இடுகைகள்

மனம் இருளவில்லை .....!!!

உனக்காக காத்திருக்கிறேன் வானம் இருண்டுவிட்டது கவலைப்படாதே -மனம் இருளவில்லை .....!!! எத்தனையோ சாலைகளில் இத்தனை வயது வரை விபத்தில் சிக்கவில்லை உன்னிடம் சிக்கிவிட்டேன் ....!!! உன் நினைவோடு இடறி விழுந்தேன் - என் இதயம் அழுகிறது -உன் இதயத்தை காப்பாற்றி விட்டேன் .....!!!

உன் புன்னகையின்

கண் பட்டு காயப்பட்ட முதல் மனிதன் நானாக தான் இருக்கமுடியும் ... உன் புன்னகையின் வெளிச்சத்தில் புகைப்படம் எடுக்கப்பட்டவனும் நானாகத்தான் இருக்க முடியும் ....!!!

மயங்கியது கண் தானே ....!!!

என் இதயத்துக்கு உன்னை பார்க்கும் சக்தி இருந்திருந்தால் அன்றே உன்னை வெறுத்திருக்கும் என் கண்ணை நானே குத்தவேண்டும் உன்னை கண்டு மயங்கியது கண் தானே ....!!!

ஹைக்கூ கவிதை

ஹைக்கூ கவிதை பிள்ளையாருக்கு பால் அபிசேகம் ஏக்கத்துடன் பார்க்கிறாள் - பால் வற்றிய தாய் -

கொடுக்கும் நட்பு ....!!!

எனக்கு வேண்டியதை நான் விரும்பும் போது எதிர்பாராமல் கொடுக்கும் நட்பு ....!!! தனக்கு வேண்டியதை என்நிலையை பொறுத்து தீர்மானிக்கும் நட்பு .....!!! தனக்காக இருந்த ஒன்றையும் சற்றும் ஜோசிக்காமல் தரும் நட்பு ....!!!

உனக்கான கவிதை

உன்னை கண்டவுடன் பொய் சொல்ல முடியாமல் தவிர்க்கும் போது வருவதே உனக்கான கவிதை

சிற்பமாக வடிக்கிறேன் ....!!!

நீ கருங்கல்லாக இரு நான் சிற்பமாக வடிக்கிறேன் இரும்பாக இரு அதிலும் சிற்பமாக வடிக்கிறேன் ....!!!

முத்தம் கிடைக்கும் ....!!!

பலமுறை பார்த்தால் ஒருமுறை காதல் வரும் -காதலின் பின் பலமுறை ஏங்கினால் -ஒருமுறை முத்தம்  கிடைக்கும் ....!!!

எப்போதும் மறக்காமல்

எப்போதும் மறக்காமல் இருப்பது காதல் என்ன நடந்தாலும் வெறுக்காமல் இருப்பது நட்பு

நீ என்னை வெறுத்து

நீ என்னை வெறுத்து பலமாதங்கள் ஆகிவிட்டது -என்றாலும் நாம் முதல் நாளில் பெற்ற இன்பத்துடன் வாழ்ந்துகொண்டே இருக்கிறேன் ....!!!

எங்கே சென்றாய் நண்பா என்னை விட்டு ...?

எங்கே சென்றாய் நண்பா என்னை விட்டு ...?   காற்சட்டை போட்ட வயதில் .... கைகோற்றுக்கொண்டு ஒட்டிபிறந்த உடன் பிறப்புப்போல் ஊர் முழுவதும் சுற்றி திரிவோம் வெய்யில் மழை பாராமல் - உன் பெயரை எனக்கும் என் பெயரை உனக்கும் மாற்றி கூப்பிடும் தாத்தாவின் தர்மசங்கடத்தை இன்று நினைத்தாலும் சிரிப்புவரும் .. சொல்லி சிரிக்க வேண்டும்போல் இருக்கடா எங்கே சென்றாய் நண்பா என்னை விட்டு ...? லுங்கி கட்டியவயத்தில் ..... எனக்கு வருத்தமென்றால் -உன் உடல் சோரும் -உனக்கு வருத்தம் என்றால் எனக்கு உடல் சோரும் ஊரிலுள்ள மூலிகை எல்லாம் கொண்டுவந்து தந்து குடியடா .. குடியடா என்று நச்சரித்து நச்சரித்து மூலிகையால் வருத்தம் மாறுதோ தெரியாது உன் அன்பு மூலிகையால் மாறிவிடும் வருத்தம் -இதையெலாம் சொல்லி சிரிக்கணும் போல இருக்கடா எங்கே சென்றாய் நண்பா என்னை விட்டு ...? ஜீன்ஸ் போட்ட வயதில் ..... எனக்கு தான் காதல் வலி எனக்கு தான் வாழ்க்கை வலி உனக்கு நான் சொல்லி அழும்போது உன் ஓரக்கண்ணால் வடியுமடா ஒரு துளி கண்ணீர் - நான் குடம் குடமாய் வடித்த கண்ணீருக்கு ஈடாகுமடா உன் ஒரு துளி கண்ணீர் -இப்போ நினைத்தா...

அழைக்க மாட்டாயா ...?

ஞாயிறு- முகமுடையாள் திங்கள்- உடல் அழகுடையாள் செவ்வாயால்- மெல்ல சிரித்தாள் மாதுருபாகன்- மயங்கினான் காதலில் வியாக்கியானம் செய்கிறாள் எனக்கு குரு- போல் ... நான் துடிக்கிறேன் தூரத்து வெள்ளி- போல் சனியனே- வந்து விடு என்றாவது அழைக்க மாட்டாயா ...?

பிரிவும் காதலில்

பிரிவின் வலியை நீ தாங்குவாய் என்றால் பிரிவை நான் ஏற்கிறேன் நீ இல்லாத ஒரு வறண்ட வாழ்கை கொடூரம் தான் .. என்ன செய்வது பிரிவும் காதலில் ஒரு அங்கம் தானே ....!!!

Haikoo -05

மரம் பரவசப்பட்டது கிளையெல்லாம் ஜோடிக்கிளிகள்

Haikoo 04

எனக்கும் உனக்கும் தெரியாமல் அழுதேன் கனவில்