இதயம் தானடி விட்டு விட்டு துடிக்கும் உன் நினைவு நினைப்பது விடாமலே துடிக்குது ....!!! முதல் நாள் உன்னை சந்தித்தேன் இரண்டாம் நாள் உன்னோடு கதைத்தேன் வாழ் நாள் முழுவதும் ஏங்குகிறேன் ....!!!
வெள்ளை மனமாக இருந்த என்னை வான் வில்லாக மாற்றினாய் சந்தோசப்பட்டேன் நிலைக்க வில்லை சந்தோசம் வானவில்லில் அம்பை சொறுவியவள் நீ பலர் அழும்போது ஆறுதல் சொன்ன நீ இப்போ நான் அழுகிறேன் ஆறுதல் சொல்ல நீ எங்கே...?
என் இதயத்தை உன்னிடம் தந்துவிட்டேன் விளையாட்டுப்பொருளாகவும் இதய வீட்டுப்போருளாகவும் பாவிப்பது உன்னை பொறுத்தது காதல் எதிர் பார்ப்பற்ற இதயங்களின் இணைப்பு இறைவனின் பிணைப்பு நீ விளையாட்டு பொருளாக பயன் படுத்தினால் வலியை தருவாய் ..... இதயவீட்டு பொருளாக பயன்படுத்தினால் -வலியை துடைப்பாய் ....!!!
தேவையான எல்லா விடயங்களையும் உனக்காக மறந்தேன் கடவுளின் தண்டனை நீ என்னை மறந்து விட்டாய் ...!!! உனக்கு பூ தந்தேன் அன்புக்கு அடையாளமாய் நீ சூடுவதற்கு தந்ததாக நினைத்து விட்டாய் ....!!! நீ பிரிந்து செல் கவலையில்லை உன் நினைவுகள் என்னிடம் இருக்கும் வரை கவலையில்லை
நினைவுகளுடன் என்னை போராடவிட்டு -நீ எப்படி நிம்மதியாய் இருக்கிறாய் ...? நான் உயிரோடு இருக்கும் காலம் வரை உன் உயிராக இருக்கும் காதல் வரத்தை தந்துவிடுவாயா அன்பே ...? உன்னை எல்லோருக்கும் பிடிக்கிறது அதுதான் எனக்கு பயமாக இருக்கிறது -என்றாலும் நான் கொடுத்து வைத்தவன் உன்னிடம் என் இதயம் ....!!!
உன் நினைவோடு வாழ்வது போதாது என்று நினைவு பொருளையும் தந்து கொல்லுகிறாய் .... வீட்டார் யாரும் இல்லை என்று நினைத்து எத்தனை முறை -உன் நினைவு பொருட்களுடன் கதைத்து தம்பி தங்கையுடன் கிண்டல் வாங்கினேன் தெரியுமா ....? நீ நினைவு பொருளாக தருகிறாய் என்னிடம் வந்து அவை உயிர் பெறுகின்றன அன்பே ....!!!
எந்த விலை கொடுத்தாலும் பெறமுடியாது -உன் சிரிப்பு எந்த விலை கொடுத்தாலும் பெறமுடியாது - உன் வெட்கம் மலர்மேல் உள்ல காதல் பனிக்குத்தான் தெரியும் உன் மீதுள்ள காதல் என் இதயத்துக்குத்தான் த்தெரியும் ...!!! நீ சிரித்த அத்தனை சிரிப்பும் சிற்பமாய் இருக்குதடி நெஞ்சில் ...!!!
காதல் ஒன்றுதான் புரிந்து கொண்டாலும் அழகு -பிரிந்து சென்றாலும் அழகு -வலிகள் தான் வேறுபடும் காதல் வேறுபடாது ....!!! உன்னை என்று பார்த்தேனோ அன்று நான் இறைவனிடம் கேட்ட வரம் உன்னை எனக்கு தா என்று அல்ல ...? உன்னை தவிர யாரையும் தந்துவிடாதே என்று ....!!! உன் காந்த கண்ணில் பட்டு துடிக்கும் இரும்பு கண் நான் -நீ அசையும் திசையெல்லாம் அசைகிறேன்....!!!
நீ வரும் வழியையே என் விழி பார்க்கும் -உன் விழிக்கு அப்பால் சென்று என் உயிர் உன்னை தேடும் ....!!! தேடிக்களைத்த என் உயிர் துடிப்பதை நிறுத்த ஜோசிக்கும் உன்னை தேடுவதை நிறுத்த ஜோசிக்காது ....!!! என் உயிர் என்னக்காக துடித்ததை விட உனக்காக துடிப்பதே பாக்கியம் என்கிறது அந்தளவுக்கு நீ உயிராகிவிட்டாய் ....!!!