இடுகைகள்

தன்னம்பிக்கை கவிதை

வாழ்க்கை .... என்பது ஓட்டம் தான் .... வெறுமனையே ஓடாதே ... நாயும் அதை செய்கிறது .... நம்பிக்கையுடன் ஓடு ...!!! குறிக்கோளுடன் ஓடு ,....!!! இலக்கோடு ஓடு...!!! விழுத்தாலும் ஓடு ...!!! ஓடும் ... போது திரும்பிப்பார் .... ஓடிய பாதை சரியா ...? ஓடிய வேகம் சரியா ...? ஓடிய முறை சரியா ...? இலக்கை நோக்கி முறையாக ஓடு ஓடு ஓடு ... வெற்றி உன் நுனி விரலில் ...! ^ தன்னம்பிக்கை கவிதை கவிப்புயல் இனியவன் 

துடிப்பாய் அமைகிறது கவிதை ..!!!

உயிர் ... கொண்டு எழுதுகிறேன் .. உயிர் .... துடிப்பாய் அமைகிறது கவிதை ..!!! நான் ..... இன்பமாக இருக்கும் போது .. நாடி .... நரம்பை வரிகளாக்கி...... எழுதுகிறேன்....!!! நான் .... துன்ப படும் போது ... நாள நரம்பை வரிகளாக்கி எழுதுகிறேன்.......!!! நிகழ்கால நினைவுகளை .. இதயத்தின் ஓசைகொண்டு .. எழுதுகிறேன்.....!!! கடந்த கால நொடிகளை .. சுடும் மூச்சின் துளிகளை... கொண்டு எழுதுகிறேன்.....!!! நான் ... இறக்கும்  வரை... கவிதை எழுதுவேன்... நான் இறந்தபின்னும்... கவிதை எழுதுவான்.... என் நண்பன் ...!!! கவிஞனுக்குத்தான் ..... இறப்பு உண்டு ..!!! கவிதைக்கு இல்லையே ...!!! ^ கவிப்புயல் இனியவன் 

அதிலும் ஒரு சுகம்

உன் .... இமையெனும் முள்பட்டு.. என் ...... கண்ணெனும் ரோஜா... கலங்கியது .... அதிலும் ஒரு சுகம்.. இருக்கத்தான் ... செய்கிறது கண்ணே...!!! & கவிப்புயல் இனியவன் தேனிலும் இனியது காதலே காதல் கவிதை

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

கல்லூரியில் கலாய்ப்பது .. காலத்துக்கும் அழியாது ... காதலின் தொடக்க இடம் ... சுகம்தான் அந்த இடம் ... சொர்க்கத்தை காண ...... ஒரே இடம் ..........!!! சண்டையிடுவோம் ... சமாதானப்படுவோம் ... சட்டையை கூட ...... மாறிப்போடுவோம் ... சஞ்சலப்படாது மனம் ...!!! கூத்தடிப்போம் .. கும்மாளம் செய்வோம் .. கூடிச்சாப்பிடுவோம் ... தனியே ஒருவன் வந்தால் செத்தான் சேகர் ...!!! விடுமுறை என்றால் பள்ளி .. பருவம் சந்தோசப்படும் கல்லூரி பருவம் கண்ணீர் விடும் ...!!! கொடிய துன்பம் கல்லூரியின் .... கடைசிநாள் ...!!! ^ ஞாபகம் வருதே ஞாபகம் வருதே கவிப்புயல் இனியவன் 

நினைவை மறக்க முடியவில்லை !!!

உனை பார்க்கும் போது வார்த்தைகள் வரவில்லை !!! உனை நினைக்கும் போது கவிதையாக வருகிறது !!! உனை வெறுத்ததாக சொன்னாலும் .. மனம் என்னை வெறுக்கிறதே தவிர .... உன்னை வெறுக்கிதில்லை .. உனை மறக்க முயன்றும் என்னால் உன் உருவம் மறைகிறது .. நினைவை மறக்க முடியவில்லை !!! விழிக்குள் பதிந்து இருக்கும் உன்..... உருவத்தை கண்ணீரால் கூட ... அழிக்க முடியவில்லை ... கண்ட கனவுகள் மறக்க நினைக்கிறேன் கனவுகள் போல் ஆகிவிட்ட காதலை நினைக்க விரும்புகிறேன் ...!!! ரோஜாவாக பிறக்க வேண்டிய நான் .. முள்ளாய் பிறந்துவிட்டேன் ...!!! ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

விழியில் மை அழகு ...!!!

என்னவளின் ..... இடையில் மடிப்பு அழகு ... நடையில் சுவடு அழகு ... சடையில் பூ அழகு ... விழியில் மை அழகு ...!!! பேச்சில் வார்த்தை அழகு ... மூச்சில் காற்றழகு .. பார்வையில் வீச்சழகு! சொல்லழகு... பல்லழகு... உள்ளம் அழகு... புருவ வில்லழகு....!!! காலழகு... மேலழகு... கண்ணழகு... மெய் அழகு,..... அவளை வர்ணிக்கும் கவிதை அவளைவிட ... அழகு ............!!! & கவிப்புயல் இனியவன் தேனிலும் இனியது காதலே காதல் கவிதை

மனைவிக்கு ஒரு கவிதை

ஒரு வேளை எனக்கு முன்... என் மனைவி இறந்தால்... அவளுக்காக உலகிலையே ... கோயில் ஒன்றைக்கட்டுவேன் .... .இதுவே மனைவிக்கு கட்டிய .... மனைவி மஹாலாகஇருக்கும்... அந்த கோயிலை நான் தான்... நான் தான் அதன் அமைப்பை வடிவமைப்பேன்...! நான் தான் கல் உடைப்பேன் ... நான் தான் மண் சுமப்பேன் ... நான்தான் கட்டி முடிப்பேன்... நானே அழகு பார்ப்பேன்... அந்த கோவிலில் என்குடும்ப... உறுப்பினரை யாரையும் ... வணங்க விடமாட்டேன் ....!!! அவர்கள் கோவிலாக பார்ப்பார்கள் ... நான் கடவுளாக பார்க்கிறேன் ... !!!! என் மீதிக்காலத்தை அங்கேயே .. உண்ணா நோன்பிருந்து ...... இறந்து விடுவேன் ... !!! ^ மனைவிக்கு ஒரு கவிதை கவிப்புயல் இனியவன் 

என்னை ஏமாற்றிவிடு ...!!!

போலியாக  காதலிப்பதை விடு ... நிஜமாக என்னை ஏமாற்றிவிடு ...!!! ^ இருவரி கவிதை கவிப்புயல் இனியவன் *** அடக்கமில்லாத காதல் அடங்கிவிடும் ... அடக்கமான காதல் அடர்ந்திருக்கும் ...!!! ^ இருவரி கவிதை கவிப்புயல் இனியவன்

நீ ஆசைப்படுகிறாயா ...?

உன்னைப்பார்க்க நிலா ஆசைப்படும் .... நட்சத்திரங்கள் ஆசைப்படும் முகில்கள் ஆசைப்படும் பூக்கள் ஆசைப்படும் ... நிலவும் ஆசைப்படும் ...!!! * * அதுவெல்லாம் இருக்கட்டும் ... என்னைப்பார்க்க நீ ஆசைப்படுகிறாயா ...? ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன் 

இனியவன் காதல் வெண்பா

புள்ளிக்கோலமே ************************* எட்டு புள்ளிவைத்து நீபோட்ட   முற்றத்து கோலம் உள்ளுக்குள் கிள்ளிவைத்துச் சென்றாய்   அடிமனதை!- தாமரையே நாளை வருவாயா கோலமிட   நானிருப்பேன் கால் கடுக்க காலை வரும்வரையில்காத்து. ^ காதல் வெண்பா கவிப்புயல் இனியவன் 

சிறந்த பயிற்சி காதல்

சிரிப்பதற்கும் .... அழுவதற்கும் ... சிறந்த பயிற்சி .... காதல் ................!!! துணிந்து .... செல் வெற்றி .... என்கிறது உலகம் .... காதலை தூக்கி .... எறிகிறது...........!!! நான் ... முறிந்து விழுந்த மரத்தில் ... ஈரம் உள்ளவரை ..... துளிர் விடுவேன் .....!!! & முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1039

நினைத்து பார்த்தால் வலிக்கிறது

வறுமையில் வாழ்ந்த .... காலத்தில் பசியுடன் .... போராடினேன் .... என்றே இதுவரை .... நினைத்திருந்தேன் ....!!! தன்னம்பிக்கையுடனும் ..... அடுத்த இலக்கையும் .... வறுமையோடு ..... போராடினேன் என்பது ..... வசதி வந்தபோது ..... உணர்ந்தேன் ...............!!! ^ நினைத்து பார்த்தால் வலிக்கிறது கவிப்புயல் இனியவன்

இதயத்தை காயப்படுத்தி விட்டாய்

எல்லோரும் தூக்கி எறிந்தபோது..... காயம் வந்தது தங்கினேன் .... நீ இதயத்தை காயப்படுத்தி விட்டாய் ....!!! ^ கவிப்புயல் இனியவன் மூன்று வரி கவிதை ^ நீ ஆயிரம் முறை நிராகரி .... நான் பல்லாயிரம் முறை முயற்சிப்பேன் .... உண்மை காதல் எளிதில் கிடைக்காது ....!!! ^ கவிப்புயல் இனியவன் மூன்று வரி கவிதை

இதயத்தை காயப்படுத்தி விட்டாய்

எல்லோரும் தூக்கி எறிந்தபோது..... காயம் வந்தது தங்கினேன் .... நீ இதயத்தை காயப்படுத்தி விட்டாய் ....!!! ^ கவிப்புயல் இனியவன் மூன்று வரி கவிதை ^ நீ ஆயிரம் முறை நிராகரி .... நான் பல்லாயிரம் முறை முயற்சிப்பேன் .... உண்மை காதல் எளிதில் கிடைக்காது ....!!! ^ கவிப்புயல் இனியவன் மூன்று வரி கவிதை

நினைத்து பார்த்தால் வலிக்கிறது

பணத்துக்காக .... திருமணம் செய்தேன்.... என்னை விட பணத்தை .... வட்டிக்கு கொடுப்பவன்..... சந்தோசமாய் ..... இருக்கிறான் .....!!! திருமணத்தை ...... மணவாழ்கையாக ..... செய்யாமல் .... பணவாழ்கையாய் ....... செய்தால் வாழ்க்கையும் .... சந்தை பொருள்தான் ....!!! ^ நினைத்து பார்த்தால் வலிக்கிறது கவிப்புயல் இனியவன்