இடுகைகள்

வலியும் சுகம்தான்.......!!!

எரிவேன் ... தெரிந்துகொண்டு... விட்டில் பூச்சி ...... விளக்கில் விழுந்து ... எரிகிறது ...... எரிவதில்....... அது சுகம் காணுகிறது.........!!! நானும் உன்னில் ..... வலியை எதிர்பார்த்தே ... காதலித்தேன்.... உன்னால் வரும் ..... வலியும் சுகம்தான்.......!!! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

கடுகு கவிதை கவிப்புயல் இனியவன்

என் கையில் கிடைக்காத நிலவு நீ....! ஆனாலும் தினம் சலிக்காமல் உனை இரசிக்கும் ரசிகன் நான்....!!! & கடுகு கவிதை கவிப்புயல் இனியவன் @@@ என் கவிதைகளை, ஏனடி சேமிக்கிறாய்...? நீ தான் கவிதைகளின், சொந்தகாரனையே திருடி விட்டாயே. & கடுகு கவிதை கவிப்புயல் இனியவன் @@@ எழுத எதுவுமே .... தோன்றவில்லையென்றால்.... உடனே கண்களைமூடி....... உன்னை நினைத்துவிடுகிறேன்....! ஏனென்றால்... நான் எழுதிக்கொண்டிருப்பதே உனக்காகத்தானே....!!! & கடுகு கவிதை கவிப்புயல் இனியவன்

நீ புனிதமானவள் ........!!!

என் தப்பு தான் -என் கவிதைகள் உனக்கு .... புரியும் என்று நான் .... புரிந்தது தவறுதான் .....!!! நீ என்னை பற்றி .... ஏதும் சொல்லு கவலை .... இல்லை கவிதையை ..... காயப்படுத்தாதே .......!!! நான் மின் ஒளி .... நீ எண்ணெய் விளக்கு .... என்றாலும் ...... நீ புனிதமானவள் ........!!! & முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1055 கவிப்புயல் இனியவன்

நீ மின்னலுக்கு பிறந்தவள்

காதலில் தோற்றவர்கள் ..... காதலை விமர்சிக்க .... கூடாது ....................!!! நீ மின்னலுக்கு ...... பிறந்தவள் .... இதயத்தை கருக்கி ..... விட்டாய் ...............!!! நீ நாணத்தால் தலை ..... குனிகிறாய் என்று ..... நினைத்தேன் ........ காதல் நாணயம் ..... இல்லாமல் குனிந்து ... இருக்கிறாய் ........!!! & முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1054 கவிப்புயல் இனியவன்

எங்கே நிம்மதி ....?

காதலுக்கு முன் ..... நிம்மதி ..... காதலுக்கு பின் .... எங்கே நிம்மதி ....? இன்று  உன் காதல் முடிவு .... பூவா தலையா ....? பதட்டம் ............!!! என் கவிதையில் .... நீ பயன் பெறவில்லை ..... காதலர்கள் ..... பயன் படுகிறார்கள் .....!!! &^& முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1053 கவிப்புயல் இனியவன்

நீ இதழ்களாய் உதிர்கிறாய் ....!!!

சொற்களால் .... கவிமாலை தொகுக்கிறேன் ..... நீ இதழ்களாய் உதிர்கிறாய் ....!!! உன் புன்னகை அவ்வளவு .... கொடுமையா ......? இதயத்தில் ஒளியே .... இல்லாமல் போகிட்டுதே ....!!! நீ என்னை நோக்கி வருகிறாய் ..... என் இதய கதவு தானாக முடுக்கிறது .....!!! &^& முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1052 கவிப்புயல் இனியவன்

சமுதாய கஸல் கவிதைகள்

மரமாக இருந்தபோது .... நிம்மதியாக இருந்தேன் ..... பலகை ஆகினேன்..... படாத பாடு படுகிறேன் .....!!! அடை மழைக்கு..... கிழிந்த குடைக்கும்.... மதிப்பிருக்கும்........!!! சேர்ந்த செல்வம் .... கரைகிறது ...... தண்ணீரை ..... வீணாக்கியதால்.......!!! & சமுதாய கஸல் கவிதைகள் கவிப்புயல் இனியவன் 2016 . 11 . 12

கவிப்புயலின் சமுதாய கஸல்

ஓலை வீடு .... வறியவனுக்கு வசிப்பிடம் .... செல்வந்தனுக்கு வாடி வீடு .....!!! வியர்வை .... உழைப்பாளிக்கு நாற்றம் ..... முதலாளிக்கு துற நாற்றம் .....!!! உழைப்பு முழுதும் .... செலவு  செய்தால் ..... ஊதாரி என்கிறார்கள் .... செலவு செய்தது .... உணவுக்கு மட்டும் .....!!! & சமுதாய கஸல் கவிதைகள் கவிப்புயல் இனியவன் 2016 . 11 . 12 

சோகங்களை மறைக்கலாம்....

என்னுயிரே  உனக்கேன் இவ்வளவு சோகம் ...? நான் இருக்கையில் உனக்கேன் .... சோக கவிதை என்று ..... எப்போதாவது கேட்டிருக்கிறாயா....? என் உள்ளத்தில் ..... காதல் சோலைகளைவிட ... சோகங்களே அதிகம் ... சோகங்களை மறைக்கலாம்....  மறக்கமுடியாது ...!!! சோகங்களை......  மறைக்கத்தான் சோகக்கவிதைகள்... எழுதுகிறேன் கண்ணே..... சோலையில் நின்றவனைவிட .. சோகத்தில் நின்றவன் தான் .. சாதித்துள்ளான் ....!!! நான் சோகத்தில் நிற்கிறேன் ....!!!

கற்பனையில் வாழ்ந்துவிட்டேன் ......!!!

இப்போதுதான் .... புரிகிறது -நீ என் இதயத்தை .... கண்ணாடியாய் ..... பார்த்திருக்கிறாய் ......!!! அதுதான் அப்பப்போ .... வந்து உன்னை அழகுபடுத்த ..... என்னை பயன்படுத்தி ..... இருக்கிறாய் .........!!! நான் என்னுள் நீ காதல் செய்கிறாய் ..... என்று கற்பனையில் ..... வாழ்ந்துவிட்டேன் ......!!! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

இதயத்தையே நனைக்கிறது ..!!!

உன் தொலைபேசி ... அழைப்பு என்னை ..... சந்தேகிக்கவைக்கிறது ....??? என்னை ..... மறந்து விடு என்று .. சொல்லியபின்  மௌனமானாய் ... அப்படிஎன்றால் நீ அழுகிறாய் ....!!! உலகில் எந்த காதலர்கள் .. அழாமல் காதலை மறுத்தார்கள் ...??? உன் தொலைபேசியில் .... இருந்து வரும் கண்ணீர் ... இதயத்தையே நனைக்கிறது ..!!! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன் 

உன் முகம் பார்க்கவே ......!!!

தாயே ... கருவறையில் இருந்து .... உதைத்தேன் உன் முகம் ..... பார்க்கவே ........!!! அடிக்கடி பசியால் .... அழுதேன் பால் குடிக்கும் .... போதும் உன் முகம் ..... பார்க்கவே ........!!! தூக்கத்தில் எழுந்தும் ..... அழுதேன் ..... உன் முகம் பார்க்கவே ......!!! நீங்கள் .... என்னை யாருடனும்... விட்டு விட்டு சென்றால்.... அழுதேன் ..... பயத்தினால் அல்ல,, பாசத்தை பிரிந்திடுவனோ...... என்ற பயத்தினால்....!!! & பஞ்ச வர்ண கவிதைகள் வர்ணம் - அம்மா கவிதை கவிப்புயல் இனியவன்

கல்லூரியின் கடைசிநாள் ....

கல்லூரியின் கடைசிநாள் .... உன் பயணப்பொதியை.... தம்பி ஓடிவந்து தூக்கிறான்.....!!! உன் அருகே இருந்துவர .. உன் அம்மா இருக்கையை .... சரிசெய்கிறார் .....!!! இறங்கும் இடத்தில் ... வரவேற்க உன் உறவினர் ...!!! உன்னை அனுப்பிவிட்டு .... நான் மட்டும் அனாதையாக ... தனியே திரும்புகிறேன் ......!!! ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

ஏன் படைத்தான் ......?

உனக்கும் இறைவனுக்கும் ..... என்ன தகராறு .......? பூவைப்போல் உடலையும் ..... பஞ்சைப்போல் பாதத்தையும் ..... படைத்தவன் ..... சுட்டெரிக்கும்  சூரியனையும் .... வலியை தரும் முள்ளையும்..... ஏன் படைத்தான் ......? & இன்ப காதல் கவிதை கவிப்புயல் இனியவன் 

முடியவில்லை ......!!!

முடியவில்லை ...... பிரிவை தாங்க முடியவில்லை ......!!! தெரியவில்லை .... வேறுமுகம் எனக்கு.... தெரியவில்லை.....!!! பிரியவில்லை .... மனத்தால் நாம்... பிரியவில்லை...!!! புரியவில்லை நீ .... ஏன் வெறுத்தாய் என்று .. புரியவில்லை ...!!! நம்புகிறேன் ..... மீண்டும் வருவாய் என்று .. நம்புகிறேன் ...!!! & கவிப்புயல் இனியவன்