இடுகைகள்

கண் ஓரத்தில் கண்ணீர் ....!!!

என்னை கண்டதும் உன் கண் ஓரத்தில் கண்ணீர் ....!!! தரையில் துடிக்கும் .... மீன் போல் துடிக்கிறேன் ... வத்தல் குழம்பு வைக்க ... நீ துடிக்கிறாய் ....!!! உன் நினைவு வலையால் .... பின்னப்பட்டு -மீன்போல் ... துடிக்கிறேன் ....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;810

காதல் தொட்டிக்குள் ...!!!

மீனைப்போல் ... நீந்திக்கொண்டே ... இருக்கிறேன் .... காதல் தொட்டிக்குள் ...!!! போ ..போ ... என்னைவிட்டு போ ... எப்படியும் என்னிடம் ... நீ வந்தே ஆவாய் ...! என்னைபோல் ... காதலிக்க உலகில் ... எந்த பைத்தியமும் ... இல்லை .....!!! என் ஒவ்வொரு துடிப்பும் ... நீ வந்து போவதாய் ... உணர்கிறேன் ...!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;809

மூச்சாய் வந்து போகிறாய்

நீ என் கவிதை ...! சோகக்கவிதையாகவும் ... அடிக்கடி வருகிறாய் ...!!! நான் நுரையீரல் .... அதனால் தான் -நீ மூச்சாய் வந்து வந்து ... போகிறாய் ....!!! காதல் முத்தாய் -நீ மூழ்கி எடுத்தேன் .... செத்துபோனேன்....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;808

காதல் தற்செயல் நிகழ்ச்சி ....!!!

இதயம் துடிப்பதுக்கு .... காரணமாய் இருந்த- நீ ... ஏன் துடிக்கிறது ...? என்றாக்கிவிட்டாய் ....!!! ஒவ்வொரு துளி .... கண்ணீருக்கும் - நீ காரணம் - மறுத்தாய் ... கல்லறைக்கு காரணம் ... சொல்வாய் .....!!! காதல் பருவத்தின் ... தற்செயல் மகிழ்ச்சி  ..... எனக்கு காதல் .... தற்செயல் நிகழ்ச்சி ....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;807

இதயத்தின் காயங்கள் ....

என் இதயத்தை .... கையில் எடுத்து காட்ட ... முடியுமானால் .... இதயத்தின் காயங்கள் .... நட்சத்திரத்தையும் .... விஞ்சிவிடும் .....!!! என் கண்ணீரை .... சேமித்திருந்தால் .... ஆழ் கடலையும் விஞ்சியிருக்கும் ....!!! + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை

என்னை காதல் செய் ....

வாழ்வில் .... இணையாவிட்டாலும் .... என்னை காதல் செய் .... கற்பனை வாழ்க்கையாவது ... கற்கண்டாகட்டும் ....!!! எல்லோருக்கும் .... இரவுகள் ஒய்வுதரும் .... என் இரவுகளோ .... என்னோடு இணைந்து .... ஓலமுடுகின்றன..... அன்பே ....!!! + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை

அவள் உணரமாட்டாள் .....!!!

இலந்தை முள்ளாய் ... இதயத்தை கிழிக்கிறாள் .... வடியும் இரத்தத்தில் ... அவள் முகம் வடிவத்தை ... அவள் உணரமாட்டாள் .....!!! என்றோ ஒருநாள் .... என் வலிகளை - நீ உணர்வாய் அன்று புரியும் .... வலிகளின் வலியின் வதை ....!!! + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை

தாங்காது என் இதயம் ....!!!

என் இதயம் .... இருட்டறை ஆகிவிட்டது ..... உன் சின்ன சிரிப்பு போதும் .... இதயம் வெளிச்சம் அடையும் ....!!! உயிரே ... எப்படி முடிந்தது உன்னால் ... இதய தீபத்தை அணைத்து விட .... போதும் போதும்  இதற்குமேல் ... தாங்காது என் இதயம் ....!!! + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

பௌதீகவியலும் காதல்விதியும் ....!!!

பௌதீகவியலும் காதல்விதியும் ....!!! சடப்பொருட்கள் யாவும் .... தம் திணிவுக்கு நேர் விகிதத்திலும் .... தமக்கிடையே உள்ள தூரத்தின் ... வர்க்கத்துக்கு நேர்மாறு விகிதத்திலும் .... ஒன்றை ஒன்றை ஈர்க்கும் ... நியூட்டனின் விதி .....!!! இதயமுள்ள இரு வேறுபட்ட .... பாலினங்கொண்ட உயிரினங்கள் .... நேருக்கு நேராக நோக்கி .... ஒருவரின் இதயத்தை மற்றவரிடம் ... பரிமாற்றி வாழ்வதே ..... காதலின் விதி .......!!! ஒரு  எதிர் தாக்கத்துக்கு சமமான .... மறுதாக்கம் உண்டு ..... நீ தரும் ஒவ்வொரு தாக்கத்துக்கும் .... காதலிலும் மறுதாக்கம் உண்டு ......!!!

விஞ்ஞானமும் காதல் கவிதையும்

வேதியியலும் காதலும் ஐதரசனின் இரண்டு பங்கும் ....  ஒட்சிசனின் ஒருபங்கும் ....  சேர்ந்த கலவையே  நீர் -H2O .....!!!  என்னுடைய  நினைவுகளையும் .....  உன்னுடைய நினைவுகளையும் ....  வேதனையுடன் சுமந்து கொண்டு ....  இருக்கும் நம் காதல் ...  வேதியல் சூத்திரம் தான் ....!!!  வேதியல் வகுப்பறையில் ....  வேதியல் படித்தானோ ....  தெரியவில்லை ....  வேளை தவறாமல் ...  உன் வேடிக்கைகளை  ரசித்திருக்கிறேன் .....!!!  வேதியலில் ...  ரேடியத்தை கண்டு பிடித்த ....  மேரி கியூரி குடும்பம் ....  வேதனையான மரணத்தை ....  அடைந்தார்கள் ....  புற்றுநோய் ......!!!  காதலும் ....  ஒரு புற்றுநோய் ....  உன் நினைவுகளால் நானும் ...  என் நினைவுகளால் நீயும் ....  கொஞ்சம் கொஞ்சமாக ....  இறந்து கொண்டிருக்கிறோம் ....!!!

மலர் வளையம் ...

கண்ணோடு.... ஆரம்பித்த காதல் .... கண்ணீரோடு .... வாழ்கிறது .....!!! மலர் கொடுத்து .... காதல் செய்தேன் .... மலர் வளையம் ... வரும்போல் இருக்கிறது ....!!! + காதல் சிதறல்  கே இனியவன்

மலர்வளையம் தருவாய் ....

நீ  தப்பு செய்ய போவதில்லை  நான் விரும்பியதையே ... செய்தாய் .....!!! நான் .... மலர் மாலை எதிர்பார்தேன் .... நீ  மலர்வளையம் தருவாய் .... போலிருக்கிறது ....!!! + காதல் சிதறல்  கே இனியவன்

அனுபவிக்க வேண்டும் ....!!!

இன்னுமொரு ஜென்மம் .... பிறந்து வந்தது உன்னை .... காதலிக்க வேண்டும் .....!!! நீ  பிரிந்து செல்ல வேண்டும் .... வலியின் வலியை.... அடுத்த ஜென்மமும் .... அனுபவிக்க வேண்டும் ....!!! + காதல் சிதறல்  கே இனியவன்

பிரிவு உணர்த்தியது ....!!!

பிறப்பு எத்தனை .... வலி என்பதை தாய்மை உணர்த்தியது ....!!! இறப்பு எத்தனை .... வலி என்பதை உன் .... பிரிவு உணர்த்தியது ....!!! + காதல் சிதறல்  கே இனியவன்

காதல் சிதறல் - கே இனியவன்

நீ  முகத்தால் ... வெறுக்கிறாய் .... இதயத்தால்....  அழைக்கிறாய் ..!!! பாவம்  உன் கண்கள் ... படாத பாடு படுகிறது ....!!! + காதல் சிதறல்  கே இனியவன்