இடுகைகள்

குறுந்தகவல் கவிதை

வாள் விழியாள் என்பதால் தானோ இதயத்தை கிழித்தாயோ. ^^^ காதல் என் கவிதைக்கு அழகு கவிதை என் காதலுக்கு அழகு ^^^ சுவாசிக்கும் போது மூச்சு கணத்தால் அதுவே காதல் ^^^ காதலில் கண் நாணயத்தின் இருபக்கம் கண்ணீரும் கனவும் ^^^ நீ விளக்கை அணைக்கும் போதெல்லாம் நான் இங்கே இருளில் & கவிப்புயல் இனியவன் ஒருவரியில் கவிதை வரி குறுந்தகவல் கவிதை

SMS கவிதை வரி

ஆழமாக காதலித்துப்பார் காதல் வலி புரியும் ^^^ காதல் சந்தோசத்திலும் காதல் வலி உண்டு ^^^ சொர்க்கத்தை பார்க்க ஆசைப்பட்டால் காதல் செய் ^^^ காதல் செய்தபின் இதயதுடிப்பு கூட பாரமாய் தெரியும் ^^^ உன்னை போடா என்பதும் என்னை போடி என்பதும் காதலில் அழகு ^^^ & கவிப்புயல் இனியவன் ஒருவரியில் கவிதை வரி SMS கவிதை வரி 

ஒருவரியில் காதல்கவிதை வரி

" என் இதயத்தை பறித்தாள் அவள் இதயம் என்னோடு அழுதது " ------- " உயிராய் காதல் செய்தேன் இதயம் இறந்துவிட்டது " ------- " தோற்ற காதலின் இதயம் கல்லறையை சுமக்கும் " ------- "கண்ணால் காதல் செய்தேன் இதயத்தால் அழுகிறேன் " ------- "கண்ணிலும் இதயத்திலும் காதலால் காயப்பட்டு விட்டேன்" ------- " கவிதைதான் காதலின் சுவர்க்கமும் இன்பமும் " ------- " உன்னோடு வாழ்வதை விட கவிதையோடு வாழ்வது அழகு " ------- " காதலில் தோற்றேன் கவிதையில் வென்றேன் " ------- "இதயத்துக்கு பயிற்சி காதலும் கவிதையும் " ------- "காதலை ஆரம்பித்தேன் கவிதை நூல் பிறந்தது " ------- "இரண்டு இதயம் மெல்ல சாவது காதல் தோல்வி " ---- "இரண்டு இதயத்தில் ஒரு இதயம் மெல்ல சாவது காதல் ஏமாற்றம் " ----- "இரண்டு இதயத்தில் ஒரு இதயம் கண்ணீர் விடுவது ஒருதலை காதல் " ----- "இரண்டு இதயத்தின் நீண்ட தூக்கம் கல்லறை காதல் " ----- "இரண்டு இதயத்தின் புரிந்துணர்வு காதல் பிரிவு " + கவிப்புயல...

குறுங்கவிதைகள்

அவள் ஒரே ஒருமுறை.... கண் அசைத்தாள்..... ஆயிரம் முறை ..... கவிதை எழுதி விட்டேன்...... ஒரே ஒருமுறை ..... சிரித்தாள் நான் .... சிதறிய தேங்காய்... ஆகிவிட்டேன்.....!!! ^ கவிப்புயல் இனியவன் குறுங்கவிதைகள் ^ என் கவிதையை நீ காதலிக்கவில்லை .... அதனால் தான் உனக்கு ..... காதல் வரவில்லை .....!!! உன் நண்பிகள் என் .... கவிதையை ...... காதலித்ததால் அவர்கள்... அழகான காதலை பெற்று .... விட்டார்கள்..... தனக்கு உதவாட்டிலும்.... பிறருக்கு உதவும் உன் .... இரக்க குணத்தை மதிக்கிறேன் ....!!! ^ கவிப்புயல் இனியவன் குறுங்கவிதைகள்

கொஞ்சம் கொஞ்சமாய்.இறக்கிறேன்.....!!!

உன்னை .... பிரிந்து வாழ முயற்சிக்கிறேன் ....... மறந்து வாழவும் முயற்சிக்கிறேன் ..... அதனால் நான் அடிக்கடி இறந்து .... பிறக்கிறேன்..........!!! உன்னை...... பிரிந்து வாழ்வதை காட்டிலும்..... இறந்துவிடுவது நன்று என்று ... அடிக்கடி ஜோசிப்பேன்..... உன்னை அது காயப்படுத்தும்.... உன் வாழ்நாள் முழுவதும்.... உன்னை கொன்று விடும் என்பதால் ..... நான் கொஞ்சம் கொஞ்சமாய்.... இறக்கிறேன்.....!!! ^ வலிக்கும் இதயத்தின் கவிதைகள் கவிப்புயல் இனியவன்

எனக்கு உயிர் .........!!!

ஆசையாய் வாங்கி கொடுத்த.... கொலுசை கழற்றி தந்துவிட்டாய்...... ஆசையாய் எழுதிய கவிதையை ...... கிழித்தெறிந்துவிட்டாய்...... இவை உனக்கு சடப்பொருள்..... இவையெல்லாம் எனக்கு உயிர் .........!!! கண்ணுக்குள் இருக்கும் - நீ எப்போதும் மறையகூடாது .... என்பதற்காக கண்ணே மூடியதில்லை.... மூச்சு பயிற்சிசெய்ததில்லை .... இதயத்தில் இருக்கும் நீ ..... மூச்சில்லாமல் தத்தளிப்பாய்.... என்பதற்காக......................!!! ^ வலிக்கும் இதயத்தின் கவிதைகள் கவிப்புயல் இனியவன்

முழு முதல் கடவுள் .....!!!

என் சராசரி அறிவை ..... சாதனையாளர் கற்கும் .... கூடத்தில் என்னையும் ..... கற்பிக்கவைத்து ..... என்னை இன்று ஒரு ..... சாதனையாளனாக்கிய ..... என் ஆசானே எனக்கு ...... முழு முதல் கடவுள் .....!!! & கவிப்புயல் இனியவன் இவை எனக்கு சிறந்தவை -07 தொடரும் ...

ஹைக்கூக்கள் மூன்று

என் சந்ததிக்காக குழிதோண்டுங்கள் இரந்து மன்றாடி கேட்கிறது மரம் ^^^ ஹைக்கூ 01 ^^^ முதல் தேதிமுதல் வளர்பிறை பதினைந்தாம் தேதி முதல் தேய்பிறை மாத சம்பளம் ^^^ ஹைக்கூ 02 ^^^ வாழ்க்கை ஒரு சுமை குழந்தை வயதில் கற்பிக்கப்படுகிறது பள்ளி புத்தகப்பை ^^^ ஹைக்கூ 03 கவிப்புயல் இனியவன்

பள்ளி புத்தகப்பை-ஹைக்கூ

வாழ்க்கை ஒரு சுமை குழந்தை வயதில் கற்பிக்கப்படுகிறது பள்ளி புத்தகப்பை ^^^ ஹைக்கூ கவிப்புயல் இனியவன்

ஹைக்கூ

என் சந்ததிக்காக குழிதோண்டுங்கள் இரந்து மன்றாடி கேட்கிறது மரம் ^^^ ஹைக்கூ கவிப்புயல் இனியவன்

சிற்பமாக வடித்திருந்தால்.....

உனக்கு ..... கவிதை எழுத்தியத்துக்கு.... பதிலாக ஒரு கல்லை ..... சிற்பமாக வடித்திருந்தால்..... கை மட்டுமே வலித்திருக்கும் .... இப்போ இதயமும் சேர்ந்து .... வலிக்கிறது ......!!! ^ கவிப்புயல் இனியவன் கடந்த காதல் - குறுங்கவிதை

கடந்த காதல் - குறுங்கவிதை

உன் ..... கண் அசைவில் மதி ...... இழந்தவன் நான் ..... நீ கண்ணை அசைத்தாய் .... என் வாழ்க்கையே அசைந்து ..... விட்டது ..................!!! ^ கவிப்புயல் இனியவன் கடந்த காதல் - குறுங்கவிதை 

ராஜ நடை .........!!!

நாற்பது பேர் கொண்ட ..... வகுப்பறையில் ..... முதல் மாணவனாய் வந்து .... பரிசுபெற்று மேடையை .... விட்டு இறங்கியபோது .... நான் நடந்த நடை தான் எனக்கு ...... ராஜ நடை .........!!! & கவிப்புயல் இனியவன் இவை எனக்கு சிறந்தவை -10 தொடரும் ...

மல்யுத்த வீரன் நினைப்பு ......!!!

எனக்கு வயது பத்து ..... என் தம்பிக்கு வயது எட்டு ..... தம்பியை அடித்த அவன் .... நண்பனை நான் அடித்தேன் .... அந்த நாள் நான் ஏதோ.... மாவீரன் போல் நினைத்த .... நாள் - எனக்கு மனதில் ... மல்யுத்த வீரன் நினைப்பு ......!!! & கவிப்புயல் இனியவன் இவை எனக்கு சிறந்தவை -09 தொடரும் ...

சொர்க்கத்தில் தூங்கிய நாள் .....!!!

பசிக்கும் குழந்தையின் ..... அழுகுரல் கேட்க்காமலும் ..... கை நீட்டி பசிக்காக ..... உதவி கேட்காத ... முதியவரையும் ....... தெருவில் காணாத நாள் .... எனக்கு ..... சொர்க்கத்தில் தூங்கிய நாள் .....!!! & கவிப்புயல் இனியவன் இவை எனக்கு சிறந்தவை -08 தொடரும் ...