரைந்தேன் அவள் நினைவுக்குள் தானே துடி துடிக்குது ஏக்கத்தோடு இதயம் அடிக்கடி சமாதானம் சொல்லுது மனம் -------------------------------------! எனக்குள்ளே உயிராய் கலந்திருப்பதால்,இதயம் தனக்குள்ளே பேசி இன்பம் காண்கிறது யாமிருக்க பயமேன் என்கிறார் இறைவன் நானிருக்க பயமேன் நம்காதலுக்குயிரே ------------------------------------! தேடினேன் நீ வரும் வழினெடுகிலும் வாடினேன் உன் நிழல்கூட தெரியாததால் துடிக்கின்ற இதயம் துடிக்க மறந்து வடிக்கின்ற கண்களாய் மாறிவிட்டதடி -----------------------------------! & காதல் வெண்பா கவிப்புயல் இனியவன்

மாட்டிறைச்சிக்கு தடை

மரணதண்டனை ரத்து மாடுகளும் சந்தோசம் மாட்டிறைச்சிக்கு தடை ^ குழந்தை தொழில் சட்டவிரோதம் மூடை சுமக்குறது குழந்தை புத்தகப்பை ^ பழையன கழிதல் புதியன புகுதல் இலையுதிர்காலம் ^ ஹைக்கூ கவிதை ♥♥கவிப்புயல் இனியவன்♥♥ 

நான் எழுதுவது கவிதை இல்லை

நான் எழுதுவது கவிதை இல்லை ----------------------------------------------- கண்டதையும் கேட்டதையும்.... கண்டபடி கிறுக்குகிறேன்....... யார் சொன்னது நான்............... எழுதுவது கவிதை என்று ....? பயணம் பல செல்கிறேன்..... பயணத்தில் பல பார்க்கிறேன்..... பட்டதை  பார்த்த அனுபவத்தை....... வாழ்க்கை கவிதை  தலைப்பில்..... கண்டபடி கிறுக்குகிறேன்...... யார் சொன்னது நான்........ எழுதுவது கவிதை என்று ....? மரம் வெட்டும் போது...... மனதில் இரத்தம் வடியும்....... எழும் என் உணர்வை...... சமுதாய கவிதை  தலைப்பில்...... கண்டபடி கிறுக்குகிறேன்....... யார் சொன்னது நான் எழுதுவது கவிதை என்று ....? அடிமாடாக அடித்து..... அடுத்த வேளை உணவுக்கு...... அல்லல் படும் குடும்பங்களை....... பார்ப்பேன் மனம் வருந்தும்.... பொருளாதார கவிதை தலைப்பில்..... கண்டபடி கிறுக்குகிறேன்.... யார் சொன்னது நான்........ எழுதுவது கவிதை என்று ....? காதோரம் கைபேசியை வைத்து..... கண்ணாலும் சைகையாலும்...... தன்னை மறந்து கதைக்கும்..... காதலரை பார்க்கிறேன்....... காதல் கவிதை  தலைப்பில்.... கண...

சின்ன சின்ன காதல் வரிகள்

சின்ன சின்ன காதல் வரிகள் -------------- என்ன கொடுமை பார்த்தாயா ......? உனக்குள் நானும் .... எனக்குள் நீயும் .... இருந்துகொண்டு ....... பிரிந்து விட்டோம் என்கிறோம்........! ^^^ நான் உயிரோடு ... இறக்க விரும்புகிறேன் ... தயவு செய்து என்னை .... காதலித்து விடு ....! ^^^ கண்ணில் காதலாய் ... விழுந்தாய் ... கண்ணீரால் நனைகிறது ... இதயம் ....! ^^^ நீ மறுத்தது ... என் காதலை இல்லை ...  ஊசலாடும் உயிரை .... ஒருமுறை நினைத்து பார் ....! ^^^ உன் வரவு என் பிறப்பு .... உன் பிரிவு என் இறப்பு .... என் நினைவஞ்சலியில்.... வாசகங்கள் ....! ^^^ கவிப்புயல் இனியவன்

அனைத்தையும் காதல் செய்கிறேன்

அனைத்தையும் காதல் செய்கிறேன் ---------------------------------------------- கோபப்படாமல் இருப்பதற்கு....! வெறுப்பில்லாமல் வாழ்வதற்கு....! பொறாமைப்படாமல் இருப்பதற்கு...! மனக் கவலையின்றி வாழ்வதற்கு ...! உடல் நலத்தோடு இருப்பதற்கு...! அமைதியோடு வாழ்வதற்கு...! மகிழ்வோடு வாழ்வதற்கு...! உழைத்து கொண்டே இருப்பதற்கு...! அறிவை தேடிக்கொண்டே இருப்பதற்கு...! தியானித்துக்கொண்டு இருப்பதற்கு...! எல்லாவற்றையும்காதலித்து கொண்டு ....... வாழ்வோமாக.......................! காதல் தனித்து பால்கவர்ச்சியல்ல.......! ^^^ கவிப்புயல் இனியவன் அனைத்தையும் காதல் செய்கிறேன்

நொடிதான் பார்த்தாள்....

கண்ணால் பேசி.... காலமெல்லாம் .... காத்திருக்கவைக்க .... என்னவளால் தான் .... முடியும் .....! சில ...... நொடிதான் பார்த்தாள்.... பல நொடிகள் பதறவைத்தாள்.... சிதறி விட்டது இதயம் ....! ^^^ கவிப்புயல் இனியவன்

காதல் தோல்வி கவிதைகள்

எதற்காக என்னை .... காதல் செய்ய தூண்டினாய் ...? எதற்காக என்னை உனக்காய் ... ஏங்க வைத்தாய் .....? எதற்காக என் நிம்மதியை .... தொலைத்தாய் .....? எதற்காக என்னை பிரிந்தாய் ...? எதற்காக உன் வலியையும் .... நான் சுமக்கிறேன் ....? இதற்கெல்லாம் காரணம் ... காதல் என்றால் அதுவும் .... எதற்காக என்றே தெரியவில்லை ...? ^^^^^ காதல் தோல்வி கவிதைகள் ------------ மறுத்தால் மன்னித்துவிடுவேன் மறந்தால் மரினித்து விடுவேன் ------------ கவிப்புயல் இனியவன்

அழகையே அலங்கரிப்பேன் ...!

அ அழகியே அன்பரசியே ... அழகுக்கெல்லாம் அழகியே... அற்புதங்களில் ஒன்றாய் உன் ... அழகையே அலங்கரிப்பேன் ...! ஆ ஆருயிரே ஆனந்தியே .... ஆறறிவை அழித்தவளே ... ஆயுளை அரிதாக்கியவளே... ஆயுள் வரை ஆதரிப்பேன் ....! இ இனியவளே இன்பரசியே .... இதயத்தில் இடம் பிடித்தவளே ... இரண்டர என்னோடு வாழ்பவளே ... இல்லறத்தில் நல்லறம் காண்பேன் ...! ஈ ஈரவிழி ஈஸ்வரியே ... ஈன்ற தாய் போல் என்னை ... ஈரத்துடன் காப்பவளே .... ஈரேழு ஜென்மம் நீதானடி .....! உ உயிரே உமையவளே .... உயிராய் நினைப்பவளே... உயிரில் கலந்தவளே ... உலகம் கவரும் காதலர் நாம் ...! ஊ ஊன் உறக்கம் இன்றி என்னை ... ஊர் ஊற்றாய் சுற்ற வைத்தவளே ... ஊஞ்சல் ஆடுதடி உன் நினைவுகள் ... ஊரார் ஆசியுடன் வாழ்வோம் நாம் ....! எ என் இதய எழில் அரசியே ... எதிர் பாராமல் என்னை சந்தித்தாய் எதிர்காலமாகிவிட்டாய் -நீ எத்தனை இடர் வந்தாலும் நீ தான் ...! ஏ ஏகாந்தம் போற்றும் ஏஞ்சலே ... ஏற்றமடைய வைத்தவளே .... ஏற்ற துணையாய் வந்தவளே ... ஏற்றமான வாழ்க்கை வாழ்வோம் ....! ஐ ஐம்பொன் சிலை அழகியே .... ஐம்பொறியையும் அடக்கியவளே... ஐயம் இன்றி வாழ்வும் நாம்...

மந்திரமில்லை

முதல் ........ காதல் மட்டுமல்ல ... தந்தையிடம் முதல் அடி ஆசிரியரிடம்  முதல் திட்டும் மறக்க முடியாதவையே ...! தந்தையே நீர் திடீர் என எதற்காக கோபப்பட்டீர் ..? எதற்காக அந்த அடி அடித்தீர் ..? என்றெல்லாம் எனக்கு இன்றுவரை -புரியவில்லை ...! ஆனால் ..... அந்த அடிதான் எனக்கு..... கடைசி அடி என்பது....... வாழ்க்கையில் மறக்க ..... முடியாத அடி ....! ----------- தந்தை சொல் மிக்க மந்திரமில்லை கவிப்புயல் இனியவன் ------------