இடுகைகள்

சாய அனுமதிப்பாயா ....?

நான் எதை கேட்டாலும் தர மறுக்கிறாய் ... காதலை மறுத்துவிடாதே...!!! நீ காதலை சொன்னவுடன் ... ஒரே ஒரு முறை உன் .... தோளில்சாய ...... அனுமதிப்பாயா ....? + கவிதையால் காதல் செய்கிறேன் 27 கவிப்புயல் இனியவன்

ஒரே ஆளில் பார்க்கிறேன்

ஒருவரைப்போல் .... ஏழுபேர் இருப்பார்கள் ... சொல்லக்கேள்வி .... நீ மட்டும் ஒவ்வொருநாள் ... ஒவ்வொரு அழகில் வருகிறாய் ... ஏழு அழகிகளை ஒரே ... ஆளில் பார்க்கிறேன் ....!!! + கவிதையால் காதல் செய்கிறேன் 26 கவிப்புயல் இனியவன்

கணபடும் பாடு சொல்கிறது .

தலை வாரும்போது .... முடியில் உள்ள சிக்கலை ... கஸ்ரபட்டேனும் எடுக்கிறாய்.... உன்னில் சிக்குப்பட்டிருக்கும் ... என்னை எப்போது மீட்பாய் ...? + கவிதையால் காதல் செய்கிறேன் 24 கவிப்புயல் இனியவன் ----- ஏய் ... கூட்டத்தில் கூட்டமாய் ... செல்கிறாய் எல்லோரையும் ... பார்பபோதுபோல் யாரை .... தேடுகிறாய் .....? தேடுவது வேறு என்னை ... தேடுவது வேறு உன் கண் .... படும் பாடு சொல்கிறது ...!!! + கவிதையால் காதல் செய்கிறேன் 25 கவிப்புயல் இனியவன்

காதலே உண்மை ஆன்மீகம்

காதலே உண்மை ... ஆன்மீகம் .... காதலின் ஒவ்வொரு .... செயலும் எண்ணத்தால் ... தோன்றுபவையே ...!!! வேறு எந்த கருவியும் .... உலகில் இல்லை .... காதலித்தவர்களே... எல்லா வற்றிலும் அன்பு ... கொள்கிறார்கள் ...!!! ஆண்டவனை பார்க்க ... துடிப்பதும் காதலியை ... பார்க்க துடிப்பவனும் .... ஒன்றுதான் ....!!! ^ கவிப்புயல் இனியவன்  காதலால் காதலியை காதலி கவிதை 04

காதலே உண்மை ஆன்மீகம்

காதலே  உண்மை ... ஆன்மீகம் .... காதலின் ஒவ்வொரு .... செயலும் எண்ணத்தால் ... தோன்றுபவையே ...!!! வேறு எந்த கருவியும் .... உலகில் இல்லை .... காதலித்தவர்களே... எல்லா வற்றிலும் அன்பு ... கொள்கிறார்கள் ...!!! ஆண்டவனை பார்க்க ... துடிப்பதும் காதலியை ... பார்க்க துடிப்பவனும் .... ஒன்றுதான் ....!!! ^ கவிப்புயல் இனியவன் காதலால் காதலியை காதலி கவிதை 04

காதலோடு எழுந்திருங்கள்

காதலை காதலியிடம் ... பெற்று காதலிக்கு ... காதலையே கொடுங்கள் ....!!! காதலுக்கு காதலை .... பரிமாறிய காதல் தோற்றதே இல்லை ....!!! காலை எழுந்தவுடன் .... காதலோடு எழுந்திருங்கள்   ....!!! ^ கவிப்புயல் இனியவன் காதலால் காதலியை காதலி கவிதை 03

காதலில் கள்வர் தோன்றலாம்

எனக்கொரு காதலி .... இருக்கிறாள் என்பது .... அழகில்லை .... எனக்காக ஒரு காதலி .... இருக்கிறாள் என்பதே .... அழகு ......!!! கவலை படாமல் இருக்கவே ... காதல் வேண்டும் ..... கவலைபட காதல் வேண்டாம் ....!!! காதலில்  கள்வர் தோன்றலாம் களவுகள் .... தோன்றக்கூடாது ....!!! ^ கவிப்புயல் இனியவன் காதலால் காதலியை காதலி கவிதை 02

காதலால் காதலியை காதலி...!!!

இதயத்தில் காதல் .... தோன்றக்கூடாது ... இதயமாக காதல் .... தோன்ற வேண்டும் ....!!! புற அழகில் காதல் .... தோன்றக்கூடாது .... அக அழகில் காதல் .... தோன்ற வேண்டும் ....!!! காதலியை காதலுக்காக காதலிக்காதீர் .... காதலால் காதலியை காதலி ...!!! ^ கவிப்புயல் இனியவன் காதலால் காதலியை காதலி கவிதை 01

கவிதையால் காதல் செய்கிறேன்

உலகின் ஒவ்வொரு உயிரினதுக்கும்... ஜோடி படைக்கபடுகிறது.... எந்த மூலையில் இருந்தாலும் .... இணைந்தே தீரும் -நீயும் இணையாமலாவிடுவாய்....? சுய புத்தி இருந்து பயனில்லை காதல் புத்தி வரவேண்டும் ... காதல் செய்வதற்கு ....! + கவிதையால் காதல் செய்கிறேன் 22 கவிப்புயல் இனியவன் + பிரபஞ்சமே .... எனக்கு ஒரு சக்தி கொடு .... பார்க்கும் பொருளெல்லாம் .... என்னவளாக தோன்றவை .... கேட்கும் ஓசையெல்லாம் .... என்னவளின் குரலாய் ... இருக்கவேண்டும் .....!!! தூக்கம் தொலையவேண்டும் .... தூக்கத்தில் கனவாய் வரவேண்டும் .... நினைவுகளால் இறக்கவேண்டும் .... நினைவுகளேவாழவைகவேண்டும் .....!!! + கவிதையால் காதல் செய்கிறேன் 23 கவிப்புயல் இனியவன்

உனக்காக எழுதும் உயிர் மடல் ........!!!

இதய மன்மதன்  இதய கோயில் வீதி  இதயத்துடிப்பு ஒழுங்கை  இதய நகர் -02 என்னுயிரே உனக்காக எழுதும் உயிர் மடல் ........!!! நீ என்னிடம் நலமாகவே இருகிறாய் , இருப்பாய் உன்னை நான் இதயத்தில் வைத்திருப்பதால் நீ வேறு நான் வேறாக எப்பவுமே இருக்க முடியாது . என் இதயம் துடிப்பதே என் இதயத்தில் இருந்து நீ விடும் மூச்சு காற்றால் தான் என்பதை நான் கூறித்தான் நீ புரியவேண்டும் என்பதில்லை ......!!! என்னவளே ....!!! உன்னை பிரிந்து சிலமணிநேரம் வாழ்வது பிராணவாயு இல்லாத இடத்தில் நான் வாழ்வதற்கு நிகரானது உன் நினைவு என்னை வதைக்கும் போதெலாம் எனக்கு ஒன்றே ஒன்று தோன்றும் உனக்கு கடிதம் எழுதுவதே . இடை இடையே கவிதை போல் ஒன்றை கிறுக்குவேன் . அதை நீ கவிதையாக  வாசித்துகொள் .......!!! ஒரு  நிமிடமேனும் உன்னை .... நினைக்கவில்லை .... என்றால் அந்த மணிநேரம் ... நான் இறந்து பிறந்தேன் .... என்பதுதான் கருத்து .....!!! உன்னிடம் இருந்து வரும் கடிதம் வெறும் காகிதம் இல்லை. உன் இதயத்தின் உணர்வுகள் என்பதை  அறிவேன் . காலம் தாழ்த்தாமல் எனக்கு ஒரு கடிதம் எழுது உயிரே .....!!! இப்படிக்கு  இதயத்தோடு காத்திருக்கும்...

உண்மையின் மறு பக்கம் பார்கிறேன்

உண்மையிடம்   கேட்டேன்  ஒரு கேள்வி ...? நல்லது எது கெட்டது எது ...? உண்மை சொன்னது ..... வீட்டுக்குள்ளே செல்லும் போது செருப்பை .... கழற்றி வைக்கிறோம் .... செருப்பு ஒதுக்கப்படுகிறது .... கொழுத்தும் வெய்யிலில் .... பதைத்து துடிக்கும் போது .... செருப்பு சொர்கமாகிறது ....!!! நறுமணம் வீசும் போது ... மனம் சுவைக்கிறது ... துர்நாற்றம் வீசும்போது ... மனம் சுழிக்கிறது ...... காற்றே இல்லாத அறைக்குள் ..... அடைக்கப்பட்டு அடுத்து மூச்சு .... விட்டால் உயிர்பிழைக்கும் ... நிலையில் துர்நாற்ற காற்று .... சொர்க்கமாக மாறுகிறது ....!!! நாக்கு வறண்டு உடல் சோர்ந்து .... ஒரு துளி தண்ணீருக்கு மனம் ... ஏங்கி கொண்டிருக்கும்போது .... தெருவோர குட்டை தண்ணீர் ... அமிர்தமாகிறது ......!!! இப்போது சொல் .... நல்லது எது கெட்டது எது ...? உங்கள் தேவைக்கு அதிகமாக .... கிடைக்கும்போது தான் நீங்கள் .... நல்லது கெட்டது என்று .... பாகுபடுத்துகிறீர்கள் ....!!! தேவைக்கு குறைவாக இருக்கும் ... காலத்தில் எதுவுமே கெட்டதில்லை... உண்மை  மறுபக்கத்தை சொன்னது ...!!!

கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதைகள்

கனவுகள் தோன்றாவிட்டால் .... இரவுகள் அழகுபெறுவதில்லை ....! காதல் தோன்றாவிட்டால் .... மனித பிறவிக்கு அழகில்லை ....! காதலே நீ நீடூடி வாழ்க ...!!! + கவிப்புயல் இனியவன்  ஐந்து வரி கவிதைகள் ......!!! கவிதை எண் 36

இனியவன் - பழமொன்ரியு

ஐம்பதில் வளையாது ஐம்பதிலும் வளைந்திருகிறது முதுகு @ பொய் சொன்னால் பொரிகிடைக்காது பொய் சொல்லியே மாளிகை கட்டினார் அரசியல் வாதி @ பாத்திரம் அறிந்து பிச்சை போடு பிச்சைகாரன் கையில் செல்லிடப்பேசி தருமம் தோற்றது @ அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு நஞ்சாக இருந்தும் அளவு மீறுகிறான் குடிகாரன் @ ஆழம் அறியாமல் காலை விடாதே அண்டம் அழிந்தாலும் ஆழம் தெரியாது காதல் @ ஆனைக்கு காலம் வந்தால் பூனைக்கும் காலம் வரும் காலம் மாறிக்கொண்டே போகிறது ஆட்சி மாறவில்லை குடும்ப ஆட்சி @ இட்டு கெட்டார் எவருமில்லை அன்னதானமடம் மூடப்பட்டுள்ளது நிதி மோசடி @ உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது பள்ளி செல்லாமலே நாட்டை ஆழுகிறார் அரசியல் வாதி @ கடுகு சிறிதாயினும் காரம் பெரிது அணுவாயுதத்தால் உலகை ஆள்கிறது வல்லரசுகள் @ ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் இன மத கலவரம் சாதிக்கட்சிகள் சந்தோசம் @ கவிப்புயல் இனியவன் பழமொன்ரியு 10

கவிப்புயல் இனியவன் பழமொன்ரியு

பொய் சொன்னால் பொரிகிடைக்காது பொய் சொல்லியே மாளிகை கட்டினார் அரசியல் வாதி @ கவிப்புயல் இனியவன் பழமொன்ரியு 02 @ பாத்திரம் அறிந்து பிச்சை போடு பிச்சைகாரன் கையில் செல்லிடப்பேசி தருமம் தோற்றது @ கவிப்புயல் இனியவன் பழமொன்ரியு 03

கவிப்புயல் இனியவன் - பழமொன்ரியு

ஐம்பதில் வளையாது ஐம்பதிலும் வளைந்திருகிறது முதுகு @ கவிப்புயல் இனியவன் பழமொன்ரியு  01