இடுகைகள்

பௌதீகவியலும் காதல்விதியும் ....!!!

பௌதீகவியலும் காதல்விதியும் ....!!! சடப்பொருட்கள் யாவும் .... தம் திணிவுக்கு நேர் விகிதத்திலும் .... தமக்கிடையே உள்ள தூரத்தின் ... வர்க்கத்துக்கு நேர்மாறு விகிதத்திலும் .... ஒன்றை ஒன்றை ஈர்க்கும் ... நியூட்டனின் விதி .....!!! இதயமுள்ள இரு வேறுபட்ட .... பாலினங்கொண்ட உயிரினங்கள் .... நேருக்கு நேராக நோக்கி .... ஒருவரின் இதயத்தை மற்றவரிடம் ... பரிமாற்றி வாழ்வதே ..... காதலின் விதி .......!!! ஒரு  எதிர் தாக்கத்துக்கு சமமான .... மறுதாக்கம் உண்டு ..... நீ தரும் ஒவ்வொரு தாக்கத்துக்கும் .... காதலிலும் மறுதாக்கம் உண்டு ......!!!

விஞ்ஞானமும் காதல் கவிதையும்

வேதியியலும் காதலும் ஐதரசனின் இரண்டு பங்கும் ....  ஒட்சிசனின் ஒருபங்கும் ....  சேர்ந்த கலவையே  நீர் -H2O .....!!!  என்னுடைய  நினைவுகளையும் .....  உன்னுடைய நினைவுகளையும் ....  வேதனையுடன் சுமந்து கொண்டு ....  இருக்கும் நம் காதல் ...  வேதியல் சூத்திரம் தான் ....!!!  வேதியல் வகுப்பறையில் ....  வேதியல் படித்தானோ ....  தெரியவில்லை ....  வேளை தவறாமல் ...  உன் வேடிக்கைகளை  ரசித்திருக்கிறேன் .....!!!  வேதியலில் ...  ரேடியத்தை கண்டு பிடித்த ....  மேரி கியூரி குடும்பம் ....  வேதனையான மரணத்தை ....  அடைந்தார்கள் ....  புற்றுநோய் ......!!!  காதலும் ....  ஒரு புற்றுநோய் ....  உன் நினைவுகளால் நானும் ...  என் நினைவுகளால் நீயும் ....  கொஞ்சம் கொஞ்சமாக ....  இறந்து கொண்டிருக்கிறோம் ....!!!

மலர் வளையம் ...

கண்ணோடு.... ஆரம்பித்த காதல் .... கண்ணீரோடு .... வாழ்கிறது .....!!! மலர் கொடுத்து .... காதல் செய்தேன் .... மலர் வளையம் ... வரும்போல் இருக்கிறது ....!!! + காதல் சிதறல்  கே இனியவன்

மலர்வளையம் தருவாய் ....

நீ  தப்பு செய்ய போவதில்லை  நான் விரும்பியதையே ... செய்தாய் .....!!! நான் .... மலர் மாலை எதிர்பார்தேன் .... நீ  மலர்வளையம் தருவாய் .... போலிருக்கிறது ....!!! + காதல் சிதறல்  கே இனியவன்

அனுபவிக்க வேண்டும் ....!!!

இன்னுமொரு ஜென்மம் .... பிறந்து வந்தது உன்னை .... காதலிக்க வேண்டும் .....!!! நீ  பிரிந்து செல்ல வேண்டும் .... வலியின் வலியை.... அடுத்த ஜென்மமும் .... அனுபவிக்க வேண்டும் ....!!! + காதல் சிதறல்  கே இனியவன்

பிரிவு உணர்த்தியது ....!!!

பிறப்பு எத்தனை .... வலி என்பதை தாய்மை உணர்த்தியது ....!!! இறப்பு எத்தனை .... வலி என்பதை உன் .... பிரிவு உணர்த்தியது ....!!! + காதல் சிதறல்  கே இனியவன்

காதல் சிதறல் - கே இனியவன்

நீ  முகத்தால் ... வெறுக்கிறாய் .... இதயத்தால்....  அழைக்கிறாய் ..!!! பாவம்  உன் கண்கள் ... படாத பாடு படுகிறது ....!!! + காதல் சிதறல்  கே இனியவன்

அத்தனை நாள் வாழ்வேன் ...!!!

என்னவனே .... உயிரற்ற என் உடலை .... உயிருள்ள உடலாக்குவது .... உன் கவிதைகள் தான் ...!!! எனக்காக .... எத்தனை கவிதைகள் .... எழுதினாயோ ....? அத்தனை நாள் வாழ்வேன் ...!!! + காதல் சிதறல் கே இனியவன்

மரணத்தின் பின் உணர்வாய் ....!!!

என்னவனே .... எதை வேண்டுமென்றாலும் .... பேசு... ஏசு....நினை .... உன்னை தவிர நான் ... எதையும் நினைத்ததில்லை ... என்பதை என்  மரணத்தின் பின் உணர்வாய் ....!!! + காதல் சிதறல் கே இனியவன்

காதல் இறக்கை ....!!!

என்னவன் .... ஒரு சிரிப்பு சிரித்தான் ... இதயத்தில் முளைத்தது .... காதல் இறக்கை ....!!! என்னவனே ... எங்கு சென்றாய் ...? உன் நினைவுகளை ... அடைகாக்கும் பறவையாய் .... இவள் ......!!! + காதல் சிதறல் கே இனியவன்

எப்போதடா ... புரிவாய் ....?

கண்ணால் காதல் .... தந்தவனே ..... கவிதையால் .... வலிகளை தருகிறான் ....!!! உனக்கு வலித்தால் ... எனக்கு வலிக்கும் ... என்று எப்போதடா ... புரிவாய் ....? + காதல் சிதறல் கே இனியவன்

எனக்கு தலைவிதி....!!!

கற்கண்டாக இருந்த .... இதயத்தை உப்புக்கல்.... ஆக்கிவிட்டாய் .....!!! காதல் ... பொது விதி .... எனக்கு தலைவிதி....!!! ஆசைக்கு.... அளவு வேண்டும் .... நான் உன்னில் பேராசை ... பட்டேன் இப்போ ... படுகிறேன் .....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;806

காதல் பிரிவு

காதல் பிரிவுகள் பலவகை .....!!! காதல் புரிந்துவிட்டு பல்வேறு காரணங்களுக்காக உயிரை துறக்காமல் காதலை துறப்பது ....!!! ----------------- கவிதை 01 ----------------- இரண்டு  ரோஜாக்கள் அழகாக பூத்து ... உதிர்ந்து விழுவது .... காம்பு என்னும் பகுதி ... நினைவுகளோடு ... இருந்து கொண்டே இருக்கும் ...!!! +++++++ உயிராய் காதலித்து கொண்டிருக்கும் போது ஒரு உயிர் உலகை விட்டு பிரிவது ஆனால் தற்கொலையில்லை ....!!! ------------- கவிதை 02 ------------- இரண்டு ரோஜாக்கள் .... அழகாக பூத்து .... ஒரு ரோஜா கருகிவிட .... மற்றைய ரோஜா .... வாடிக்கொண்டிருப்பது....!!! +++++++++++++ உயிராய் காதலித்த உள்ளத்தில் ஒன்று எங்கே சென்றது...? எப்படி பிரிந்தது ....? மீண்டும் வருமா ..? ------------- கவிதை 03 ------------- அழகாக  பூத்த ரோஜாக்கள் .... ஒரு ரோஜாவை நினைத்து ... மற்றைய ரோஜா ..... ஏங்கிகொண்டிருத்தல் ..... வாடவும் முடியாமல் .... வாழவும் முடியாமல் .....!!!

தள்ளி விட்டாயே ....!!!

தனிமையில் இருந்து ... உன்னிடம் வந்தேன் .... காதலித்தாய் .....! தனிமையே உனக்கு ... பொருத்தமெண்டு... தள்ளி விட்டாயே ....!!! + காதல் சிதறல் கே இனியவன்

பேசாமல் விட்டாலும் ...

காதலின் .... கொடிய விஷம் ..... காதலியின் பேச்சு ,,,,, பேசினாலும் வலிக்கும் ... பேசாமல் விட்டாலும் ... வலிக்கும் ....!!! + காதல் சிதறல் கே இனியவன்