இடுகைகள்

இதயத்துக்கு ஒரு கவிதை

இதயம் வலித்தால் கண்ணீர்.......!!! இதயம் சிலுத்தால் .... சிரிப்பு..........!!! இதயம் சிந்தித்தால் .... கவிதை........!!! இதயம் சிறுக்கினால் ஓவியம் .......!!! இதயம்  முணுமுணுத்தால் வார்த்தை......!!! இதயம் காண்பது..... கனவு......!!! இதயம் தூங்குவது..... மௌனம்......!!! இதயம் அழுவது ..... பிரிவு.......!!! இதயம் இறப்பது.... தோல்வி.....!!! இதயமே நீயாக இருப்பது.... காதல்.......!!! ^ இதயத்துக்கு ஒரு கவிதை கவிப்புயல் இனியவன்  

மனசுக்கு ஒரு கவிதை

குழந்தை பருவத்தில் எதை சொன்னாலும் மறுக்கும் மனசு ....!!! இளமை பருவத்தில் காதலி எதை சொன்னாலும் தாங்கும் மனசு ...!!! முதுமை பருவத்தில்.. எதைசொன்னாலும்.... வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பார்க்கும் மனசு .....!!! ^ மனசுக்கு ஒரு  கவிதை கவிப்புயல் இனியவன் 

தன்னம்பிக்கை கவிதை

வளைந்து நிற்பது ... தோல்விக்கு மட்டும் .... காரணமல்ல ... உயிருக்கும் ஆபத்து ....!!! பயம் ........ உயிராற்றலை கெடுக்கும்..... உயிர் கொல்லி ...!!! பயந்தால்...... விரைவில் இறப்பாய் ... நோய்வாய் படுவாய் ....!!! பயம் ..... தோல்விக்கு மட்டுமல்ல ... உன் உயிருக்கும் ..... காலன் ....!!! நிமிர்ந்து நில் ...... துணிந்து நில் .... உயிராற்றல் பெருகும்.... தன்னம்பிக்கை வளரும்.... வெற்றி நிச்சயம் ....!!! ^ தன்னம்பிக்கை கவிதை  கவிப்புயல் இனியவன்

சமத்துவம் தானாகதோன்றும் ....!!!

எனக்கே வேண்டும் ... எல்லாம்  வேண்டும் ... நினைப்பே -இன்றைய... பொருளாதார சமத்துவ.... இன்மைக்கு காரணம் ....!!! எனக்கும் வேண்டும் .. எல்லோருக்கும் வேண்டும்... என்று நினைத்தால் பொருளாதார சமத்துவம் தானாகதோன்றும் ....!!! வறிய நாடு... செல்வந்த நாடு..... வருமான கோடுதான் ... காரணம் - அதை தீர்மானித்தது .. மனித எண்ண கோடு என்ற .... ஆசைக்கோடு தான் ....!!! நாடு விருத்தியடைய .. வருமான விருத்தி மட்டுமல்ல...... மனித எண்ணவிருத்தி தான்..... மிக அவசியம் .... எனக்கும் வேண்டும் என்பது .... முயற்சி...........!!! எல்லோருக்கும் வேண்டும் என்பது .... தியாகம்..........!!! முயற்சியும் வேண்டும் ..... தியாகமும் வேண்டும் .....!!! ^ பொருளாதார கவிதை கவிப்புயல் இனியவன் 

வாழ்க்கை தத்துவ கவிதை

பசுவிடம் சாந்தம் உண்டு..... யானையிடம் பொறுமையுண்டு .... நரியிடம் பகிரும் பண்புண்டு ..... புலியிடம் வீரமுண்டு ..... சிறுத்தையிடம் வேகம் உண்டு ..... நாயிடம் நன்றியுண்டு ..... குரங்கிடம் கொள்கையுண்டு .... சிங்கத்திடம் ஆளுமையுண்டு .... குதிரையிடம் வலிமையுண்டு .... மானிடம் அழகு உண்டு ..... முயலிடம் மென்மையுண்டு..... பூனையிடம் தூய்மை உண்டு .....!!! & இத்தகைய குணத்தை இழக்கும் .... மனிதா - எப்படி சொல்வாய் ..... இன்னொருவனை பார்த்து ..... நீ மிருகமடா  என்று .....? ^ வாழ்க்கை தத்துவ கவிதை கவிப்புயல் இனியவன்

என்ன உலகமடா

வெள்ளை வேட்டி கட்டி .. கழுத்தில் சங்கிலி போட்டு ... சட்டை பைக்குள் -பணம் தெரியும் படி வைத்து .... போகிறவரை -எல்லோரும் கும்பிடுறாங்க ..சாமி என்கிறாங்க ...!!! ஞானத்தில் பழுத்து .... அதிகமாக பேசாமல் ... ஊத்தை துணியுடன் ... ஞான பார்வையுடன் ... என் அருகில் ஒருவர் .... நிற்கிறார் -அவர் கேட்காமல்... காசை போடுகிறார்கள் ... பிச்சையாக ...!!! என்ன உலகமடா ... புறத்தோற்றத்தை... பார்த்து எவ்வளவு .... காலம் தான் ஏமாறும்.... இந்த உலகம் ...!!! ^ வாழ்க்கை கவிதை கவிப்புயல் இனியவன் 

உயிரும் நீ உயிரெழுத்தும் நீ

உயிரும் நீ உயிரெழுத்தும் நீ  ------ அ ன்பை நாடினேன் .. ஆ வலோடு காத்திருந்தேன்.. இ ன்பத்தை தந்தாவள்.... ஈ ட்டிபோல் குற்றுகிறாள்....!!! உ ள்ளம் ஒன்றும் கல் இல்லை .. ஊ னமுற்று  பேசாமல் இருக்க‌.... எ ல்லாம் செய்ததும் - நீ ஏ ளனம் செய்வதுன்-  நீ...!!! ஐ ந்து பொறிகளும்தன்.... ஒ ற்றுமையை இழந்துவிட்டன‌..... ஓ ரமாக‌ நின்று அழுகிறேன் .... ஔ டதம் நீ என்று காத்திருந்தேன்.... அஃதும் வீணானது என் வாழ்வில் ...!!! ^ காதல் கவிதை  கவிப்புயல் இனியவன் 

திருமண வாழ்த்து மடல்கள் 01

நண்பனுக்கு திருமண வாழ்த்து மடல் -------- என் .... உயிர் நண்பனுக்கு இன்று .... திருமணநாள் .....! வாழ்க்கையின் அனுபவத்தை ..... அணுஅணுவாய் பங்கேற்ற .... என் இனிய நண்பனுக்கு ..... இன்று திருமண நாள் .....!!! நான் வாழ்த்தாமல் அவனை ..... யார்வாழ்த்தினாலும் அவன் .... திருப்தியடைய மாட்டான் ..... அவனை வாழ்த்தும் உரிமையும் .... கடமையும் எனக்கே உண்டு .....!!! சாத்திரங்கள் படி வாழ்வதை .... காட்டிலும் சாதித்து காட்டும் .... மனிதனாக வாழ்ந்திட வாழ்த்துகிறேன் ..... பஞ்சாங்கப்படி வாழ்வதை காட்டிலும் .... பஞ்ச அங்கங்களோடு வாழ்நாள் .... முழுவதும் வாழ்ந்திட வாழ்த்துகிறேன் .....!!! உறவுகளை அரவணைத்து வாழ்ந்து ..... உற்றாரை உள்ளத்தால் நேசித்து ..... உள்ளன்போடு உன்னதமாய் வாழ ..... உழைத்த உழைப்புக்குள் இன்பமாய் .... உற்ற உயிர் நண்பனை உளமார ..... வாழ்த்துகிறேன் ...........................................!!! பரம்பரைக்கு இரு வாரிசை ...... பார்போற்றும் வகையில் படைத்திடு ..... பட்டறிவோடு திறம்பட வாழ்ந்திடு..... பெற்ற  துணைவியை நேசித்திடு ..... என்றும் உனக்கு உற்ற நண்பனாய் ..... ...

காதலுக்கு எந்த விதியும் பொருந்தாது .........!!!

இறந்தபின் .... நரகத்துக்கு ..... போகத்தேவையில்லை ..... அன்பாய் பழகிய ..... உறவை பிரித்துப்பார் ..... தினமும் நரகத்தில் .... வாழ்வாய் .........!!! என்னில் தான் தப்பு ..... சிறுவயதில் இருந்து ..... நான் விரும்புவதெல்லாம் .... கிடைக்கவேண்டும் என்று .... ஆசைப்பட்டதுக்கு ...... காதலுக்கு எந்த விதியும் .... பொருந்தாது .........!!! ^ முதல் காதல் அழிவதில்லை கவிப்புயல் இனியவன்

தெரியாமல் காதலித்தோம் .....

யாரென்று விபரம் .... தெரியாமல் காதலித்தோம் ..... விபரம் தெரிந்தபின் .... பிரிந்தோம் ......!!! ஒருவரை பிரிந்தபின் .... தனியே இருந்து அழும்... வலியிருக்கிறதே..... மரணவலியை சுமக்கும் .... வலிக்கு ஒப்பானது .....!!! நான் .... தனியே இருந்து அழும்.... வலியை ஒருமுறையேனும் .... பார்த்துவிடாதே ......!!! ^ முதல் காதல் அழிவதில்லை கவிப்புயல் இனியவன் 

கிராமத்து காதலில் அழகோ அழகு

நீண்ட நாட்களின் .... பின் ஊருக்கு போனேன் .... என் காதல் பட்டு .... போனதுபோல்.... நாங்கள் கூடி கதைத்த .... மரமும் பட்டு போயிருந்தது ....!!! என்றாலும் ..... நாம் இருவரும் கஸ்ரப்பட்டு .... மரத்தில் எழுதிய எங்கள் .... இணைந்த பெயர் மட்டும் ..... அழியாமல் இருந்தது .... கிராமத்து காதலில் இது .... அழகோ அழகு .....!!! ^ முதல் காதல் அழிவதில்லை கவிப்புயல் இனியவன்

அழுதவலி வலி புரியவில்லை .....

பிறந்தவுடன் ..... அழுங்குழந்தையே.... உயிர் வாழும் .....!!! இப்போதுதான் .... புரிகிறது ..... உன்னை பிரியும்போது .... அழுவதற்கு ..... ஒத்திகை பார்த்திருக்கிறேன் .....!!! பிறந்தபோது .... அழுதவலி வலி புரியவில்லை ..... பிரிந்தபோது .... அழுதவலி வலி முடிவதில்லை ....!!! ^ முதல் காதல் அழிவதில்லை கவிப்புயல் இனியவன்

முதல் காதல் அழிவதில்லை

இந்த ஜென்மத்தில் ..... அழிவே அழியாது .... முதல் காதல் பேசிய ..... வார்த்தைகளும் .... நினைவுகளும் .......!!! துவையல் இடித்த ..... உரலை  துடைத்தாலும் .... உரலில் ஓரத்தில் ..... துவல்கள் ஒட்டி இருப்பது .... போலவே ...... முதல் காதல் நினைவும் .... இதயத்தின் ஒரு ஓரத்தில் ..... ஒட்டியே இருக்கும் .....!!! ^ முதல் காதல் அழிவதில்லை கவிப்புயல் இனியவன்

பெண்களை மதிக்க‌ ஆசைப்படு.....!

அதிகாலையில் துயில் எழுவதற்கு ஆசைப்படு.....! துயில் எழுந்தபின் குளிக்க‌ ஆசைப்படு.........! குளித்தபின் காபி குடிக்க‌ ...... ஆசைப்படு....! அழகாக‌ உடையணிய‌ ஆசைப்படு...! உடுத்த‌ உடையை அசுத்தமாக்காமல் ஆசைப்படு...! நிற்கும் பஸ்சில் ஏற‌ ஆசைப்படு....! நேரம் தவராமல் ...... வேலை செய்ய‌ ஆசைப்படு .....! மெதுவாக‌ கதைக்க‌ ஆசைப்படு ....! மென்மையாக‌ கதைக்க‌ ஆசைப்படு ...! மெத்தன‌ போக்கை நீக்க‌ ஆசைப்படு...! பெண்களை மதிக்க‌ ஆசைப்படு.....! ^ நல்லவற்றுக்கு ஆசைப்படு கவிப்புயல் இனியவன்

உன்னிடம் இருந்து தப்புவது ...?

எத்தனை முறைதான் .. உன்னிடம் இருந்து தப்புவது ...? சிரித்தாய் - சிறைப்பட்டேன் ....!!! கண்ணடித்தாய் - களவாட பட்டேன் ...!!! கை அசைத்தாய் - கைதியானேன் ...!!!! எத்தனை முறைதான் -காதல் குற்றவாளியாவது ...? ^ பல இரசனை கவிதை கவிப்புயல் இனியவன்