ஐய்ம்பூதங்களின் கருத்தை .... ஐவகை நிலத்தை என்னால் .... ஐந்து வரியில் விளக்கிடுவேன் .... நண்பா நட்பை பற்றி என்னால் .... ஜென்மத்தில் முடியாது .....!!! & பஞ்ச வர்ண கவிதைகள் வர்ணம் - நட்பு கவிப்புயல் இனியவன்
என்னை நன்றாக காயப்படுத்து ..... உனக்கு அதில் இன்பமென்றால் .... நன்றாக இன்னும் காயப்படுத்து ...... உன்னை தவிர யார் காயப்படுத்துவர் ...? உனக்கு இல்லாத இதயம் வேண்டாம் ....!!! & பஞ்ச வர்ண கவிதைகள் வர்ணம் - காதல் தோல்வி கவிப்புயல் இனியவன்
நீ அன்பாய் பேசும் போது...... என் கவிதை அழகாய் இருக்கும் ..... நீ சோகத்தோடு பேசும்போது .... என் கவிதை கண்ணீர் விடும் ...... என் கவிதையே நீ தான் உயிரே ....!!! & பஞ்ச வர்ண கவிதைகள் வர்ணம் - காதல் கவிப்புயல் இனியவன்
நீ இருக்கும் வரை இதயம் துடிக்கட்டும் ..... கண்கள் உன்னைமட்டும் பார்க்கட்டும் ..... உன்னை நோக்கி கால்கள் நடக்கட்டும் ..... நம் காதல் உலகம் வரை இருக்கட்டும் ..... உண்மை காதலின் அடையாளமாய் ......!!! & பஞ்ச வர்ண கவிதைகள் வர்ணம் - காதல் கவிப்புயல் இனியவன்
நாம் பிரிந்துவிட்டோம் .... நீ நினைவுகளை மறந்து .... நான்நினைவுகளை மறந்து ..... வாழ்கிறோம் என்று நடிக்கிறோம் ..... காதல் சிரிக்கிறது ......!!! & பஞ்ச வர்ண கவிதைகள் வர்ணம் - காதல் தோல்வி கவிப்புயல் இனியவன்
எனக்கும் சேர்த்து காற்றை ..... உள்வாங்கி சுவாசிப்பதும் ..... விருப்பம் இல்லாவிட்டாலும் .... எனக்காக உண்பதும் ... தாயே உன்னைத்தவிர யார் ...? & பஞ்ச வர்ண கவிதைகள் வர்ணம் - அம்மா கவிதை கவிப்புயல் இனியவன்
நான் எதை பேசினானும் ...... அமைதியாய் இருந்து கேட்டு .... நான் அமைதியாய் இருக்கும் .... வேளையில் என் பலவீனத்தை .... விளங்குபவன் என் நண்பன் .....!!! & பஞ்ச வர்ண கவிதைகள் வர்ணம் - நட்பு கவிப்புயல் இனியவன்
உன்னை பிரிந்தது வலியில்லை.... பிரிய நீ ஆசைப்படுவது வலிக்கிறது .... மறந்து வாழ்வது வலியில்லை..... மறக்க வைப்பதுதான் வலி ..... காதல் வலியால் தைத்த ஆடை .....!!! & பஞ்ச வர்ண கவிதைகள் வர்ணம் - காதல் தோல்வி கவிப்புயல் இனியவன்
மின்னலை பார்த்தால் ..... கண் கெட்டுவிடும் .... என் கண்ணில் நீ .... பட்டாய் நான் ....... பட்டுவிட்டேன் ....!!! மதுவை விட போதை நீ ..... மது உயிரை குடிக்கும் .... நீயோ............ உயிரை வதைக்கிறாய் .....!!! காதலை ..... ஆரம்பித்ததும் நீ .... முடித்ததும் நீ ...... நான் என்ன பாவம் .... செய்தேன் ......? & முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1042
காதல் ஒரு .... மந்திர உலகம் ..... சிரிப்பில் தோன்றி .... கண்ணீரில் முடியும் ....!!! பேசாமல் இருந்தபோது .... காதல் இனித்தது .... பேசினாய் - காதல் ..... வெறுத்து விட்டது ......!!! உன்னை கண்ணில் ..... தேடுகிறேன் .... நீ கண்ணீரில் வந்து ..... போகிறாய் ......!!! & முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1041
கடல் ...... கரையில் இருந்து .... அக்கரையை பார்க்கும் .... போது நிலமும் வானமும் .... முத்தமிடும் ..... நம் காதலை போலவே ..... எல்லாம் மாயை ......!!! பூவில் ..... இருக்கும் தேனும் ..... பூவின் கீழ் இருக்கும் .... முள்ளும் நீதான் ..... எப்படி போடுகிறாய் .... வேஷம் ......? கடல் கரையில் .... தோன்றிய நம் காதல் .... அலைபோல் வந்து வந்து .... போகிறது .......!!! & முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1040
மாட்டு.... வண்டியில் போன சுகம்.... மாருதியில் இல்லையடா ....!!! பாட்டி .... சொன்ன நம் ஊரைப்போல்..... பட்டணம் இல்லையடா ....!!! நாட்டு ..... நடப்பு எல்லாவற்றையும்... நாழிகையில் சொல்லும் தாத்தா... நாளிதழை திறந்து பார்த்தால்..... நாற்றமடிக்குதடா சமூக சீரழிவு....!!! தெருவோர தாக சாந்தி.... தேர் திருவிழாவை.... சிறப்படையும் வைக்கும்.... இப்போ -தெருவுக்கு தெரு.... கோயில் வந்ததால்..... தெருவோரத்தை காணோமடா ...!!! சமுதாய முன்னேற்றம்..... ஒரு சாண் ஏறினால்... சமூக சீரழிவு முழம் கணக்கில்..... ஏறுதடா .......!!! ^ சமூக புலம்பல் கவிப்புயல் இனியவன்
காதல் இனிமைதரும்... இனிமை நினைவு தரும்....!!! காதல் பிரிவு வலிதரும்.... வலிகள் வரிகள் தரும்......!!! வரிகள் கவிதை தரும்.... கவிதை கற்பனை தரும்....!!! கற்பனை புதுமைதரும்..... புதுமை இளமைதரும் ...!!! ^ பல இரசனை கவிதை கவிப்புயல் இனியவன்
உடல் முழுதும் நீரை..... வைத்திருக்கும் - இளநீர்.... இனிக்கிறது ....!!! உடல் முழுதும் நீரை ..... வைத்திருக்கும் - மனிதன்.... கண்ணீர் உவர்க்கிறது ....!!! மனிதனின் எண்ணங்களின் .... வண்ணங்கள் ..... காரணமாய் இருக்குமோ ....? ^ பல இரசனை கவிதை கவிப்புயல் இனியவன்