சுவாசிக்கும் மூச்சாய் நீ பேசும் பேச்சாய் நீ சிரிக்கும் சிரிப்பாய் நீ காணும் கனவாய் நீ விடும் கண்ணீர் நீ இத்தனையும் நீயாக அத்தனையும் நானாக காதலில் எப்படி வேறுபடும் ...? & கவிப்புயல் இனியவன்
விழியால் எய்த அம்பால்......... இதயத்தில் துவாரம்................. அதுவொன்றும் வியப்பில்லை .... என் இதயம் உன்னிடம்............. போகவேண்டும் என்று.............. துடிக்கிறது காயத்தை................ மறந்து ....!!! என் கவிதை அனைத்தும் உன் சின்ன சின்ன செல்ல சண்டையால் வருகிறது நிறுத்தி விடாதே செல்ல குறும்பு சண்டையை ....!!! & கவிப்புயல் இனியவன்
காதல் இதய கோவில்..... அதில், கனவு தீப ஒளி ..... நினைவு அர்ச்சனை..... முத்தம் பிரசாதம்.... வலிகள்நேர்த்திக்கடன் .... உன் சிரிப்பு தேர் திருவிழா.... பிரிவு மடை சார்த்தல் ...!!! & கவிப்புயல் இனியவன்
காதற்ற ............ ஊசியும் கூட..... வராது என்பது..... உண்மைதான் ...!!! நீ ............. காதோரம் பேசிய..... வார்த்தைகள்... கல்லறை வரை....... தொடருதே ....!!! உன்னை ''''''''''' கண்ட நாள் முதல்'''''''''''''''' உள்ளங்கையில் இருக்கும்''''''''''''''''' ஆயுள் ரேகை குறைந்து வருகிறது ,,,,!!! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன் கவிதை எண் - 185
நீ ...... என்னை ஒரு கனமேனும்.... காதலிக்காமல் நான் உயிர்.... துறக்க போவதில்லை ...!!! என் ............... காதல் நினைவுகளை.............. வீட்டின் ஒட்டடைபோல்......... துடைத்து எறிந்து விட்டாயே ...!!! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன் கவிதை எண் - 184
அழகியே என் உயிரானவளே........ அழகு அழகு தமிழ் போல் நீ அழகு ... அகங்காரம் கொண்டவளே நீ அழகு .... அலங்காரம் இல்லாவிடினும் நீ அழகு .... அகடவிகடம் கொண்டவளே நீ அழகு .... அகத்தில் அழகை தருபவளே நீ அழகு ....!!! அகலவன் பொழுதினில்........ அன்றட பணியை தொடரும்..... அனைவருகும் இனியவனின்.... அன்பு வணக்கம்.......!!!
உனக்காக எழுதவா ..? உன்னையே எழுதவா ..? உனக்கா எழுதி......... உன்னோடு இருக்கவே ..... என் கவிதைகள் .. விரும்புகிறது ...!!! கவிதை .. எழுதிக்கொண்டே இருப்பேன் .. வார்த்தை தேவையில்லை ... என்னிடம் உந்தன் நினைவுகள் இருக்கும் வரை என்னுள்கவிதையாய் . . . பொழிந்து கொண்டே.. இருப்பேன் ...!!! & என் காதல் கவிதை கவிப்புயல் இனியவன்
விண்ணில் நட்சத்திரம் ... நடனமாடுகிறது .....!!! மண்ணில் மழை ... நடனமாடுகிறது.......!!! என்னுள் உன் நினைவுகள் .... நடனமாடுகின்றன ...!!! & என் காதல் கவிதை கவிப்புயல் இனியவன்
உயிரே ...... உன்னை பார்க்க .. என் விழிகள் படும் பாட்டைப்பார் ...!!! நீயோ இதயத்தில் ... மறைந்திருப்பதை .... மறந்துபோய் .... தேடிக்கொண்டிருக்குதடி....!!! & என் காதல் கவிதை கவிப்புயல் இனியவன்
கோபமான உன் முகத்தை பார்த்தாலே எனக்கு ரசிக்கதான் தோன்றுகிறது உன்னில் கோபமே வரமாட்டேன் என்கிறதே ....!!! & கவிப்புயல் இனியவன் ---- நீ ................. சிப்பிக்குள் இருக்கும் ... முத்தைப்போல் என் இதய அறைக்குள் .. முத்தாய் இருக்கிறாய் ....! சிறு மழைதுளிதான் முத்தாக மாறுவது போல் ... உன் ஓரக்கண் பார்வையால் இதயத்துக்குள் முத்தானாய் ..........! முத்துக்குழிப்பது எவ்வளவு கடினமோ ... அதைவிட கடினம் உன்னை அறிந்து கொள்வது ..? & கவிப்புயல் இனியவன்
தொழிலாளியை ..... சுரண்டுவதற்கு அவர்களிடம் ...... சதையில்லை ..... எலும்புகள் தான் மீதியாய் ...... இருக்கின்றன ...........!!! குடிகாரர் மட்டுமல்ல ..... அரசியல் வாதிகளும் .... உளறுகிறார் ................!!! நீ தீக்குச்சி தலைக்கனம் .... உன்னை சாம்பலாக்கும் ....!!! & சமுதாய கஸல் கவிதை கவிப்புயல் இனியவன்
ஒவ்வொரு பிறந்த நாள் ..... கொண்டாட்டமும் ..... இறக்கும் நாளின் .... திறப்பு விழா ..............!!! நீ அடையாளப்படும் .... போதுபிரச்சனையை ...... எதிர் கொள்கிறாய் ......!!! மெழுகு திரி ..... தொழிற்சாலையில் ...... உழைப்பாளிகள் .... உயிருள்ள மெழுகுதிரி .......!!! & சமுதாய கஸல் கவிதை கவிப்புயல் இனியவன்