இடுகைகள்

எனக்கு ஒரு உதவிசெய் ....

என் காதல்  இனிமையானது ... இதயம் பாலாப்பழம்போல் ... முட்களால் மூடியுள்ளது ....!!! எனக்கு ஒரு உதவிசெய் .... என்னை விட்டுவிடு ... காதலை வைத்திரு ...!!! இழந்தது  கோடி கணக்கான ... சொத்தென்றால் கலங்க ... மாட்டேன் - கோடி இன்பம்  தந்த காதலை ....!!! கே இனியவன் கஸல் 

இதயத்துடன் ஏன் பிறந்தாய் ....!!!

நீ என்னை விரும்மபில்லை .... என் கவிதையையும் ... விரும்பவில்லை - நீ இதயத்துடன் ஏன் பிறந்தாய் ....!!! தூரத்தில் அழகானது .... நிலா மட்டுமல்ல .... காதலில்லாமல் இருக்கும் ... என்னவளும் தான் ....!!! கவிதை எழுதி எழுதி ... ஞானியாகிவிட்டேன்.... தன்னை மறந்த நிலைதானே ... ஞானம் .....!!! கே இனியவன் கஸல்

விரும்பி தொலைத்துவிட்டேன் ....!!!

எதையுமே விரும்பாத ... உன்னை நான் விரும்பி ... தொலைத்துவிட்டேன் ....!!! கருங்கல்லில் -நீர் ... வடியும் என்பதை ... உன் காதலில் இருந்து ... நம்பிவிட்டேன் ....!!! பெண்ணை பற்றி நான் .... கவிதை எழுதியதில்லை ... உன்னை பற்றியே கவிதை ... எழுதுகிறேன் ....!!! கே இனியவன் கஸல்

நீ காலனாய் வருகிறாய் ....!!!

உன் இதயத்தில் காதல் நெல் விதைத்தேன் ... புல்லாய் வளர்கிறது ....!!! சிலந்தி வலைபோல் ... அழகாக இருக்கிறது நம் காதல் -. நானோ சிக்கி தவிக்கிறேன் ...!!! எத்தனையோ.... வடிவமாய் உன்னை .. தரிசிக்க விரும்புகிறேன் ... நீ காலனாய் வருகிறாய் ....!!! கே இனியவன் கஸல்

நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது

அப்படியே நினைத்து பார்க்கவே .... பயமாக இருக்கிறது நம் காதலை .....!!! ஓடாமல் இருக்கும் மணிக்கூட்டில் நான் ... நிமிட முள்ளாய் ... இருந்தென்ன பயன் ....? அணைத்தேன் துன்பம் ... அழைத்தேன் இன்பம் நீ அருகில் இருப்பதை ... விட தூர இரு .....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1032

வருகிறேன்அணைந்து விடுகிறாய் ....!!!

நீ காதல் விளக்கு... அருகில் வருகிறேன்..... அணைந்து விடுகிறாய் ....!!! ஒற்றை பார்வை .... பார்த்தாய் அதுதான் .... ஒற்றையாய் நிற்கிறேன் ....!!! கறை படிந்த துணியில் .... அழுக்கு இருப்பதுபோல் .... என் இதயத்தில் நீ .....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1031

என் முன்னாள் காதலி ......!!!

அவளுடன் பேசத்துடிக்கிறேன் .... உதடுகள் மறுக்கின்றன .....!!! அவளை .... பார்க்க துடிக்கிறேன் .... கண்கள் மறுக்கின்றன .....!!! அவள் ... நினைவுகள் மட்டும் ... இதயம் சுமக்கிறது .... அவள் என் முன்னாள் ... காதலி ......!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

முடிந்தால் எடுத்துவிடு....!!!

கனவில் வந்து ... கலைந்து விட்டாள்.... நினைவை தந்து .... நீங்கிவிட்டாள்.... உன்னை கனவில் .... மட்டும் காதலித்திருந்தால் .... கலங்கியிருக்க மாட்டேன்.... நினைவில் மட்டும் .... காதலித்திருந்தாலும் ..... வருந்த மாடடேன் .... உயிராக இருக்கிறேன் .... முடிந்தால் எடுத்துவிடு....!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

எப்படி மறக்கப்போகிறாய் ....?

முயற்சிக்கிறேன் .... உன்னை கண்டவுடன் .... ஒரு பொய் சிரிப்பு சிரிக்க .... உதட்டுக்கு முன்னரே .... முந்தி கொண்டு .. கண்ணீர் விட்டுவிடுகிறது ..... கண்கள் .......!!! உன்னை நினைக்க  ..... கவலையாக இருக்கிறது...... என் நினைவுகளை எப்படி .... மறக்கப்போகிறாய் ....? ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

என்னிடம் சொல்கிறாயே .....!!!

நேரம் இருக்கின்ற போது .... என்னுடன் பேசுகிறேன் ... என்கிறாய் ...... நேரம் காலம் எல்லாம் .... உன்னையே நினைக்கும் .... என்னிடம் சொல்கிறாயே .....!!! ஒரு முறை என்னைப்போல் ..... துடித்துப்பார்  -காதலின் துடிப்பும் வலியும் அப்போது .... உனக்கு புரியும் ......!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

மாலை கோர்க்க முடியவில்லை ..!!!

கைக்கு எட்டியது .... வாய்க்கு எட்டவில்லை ... என்பதுபோல் தான் .... என் காதலும் ..... திருமண அழைப்பில் ....!!! கை கோர்க்க முடிந்த .... எனக்கு உன்னோடு ... மாலை கோர்க்க .... முடியவில்லை .............!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை  கவிப்புயல் இனியவன்

என்னை அனுமதிப்பாயா .....?

விக்கிரகத்தை ..... அலங்கரிக்கும் பூசாரி .... போல் என்னை அனுமதிப்பாயா  .....? அலகு குத்தி காவடி ... எடுப்பார்கள் ....... உன் அழகு குத்தி .... காதல் செய்கிறேன் .... அடுத்த  நொடி கூட உனக்காகவே உயிர்..... வாழ்கிறேன் ....!!! + கவிப்புயல் இனியவன்

அழகு குத்தி காதல் செய்கிறேன்

விக்கிரகத்தை ..... அலங்கரிக்கும் பூசாரி .... போல் என்னை அனுமதிப்பாயா  .....? அலகு குத்தி காவடி ... எடுப்பார்கள் ....... உன் அழகு குத்தி .... காதல் செய்கிறேன் .... அடுத்த  நொடி கூட உனக்காகவே உயிர்..... வாழ்கிறேன் ....!!! + கவிப்புயல் இனியவன்

உனக்காகவே உயிர் வாழ்கிறேன்

என்னுடன் பேச .... துடிக்கும் இதயங்கள் .... ஆயிரம் ஆயிரம் .....!!! உன்னோடு மட்டும்... பேசத்துடிக்கும்  என் .... மனசை ஒருமுறை .... நேசித்துப்பார் ....!!! என்னை விட உன்னை ... அப்படி நேசிக்க யாரும் .... இருக்கமாட்டார்கள் .... உனக்காக பலர் வாழலாம் .... நானோ ..... உனக்காகவே உயிர்..... வாழ்கிறேன் ....!!! + கவிப்புயல் இனியவன் 

முள்ளில் மலர்ந்த பூக்கள் 30

உன் இதய சிறை கைதி நான் .... நினைவுகளால் மீண்டும் ... விலங்கிடாதே .....!!! உன் பார்வையால் ... கவிஞனாகினேன் .... நீ காதலித்தால் ... பித்தனாகிவிடுவேன் ....!!! உன் கண்ணில் காதல் .... இல்லை - கண்ணாடியை .... பார் உன் கண்ணுக்குள் .... நான் இல்லை .....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1030