இடுகைகள்

கவிஞன் ஆனவன்.....!!!

இவன் .... காதல் தோல்வியால் ... கவிஞனாக வில்லை ... எல்லாவற்றிலும் ... காதல்  கொண்டதால் ... கவிஞன் ஆனவன்.....!!! & கவிப்புயல் இனியவன் இதுதான் உண்மை 

நான் பறித்த கடைசி பூ

நான் பறித்த கடைசி பூ கவிப்புயல் இனியவன் 2013 ----------- சாமிக்கு பூ பறித்து .. வைப்பதை பழக்கமாக கொண்டவன் .. சட்டென்று ஒருநாள்-பூவை பறித்த என்மனதில் ஒரு -சஞ்சலம் மரத்தை பார்த்தேன் -அதன் அழுகையை மலரை பார்த்தேன் -அதன் ஏக்கத்தை தாயையும் பிள்ளையையும் பிரித்த சோகம் இதுதான் நான் பறித்த கடைசி பூ

அழுவதற்காக பிறந்தவன்

உன் ..... மடியில் உறங்க .... அனுமதி கொடு .... இதயத்தின் சுமையை .... உன்னோடு பகிர்ந்து .... கொள்கிறேன் ...... எனக்காக நீ ..... அழுதுவிடாதே....... அழுவதற்காக...... பிறந்தவன் நானாகவே .... இருந்து விடுகிறேன் .......!!! & கவிப்புயல் இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை

எங்கு கற்றுக்கொண்டாய் ......

நீ என் இதயத்துக்குள் .... புகுந்தபோதும் .... விலகிய போதும் ... மெதுவாக வந்து ....... மெதுவாக விலகிவிட்டாயே .... எந்த வித வலியுமில்லாமல்.... எங்கு கற்றுக்கொண்டாய் ...... இந்த கலையை ..? & கவிப்புயல் இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை 

காதல் பைத்தியம்

காதல் பைத்தியம் ------- காதலரின் பெயரை சுவரில் மற்றும் கையில் எழுதுபவர்கள் ..! காதல் முட்டாள்கள் ------- காதலருடன் சண்டையிட்டபின் காயங்களை ஏற்படுத்துபவர்கள் தனக்கு தானே கையை வெட்டுதல் .மற்றும் சூடு வைத்தல்..! காதல் கோழைகள் -------- காதலில் தோற்றதும் தற்கொலை செய்பவர்கள் ...! காதல் வெறியன் -------- காதலின் பெயரில் ஏமாற்றி கற்பை சூரையாடுபவன் ...! காதல் கொலைகாரன் -------- காதல் நிறைவேற்றவில்லை என்றவுடன் பழிவாங்க துடிப்பவன் ...! காதல் பயங்கரவாதி --------- காதலியின் முகத்தில் அசிட் வீசுபவனும் கொலைசெய்பவனும்...! & கவிப்புயல் இனியவன் 

தனிமை கொடுமையல்ல இனிமை ...!!!

தனிமை கொடுமையல்ல இனிமை ...!!! கவிப்புயல் இனியவன் 2013 --------- தனிமை... எல்லோருக்கும் கிடைக்காத தவம்...! அதுவே ஒரு சிலருக்கு வரம்..! கவிதைகளின் .... கதைகளின் பிறப்பிடம்...! கனவுகளின் உறைவிடம்..! கடந்தகாலத்தை மீள்படிக்க உதவும் நாற்குறிப்பேடு..! என்னை நானே உற்றுப்பார்த்திட வழி செய்யும் கண்ணாடி...! மெளனத்தின் வழி பலநூறு கதை சொல்லும் கருவூலம்..! காதடைக்கும் இரைச்சல்விடுத்து இதம் சேர்க்கும் தியானபீடம்...! இது………. எல்லாம் இருந்தும்…. இளைப்பாற சில பொழுதுகள் தனிமை சேர்பவன் மனநிலை....!! தனிமை கொடுமையல்ல இனிமை ...!!! & கவிப்புயல் இனியவன்

கடலுக்குள் செல்ல ஆசை.....!!!

கடலில் சுதந்திரமாக .. தூண்டிலிலும் வலையிலும் ... சிக்காத கடல் மீனுக்கு -வீட்டில் உள்ள கண்ணாடி பளிங்கு தொட்டிக்குள் குமிழியுடன் வரும் கற்றை சுவாசிக்க ஆசை ........!!! கண்ணாடி தொட்டிக்குள் இருக்கும் மீனுக்கோ சொகுசு சிறையில் இருந்து வெளியேறி சுதந்திரமாக திரியும் கடலுக்குள் செல்ல ஆசை.....!!! & முரண் பட்ட ஆசைகள் கவிப்புயல் இனியவன் 

தனிமை கொடுமையிலும் கொடுமை ...

தனிமை... அது ஒரு பெரும் வலி...! ஒரு கிடைக்கக்கூடாத சாபம்..! தவறுகளின் பிறப்பிடம்...! தண்டனையின் உறைவிடம்..! பிரிவுத்துயர் சொல்லித்தரும் கலாசாலை..! கவலைகளுக்கு தூபமிடும் பலிபீடம்..! வெறுமையின் வாசிகசாலை..! பசிப்பவனின் வெற்றுக்கோப்பை..! வாய் இருந்தும் நாவறுந்ததாய்.. கேள்செவியிருந்தும் செவிடானதாய்... எண்ணத்தோன்றும்  கொடிய நிலை ....!!! உறவுகள் பிரிந்து.... தனிமையின் பிடியில்....... கோரமாய் சிக்கிக்கொண்டவன் ...... மனநிலை…!! தனிமை கொடுமையிலும் கொடுமை ... & கவிப்புயல் இனியவன் சமுதாய கவிதை 

பிணக்கு இல்லாமல் பிரிவதே ...!

நானோ ..... பூவின் மென்மையில் .. இருக்கிறேன் ....! நீயோ ...... வண்டின் குணத்தில் ....... இருக்கிறாய் ...! காதல் என்றால் ...... ஒன்று பட்டு வாழவேண்டும் ..! இல்லையேல் ....? நல்ல காதலுக்கு அழகு ...! பிணக்கு இல்லாமல் பிரிவதே ...! & கவிப்புயல் இனியவன் சின்ன சின்ன கிறுக்கள்

எத்தனை ஜென்மாவும் பிறப்பெடுப்பேன் ..........!!!

உன்னை காதலிக்கும் ..... பாக்கியத்தை நான் இந்த .... ஜென்மத்தில் பெறவில்லையடா .... எனக்காக அடுத்த ஜென்மம் .... பிறந்துவிடு உன்னை .... காதல் செய்தே ஆகவேண்டும் .....!!! உன் கவிதைக்காக .... எத்தனை ஜென்மாவும் பிறப்பெடுப்பேன் ..........!!! & கவிப்புயல் இனியவன் சின்ன சின்ன கிறுக்கள்

இறந்து விடு என்று சொல்...!!

இறந்து விடு என்று சொல்...!! மறுபடியும் பிறந்து வருவேன்.. மறந்து விடு என்று...!!! சொல்லாதே ஒரு நொடி கூட இருந்துவிடமாட்டேன் ...!!! & கவிப்புயல் இனியவன் சின்ன சின்ன கிறுக்கள்

நட்பும் காதலும் கவிதை

இறைவா எனக்கு ஒரு வரம் தா ..? காதல் உணர்வை என்னில் இருந்து தயவு செய்து எடுத்துவிடு ....! அவனை உயிர் நண்பனாகவோ உயிர் காலம் வரை நினைக்க .......... விரும்புகிறேன் இடைக்கிடையே பாழாய்ப்போன மனம் காதலையும் எட்டிப்பார்க்கிறது ....! நட்பு ஒன்றில் விட்டுக்கொடுப்பு அதிகம்...... அவன் விட்டுக்கொடுத்துவிட்டான் -காதலை இறைவா ....... என் காதல் நரம்பை துண்டித்து விடு ...! & கவிப்புயல் இனியவன் நட்பும் காதலும் கவிதை

அவள் கண்ணீரில் ......!!!

ஆழம் .... அதிகமில்லைதான் .... என்றாலும் .... விழுந்துவிட்டேன் ..... அவள் கன்னக்குழியில் ...!!! தண்ணீர் ..... அதிகம் இல்லைத்தான்.... என்றாலும்... நனைந்துவிட்டேன்...... அவள் கண்ணீரில் ......!!! & கவிப்புயல் இனியவன் தேனிலும் இனியது காதலே காதல் கவிதைகள்

தனியே இருந்து சிரிக்கிறேன் ...

இனியவன் .......!!! ---------------- அது எப்படி நீ மட்டும் .. சாதாரணமாக வந்துபோகிறாய் ....? நானோ உன்னை கண்டவுடன் ... காற்றில் பறக்கிறேன் ... கனவில் மிதக்கிறேன் ... தனியே இருந்து சிரிக்கிறேன் ... இனியவளே .......!!! ----------------- போடா அம்மு ....... நீ வேதனை மட்டும் ...... படுகிறாய் ...நானோ .. உன்னை கண்டவுடனேயே செத்து செத்து பிழைப்பதை யாரறிவார் ...? & கவிப்புயல் இனியவன் தேனிலும் இனியது காதலே காதல் கவிதைகள்

வருத்தினாலேவெற்றி...!

 வருத்தினாலேவெற்றி...! ---------------- மாணவன் தன்னை வருத்தினாலே சிறந்த பெறுபேறு விளையாட்டு வீரன் தன்னை வருத்தினாலே- வெற்றிக்கிண்ணம் முயற்சியாளன் தன்னை வருத்தினாலே- கோடீஸ்வரன் இறைவனை காண வேண்டுமாயின் ஞானி தன்னை வருத்த வேண்டும் உலகில் வெற்றிகண்ட மனிதர்களில் யாராவது ஒருவர் தன்னை வருத்தாமல் வெற்றி பெற்று இருந்தால் கூறுங்கள் பார்க்கலாம் ..? & வாழ்க்கை கவிதை கவிப்புயல் இனியவன்