இடுகைகள்
2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
அசத்தலான கவிதை
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்

அனந்தியே.... அன்புக்குரிய... அரசியே.... அகிலத்தையும்.... அண்டதையும்.... அதிரவைக்கும்.... அழகியே..... அன்னமே....... அன்பும்... அடக்கமும்.... அங்கங்களாய் .... அமைந்த....... அதீத.... அற்புதமான.... அபூர்வ..... அமுதே..... அன்னையின்..... அனுமதியோடும்... அயலவரின்.... அரவணைப்போடும்... அம்மனின்.... அலங்காரமாய்.... அவையில்.... அமர்ந்திருப்பவளே.... அன்னையானாய்.. அப்பனானேன்.... அருமையான.... அரவிந்தனை.... அவதரித்தாய்... அவனியில்.... அரண்மனை..... அரசரானோம்..... அன்பானவளின் அங்கம்.... அவதியாகி.... அசையாது.... அடங்கிட.... அல்லல்பட்டு... அமைதியானது.... அடிமடியில்.... அவ்வுயிர்..... @ இலக்கியக் கவிப்பேரரசு இனியவன் இக்கவிதையில் காதல், திருமணம், குடும்பம், மரணம் என்பது ஒரு சொல்லைக் கொண்ட எழுதப்பட்டுள்ளது
இலக்கியக் கவிப்பேரரசு இனியவன்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
ஒரு சோடி அணுக்கவிதை 💙💙💙 உன் சிரிப்பில் கருகாமல்..... நெருப்பில் கருகியிருக்கலாம்.... காயம் தான் இருந்திருக்கும்.... வலி காலத்தால் இறந்திருக்கும்.... 💚💚💚 நீ பிரிந்து விட்டாய்... என்று பலமுறை.... சொல்லிவிட்டேன்.... சொறனை.... கெட்ட என் இதயம்... நீ வருவாய்யென..... கதவை திறந்துவைத்து... காத்துக்கொண்டு இருக்கிறது......! 💙💙💙 இலக்கியக் கவிப்பேரரசு இனியவன் இலங்கை யாழ்ப்பணம்
இலக்கிய கவிப்பேரரசு
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கவிப்புயல் இனியவன்அவர்களுக்கு 🌹🌹🌹 ஒன்று மட்டும் சத்தியம் உண்மையான உங்களின் திறமைகளை என் மனதிலே எடைபோட்டு மனமுவந்து உங்களுக்குத் அந்தப் பட்டத்தை தர வேண்டுமென்று விரும்பி கொடுத்தது 7000 கவிதைகள்மேலும் ஒவ்வொரு வகையிலும் ஆயிரமாயிரம் கவிதைகள் எழுதி இருப்பது மூன்றில் இரண்டு பங்கு உங்களின் சொந்த வாழ்க்கையை தமிழுக்காக அர்ப்பணித்து இருக்கிறீர்கள் அது கிட்டத்தட்ட தமிழுக்காக 36 வருடங்களுக்கு குறையாமல் வைத்திருக்கிறீர்கள் நிறைய பட்டங்களை வாங்கி இருக்கிறீர்கள் வயதில் முதிர்ந்த நான் இந்தப் பட்டத்தை தங்களுக்கு தருவது நீங்கள் 100 விழுக்காடு அல்ல ஆயிரம் விழுக்காடுகள் தகுதியானவர் என்பது சத்தியமான உண்மை தமிழ்நாட்டில் நீங்கள் இருந்திருந்தால் நமது பாசத்துக்குரிய கண்ணதாசன் ஐயாவுக்கும் வாலிஐயா வைரமுத்து ஐயா அவர்களின் வாரிசாக வலம் வந்திருப்பீர்கள் சத்தியமாக நான் முகஸ்துதி பாடுகிற ஆளில்லை உங்களுடைய உயரம் உழைப்பு போல இமயம் தொடும் வாழ்க வளமுடன் @ கோவை கோமகன் (வயது 78) திரைப்படத்துறை
கவிப்புயலின் மரபுவழிக்கவிதை
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
தலைப்பு : புரிதல் இல்லா நட்பு என்றும் புரிதல் இல்லா நட்பு// துன்பமே தரும் தோழனே அதுதப்பு// இன்றும் மெளனமேன் இதயத்தால் நீசெப்பு // என்னில் தவறிருப்பின் என்னைநீ காறித்துப்பு// தீண்டத்தகா வார்த்தைகளால் தெறித்தது வன்மை// தூண்டில் மீன்போல் துடிக்கிறது தனிமை// நீண்டநற் பயணத்தில் நினைவுகளே இனிமை// வேண்டுமுன் உறவேயென் வெற்றிக்கு மேன்மை// @ கவிப்புயல் இனியவன்
கவிப்புயலின் மரபு வழிக் கவிதை
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
என்றும் ஏழைக்கு இயன்றதைக் கொடு// இன்றே வாழ்க்கையில் இடர்களைத் தடுத்திடு // தோன்றும் ஊழ்வினை துன்பத்தை அழித்துவிடு// சொன்னதைக் கேட்டு சுகவாழ்வைத் தெரிந்தெடு // தீவினை அறுவதற்கு தியானம் நன்குசெய்// தவிக்கும் உயிர்களுக்கு தானம் ஒன்றேமெய் // செயல்வினை அறுப்பின் சித்தனாய்ப் போயிடுவாய்// பயவினை தீர்ப்பதற்கு பரமன் ஒருவனேதாய் //
துடிக்கும் இதயம்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
காதல்....... ஆனந்த கண்ணீரில்... ஆரம்பித்து....... ஆறுதல் கண்ணீரில்..... முடிகிறது..........!!! முகில்களுக்கிடையே.... காதல் விரிசல்....... வானத்தின் கண்ணீர்...... மழை..........................!!! நான் வெங்காயம் இல்லை.... என்றாலும் உன்னை..... பார்த்தவுடன் கண்ணீர்.... வருகிறது................!!! & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம் காதல் கஸல் (பதிவு 01)
மாமியார் மருமகள்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
குடும்ப ஒற்றுமையில் மாமியார் மருமகள் :::::::::::::::::: வண்டியின் சக்கரங்கள்.. மாமியாரும் மருமகளும்.... / பொறுமையும் ஏற்றலும்... வண்டியின் அச்சாகும்.... / முதுமை இளமையின்... பாசப்பிணைப்பு உறவாகும்.... / பிறந்தவீடு புகுந்தவீடு.... எண்ணம் வேண்டாம்... / மருமகள் விட்டுக்கொடுக்கணும்.... மாமியார் தட்டிக்கொடுக்கணும்.... / முதுமையில் பெற்ற... குழந்தை மருமகள்.../ இளமையில் கிடைத்த... தாயே மாமியார்.... / முதலாளி எண்ணங்கள்... விலக்குதல் நன்று... / இல்லம் என்னும்... ஆலயம் மிளிரும்... / உறவும் அயலும்.. போற்றி வாழ்த்தும்... / @ கவிப்புயல் இனியவன் (யாழ்ப்பாணம்)
ச - வரி கவிதை
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
அகராதி தமிழ் சொற்கள் கவிதை "ச " வரிகள் ....... சதியை மதியால் வெல்... சங்கடங்களை திறனாய்வு செய்... சகுனம் பார்த்து வீணாகாதே.... சாத்தியம் தவறாமல் வாழ்... சங்கற்பம் கொள் வெற்றி நிச்சயம்.... !!! சத்துருவை நீயே உருவாக்காதே... சந்தர்ப்பங்களை தவறவிடாதே... சந்தேகம் கொண்ட செயல் செய்யாதே... சமூக நோக்குடனும் வாழ்.... சந்ததி வழி நீடுடுடி வாழ்வாய்.... !!! சம்பிரதாய சடங்கில் மூழ்காதே.... சரணடைந்து மானம் இழக்காதே.... சரீரம் கெடும் பொருள் தொடாதே.... சவால்களை எதிர்கொள்... சரித்திரம் படைப்பாய் பாரினில்.... !!! @ கவிநாட்டியரசர், கவிப்புயல் இனியவன் (யாழ்ப்பாணம்)
உதிர்ந்து கொண்டிருக்கும் மலர்கள்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
உன்னில்..... அதிகமாக அன்பு... வைத்தேன்.... அவதிப்படுகிறேன்.... ! அதிகமாக.... நம்பிக்கை வைத்தேன்.... துடிக்கிறேன்..... ! என் தவறு... என்னில் அதிகமான அன்பையும்... நம்பிக்கையும்... வைக்க தவறிவிட்டேன்....! காதல்... காதலிக்க மட்டும்... அல்ல.... வாழ்க்கையையும். கற்றுத்தரும்..... !!! ......... உதிர்ந்து கொண்டிருக்கும் மலர்கள் (01) ..... காதல் கவிதைகள் ..... கவிப்புயல் இனியவன் யாழ்ப்பாணம்