இடுகைகள்

எமக்காக சுமப்பவரே

படம்
எமக்காக பாவங்களை சுமப்பவரே .... போதும் ஆண்டவரே நீங்கள் ... சுமந்தது ....!!! சிலுவையில் உம்மை ... சித்திரவதை செய்தபோதும் சிரித்துக்கொண்டே எமக்காய் ... சித்திரவதையை ஏற்றவரே.... சித்தம் அறிந்து சொல்கிறேன் ... எமக்காக நீர் படும் சித்திரவதை ... போதும் ஆண்டவரே போதும் ....!!! அண்டத்தில் வாழும் மாந்தரின் ... அறிவுக்கண்ணை திறந்துவிடும் ... அவரவர் பாவங்களை அவரவரே ... சுமக்கவிடும் - எமக்காக நீவீர் சுமப்பதால் இன்னும் பாவங்கள் ... பெருகிக்கொண்டே செல்கிறது ....!!! ஒவொருவரின் பாவத்துக்கும் ... அவர்கள் சிலுவை சுமக்கனும் ... சித்திரவதை படவேண்டும் ... நீவீர் எமக்காக பட்டதுயரை ... அவரவர் சுமக்கனும் - பாவத்தின் ... வலியை அவரவர் உடனுக்குடன் ... புரியவேண்டும் ...!!! உயிர் வேறு உடல் வேறாய்... பேரண்டத்தின் சக்தியால் பெற்றவரே ... நீ பெற்ற வலியை நாம் பார்த்த போது .... எம் உயிர் வலித்தது - காரணம் .. உடல் உயிர் ஒன்றாய் வாழ்கிறோம் .... ஆண்டவரே சுத்த அறிவை தாரும் .... எம்மையும் உடல் வேறு உயிர் வேறாய் .. தொழிற்படவையும் ......!!! மனித பகுத்தறிவு சிறப்பாக .... தொழிற்...

கே இனியவன் சென்ரியூக்கள்

சுவருக்குள்  சண்டை பரகசியமாகிறது தொலைகாட்சி நிகழ்சி $$$ குழந்தையால் முடியாது தாத்தாவால் முடியாது புஸ்பம் $$$ உயிரில்லை பேசிகொண்டிருக்கும் தொலைக்காட்சி $$$ பலதிருமணம் சட்டம் தடுக்காது திரைப்படம் $$$ கடவுளே பாதுகாத்திடு கோயிலில் வேண்டுதல் வாசலில் புதுச்செருப்பு $$$ கே இனியவன்  சென்ரியூக்கள்

கே இனியவன் ஹைக்கூகள்

தகுதி இல்லை விழுந்து விட்டேன் பதவி கிடைத்தது @@@ நான் பணக்காரன் பாலில் குளிப்பேன் சுவாமி சிலை @@@ நான் இரட்டை பிறவி உருவத்தில் வேறுபாடில்லை முன் கண்ணாடி @@@ சின்ன உரசல் உடல் சூடாகியது தீக்குச்சி @@@ அழகில் கிள்ளினேன் மயங்கி விழுத்தது மலர் + கே இனியவன் ஹைக்கூகள் 

அப்படியே என்னுள் இருகிறாய் ...

நீ எப்படி என்னிடம் வந்தாயோ .... அப்படியே என்னுள் இருகிறாய் ... நான் உனக்கும் சேர்த்து மூச்சு ... விடுகிறேன் .....!!! எத்தனை முறை - நீ சிரிக்கிறாயோ -அத்தனை .. முறை நான் உன் கன்னகுழிக்குள் ... புதைந்து விடுகிறேன் ....!!! நாள் முழுதும் பல வேதனை ... ஒரு முறை உன் அழைப்பு ... தொலைபேசி ஓசை- துடைத்து .. விடும் வேதனையை ....!!! + இதயம் தொடும்காதல் கவிதை

இதயம் தொடும்காதல் கவிதை

எனக்கும் காதலி இருக்கிறாள் .... ஊர் அறிய செய்தவள் - நீ உன் காதலுக்கு நன்றி ... உன் நினைவுகளோடு ... நான் வாழவைத்ததற்கு ..... உன் காதலுக்கு நன்றி ... பிறப்பின் ஆனந்தத்தை .... உணரசெய்தவளே - நீ காதலியில்லை -காதல் பிரபஞ்சம் ......!!!

காதல் ஒரு பூச்சியம்

காதல் ஒரு பூச்சியம் காதலித்தவர் சேர்ந்தால் காதல் பூச்சியமாகி விடும் ....!!! + கே இனியவன் குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை

கே இனியவன் - சிந்தனை கிறுக்கல்கள்

கண்ணால் வளர்த்து ... கண்ணீரால் கருகும் ... வாழ்க்கை வேண்டாம் ...!!! @@@@@ கண்ணீருக்குதான் ... சிந்தவும் தெரியும் .... சிந்திக்கவும் தெரியும் ....!!! @@@@@ எல்லா இடத்திலும் ... உண்மை பேசியவனும் ... துன்பத்தை அனுபவிப்பான் ....!!!'

ஒரு சிந்தனை கவிதை

நான் அரசியல் வாதியாவேன் .... அடுத்த வேளை உணவுக்கு ... போராடினாலும் என்  கர்வம் ... விட்டு கொடுக்கமாட்டேன் இறந்தாலும்..இறப்பேன் என் வறட்டு கர்வத்தை விடவே மாட்டேன் .....!!! இஸ்ரப்பட்டு கஸ்ரப்பட்டு ... நல்லவனாக நடிக்க நாள் தோறும் ... ஒவ்வொரு வேடம் போடுவேன் ... முட்டாள்கள் நான் உண்மையானவன் ... என்று ஏமார்ந்து கொண்டிருக்கிறார்கள் .... சிலகாலத்தில் குறுக்கு வழியால் .... பணம் சம்பாதிப்பேன் - அதில் ஒரு பகுதியை சமூக தொண்டு செய்வேன் ...!!! சமூக சிப்பி.. சமூக பற்றாளன் ... சமூகத்தில் பிரதி நிதி என்று ... சமூகம் பட்டம் தரும் -அதுவே ...... அரசியலுக்கான அடிப்படைத்தகுதி ... அரசியல் வாதி ஆவேன் - அப்போதான் சொன்னதை செய்யதேவையில்லாத ... சமூக தொண்டன் ஆவேன் .....!!! உண்மை அரசியல் வாதிகளை ... ஏளனம் செய்வேன் .வாழதெரியாத .. பச்சோந்திகள் என்பேன் .....! இறப்பேன் எனக்கு சிலை வரும் .... இறந்தபின்னும் சமூக தொண்டனாக ... என் சார்பு மக்களுக்கு தலைவனாக ... வாழ்ந்து கொண்டிருப்பேன் ......!!!    

காட்சியும் கவிதையும் 02

படம்
தெய்வத்தை நாம் தான் ... வணங்கவேண்டும் ... தெய்வம் எங்களை வணங்க ... கூடாது ....!!! தாயே நீங்கள் ... இருகரம் கூப்பி நிற்கும் ... போது அடிவயிறுவரை ... வலிக்கிறது ...!!! எந்த தாயும் ... கரம் கூப்பி வரம் கேட்க ... வைக்காதீர் - அது எமக்கு ... சாபம் ....!!!

காட்சியும் கவிதையும் - 01

படம்
நாம்  நடை பழகும் போது ...  எமக்கு ஊன்று கோல்...  நம் தாய் - நடை இடறி ...  நாம் விழுந்தாலும்...  தன்னையே நிந்திப்பார் ...  தாய் .....!!!  தாயே ....  நீங்கள் நடை இடறும் போது...  நாங்கள் தானே உமக்கு ...  ஊன்று கோல் - எதற்காக  இந்த பட்டவயத்தில் ஏன்...  இந்த பட்ட தடி ...?  தாயே புரிகிறது ...  உங்கள் சிந்தனை ...  பிள்ளையை சுமந்த நீங்கள் ...  பிள்ளைக்கு சுமையாய் இருக்க ...  விரும்பவில்லை போலும் ...!!!

என் தனிமை ....!!!

தனிமையில் இருந்து ... என்னையே நினைத்தேன் ... தனிமை இனிமையாக இருந்தது ...!!! இப்போ ... தனிமையில் இருந்து .. உன்னை நினைக்கிறேன் ... கொடுமையாக இருக்கிறது ... என் தனிமை ....!!! + உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!!

என் வலி புரியும் உயிரே ....!!!

பிரிந்து விட்டோம் என்று ... நீ எப்படி சொல்வாய் ....? பிரித்தெடுக்க உன் நினைவுகள் ... என் இதயத்தில் பசையால்... ஒட்டப்படவில்லை ....!!! நீ தந்த நினைவுகள் ... உனக்கு கடுகாய் இருக்கலாம் ... எனக்கு அது கருங்கல் ...!!!  + உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!!

அழைப்பிதல் தருகிறாய் ....!!!

காதல் கடிதத்தை எதிர் பார்த்தேன் திருமண அழைப்பிதல் தருகிறாய் ....!!! + கே இனியவன் குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை

காதல் மரமாக ...

காதல் மரமாக ... தோன்றுவதில்லை ..... தளிராகதான் தோன்றும் ...!!! + கே இனியவன் குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை

நம்காதல் ....!!!

கருங்கல்லில் .... ஆணி அடிப்பது போல் .... நம்காதல் ....!!! + கே இனியவன் குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை