இடுகைகள்

என்னை அனுமதிப்பாயா .....?

விக்கிரகத்தை ..... அலங்கரிக்கும் பூசாரி .... போல் என்னை அனுமதிப்பாயா  .....? அலகு குத்தி காவடி ... எடுப்பார்கள் ....... உன் அழகு குத்தி .... காதல் செய்கிறேன் .... அடுத்த  நொடி கூட உனக்காகவே உயிர்..... வாழ்கிறேன் ....!!! + கவிப்புயல் இனியவன்

அழகு குத்தி காதல் செய்கிறேன்

விக்கிரகத்தை ..... அலங்கரிக்கும் பூசாரி .... போல் என்னை அனுமதிப்பாயா  .....? அலகு குத்தி காவடி ... எடுப்பார்கள் ....... உன் அழகு குத்தி .... காதல் செய்கிறேன் .... அடுத்த  நொடி கூட உனக்காகவே உயிர்..... வாழ்கிறேன் ....!!! + கவிப்புயல் இனியவன்

உனக்காகவே உயிர் வாழ்கிறேன்

என்னுடன் பேச .... துடிக்கும் இதயங்கள் .... ஆயிரம் ஆயிரம் .....!!! உன்னோடு மட்டும்... பேசத்துடிக்கும்  என் .... மனசை ஒருமுறை .... நேசித்துப்பார் ....!!! என்னை விட உன்னை ... அப்படி நேசிக்க யாரும் .... இருக்கமாட்டார்கள் .... உனக்காக பலர் வாழலாம் .... நானோ ..... உனக்காகவே உயிர்..... வாழ்கிறேன் ....!!! + கவிப்புயல் இனியவன் 

முள்ளில் மலர்ந்த பூக்கள் 30

உன் இதய சிறை கைதி நான் .... நினைவுகளால் மீண்டும் ... விலங்கிடாதே .....!!! உன் பார்வையால் ... கவிஞனாகினேன் .... நீ காதலித்தால் ... பித்தனாகிவிடுவேன் ....!!! உன் கண்ணில் காதல் .... இல்லை - கண்ணாடியை .... பார் உன் கண்ணுக்குள் .... நான் இல்லை .....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1030

முள்ளில் மலர்ந்த பூக்கள் 29

நிச்சயமாக நீ என் நினைவுகளால் .... வதைக்கப்படுகிறாய் .... இங்கு என் இதயம் ... கண்ணீர் விடுகிறது ....!!! என் இதயம் .... வீதியோர சுமைதாங்கி .... இறக்கிவை உன் சுமையை ... காதல் ... ஊதும் பலூனுனை போல் .... அளவாக காற்றை .... ஊதவேண்டும் .....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1029

காதலை இழந்து விடாதே ...!!!

காதலை சொல்லவேண்டிய .... நேரத்தில் சொல்லி விடு .... இல்லையேல் காலம் .... முழுவதும் காதலால் .... காயப்படுவாய் .....!!! என்றோ ஒருநாள் ... சொல்லாமல் விட்ட காதல் .... இதயத்துக்குள் முள்ளாய் .... குத்திக்கொண்டே இருக்கும் .....!!! காதலை சொல்லி வேதனை .... பட்டவர்களை விட  காதலை .... சொல்லாமல் வேதனை .... பட்டவர்களே அதிகம் .....!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

முள்ளில் மலர்ந்த பூக்கள் 28

உன்னை காதலிக்கும் .... போதே கற்று விட்டேன் ..... நீ தரும் வலியை எப்படி .... சுமப்பதென்று .....!!! உனக்கு என் ஞாபகங்கள் .... பறக்கும் பஞ்சு .... எனக்கு தலையணை பஞ்சு .... தினமும் அதில் தூங்குகிறேன் ....!!! காதல் இரு வழி பாதை .... எனக்கோ இரு வலி பாதை .... உன்னையும் சுமக்கிறேன் ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1028

என்னோடு வந்துவிடு .....!!!

உன் நினைவுகளின் .... எண்ணங்களோடு .... தூங்கினேன் -நீ கனவில் கூட வரவில்லை ....!!! காதல் நிறைந்த இடத்தில் .... வாழ பொருத்தமில்லாதவள் .... காதலே இல்லாத இடத்தில் .... உன்னை சேர்த்து விடுகிறேன் .... என்னோடு வந்துவிடு .....!!! நான் விடுவது கண்ணீர் .... என்று நினைக்கத்தே .... நீ தந்த நினைவுகள் ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1027

இதயத்தை முள்ளாய் வைத்திராதே

உன்முகம் ..... பூரண சந்திரன் .... வார்த்தைகள் சூரியன் ... நம் காதல் சிலவேளை குளிர்கிறது  ..... சுடுகிறது .....!!! இதயத்தை முள்ளாய் .... வைத்துக்கொண்டு ... கண்ணை மலராய் .... வீசுகிறாய் ....!!! காதல் குயவன் .... கையில் பானைபோல் .... அழகாக வடித்தால்.... அழகுதான் ,.........!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1026

உன்னை பார்க்க மாட்டேன்

உன்னை பார்க்க மாட்டேன்... என்று கண் மூடியது .... பார்த்துவிட்டு பார்த்துவிட்டு ... அவள் உன்னை விட்டு .... விலகப்போகிறாள்.... சீக்கரம் பார் என்று .... கண்ணை சுறண்டுது .... இதயம் ...!!! & சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன்

நிறுத்தி விடாதே ...

என் .... சின்ன கவிதை... உன் சின்ன சின்ன ... செல்லசண்டையால் .... வருகிறது.... நிறுத்தி விடாதே ... செல்லகுறும்பு .... சண்டையை ....!!! & கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன் & சுவாசிக்கும் மூச்சாய் -நீ பேசும் பேச்சாய் -நீ சிரிக்கும் சிரிப்பாய் -நீ காணும் கனவாய்-நீ விடும் கண்ணீர்- நீ இத்தனையும் -நீயாக அத்தனையும் -நானாக காதல் எப்படி நீவேறு ... நான் வேறாகியது ....? & கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன்

விசித்திர உலகமாய் மாறிவிட்டது ....!!!

விசித்திர உலகமாய் மாறிவிட்டது ....!!! ------ தின பத்திரிகையை வாசித்து .... உலக நடப்பை விவாதித்து .... கொண்டிருந்த இருவரை பார்த்து .... தோளில் இருந்த துணியால் .... வாயை பொத்திய படி சிரித்த .... வழிப்போக்கன் ........!!! பேசத்தொடங்கினான் ....!!! விசித்திர உலகமையா ...... உண்மை உலகை ஒருமுறைசுற்றி..... வரமுதல் பொய் எட்டுமுறை சுற்றி ..... வந்து விடுகிறது - இதுதான் இன்றைய ..... உண்மையின் இன்றைய நிலை ....!!! இதனால் தான் ..... தீர்ப்புக்களும் தீர்வுகளும் ..... காலம் கடந்தே போய்விடுகிறது ..... உண்மையை நிரூபிக்க முன் .... பொய் உண்மையை கொஞ்சம் .... கொஞ்சமாய் தின்று விடுகிறது .......!!! உலகை ஏமாறுவதர்காக ..... இன்றைய சட்டங்களும் விதிகளும் ..... உண்மையும் பொய்யும் கலந்த .... சட்டத்தில் இயங்கி வருகின்றன ...... எல்லோருக்கும் நல்லவனாக ..... சட்டம் வேஷம் போடுகிறது ......!!! உலகில் ஒருபக்கம் அழிவு ..... மறுபக்கம் ஆனந்த கூத்து ...... இதற்கெல்லாம் காரணம் ...... சட்டம் "உண்மை பாதி" ..... " பொய் பாதி" ஆக இருப்பதே ..... வேதனை என்வென்றால் ..... உண்மையை  நியாயப்படுத்த .... முன்னர் பொய் அதனை ...

வழிப்போக்கனின் கவிதை

தெருவோரத்தில் உச்சி வெய்யிலில் ..... வாய்க்கு வந்தததை உளறியபடி ...... சென்ற வழிப்போக்கன் ஓரத்தில் .... இருந்த "அரசடிப்பிள்ளையாரை".... வாயில் வந்ததையேல்லாம் ..... தொகுத்து கவிதையாக்கினான் .....!!! & பார்க்கும் இடமெல்லாம் ..... இருக்கும் தெருவெல்லாம் ...... ஆற்றங்கரையெல்லாம்  ....... வீற்றிருக்கும் பிள்ளையாரே ...... என்போன்ற வழிப்போக்கனுக்கு ..... பக்தியை அள்ளிவழங்க உம்மை .... விட்டால் யார் உள்ளனரோ .....? மிருகம் பாதி மனிதன் பாதி .... கலந்திருக்கும் கடவுள் நீர் ....... அதனால் தானோ எல்லா .... உயிரினங்களும் உம்மில் ...... இத்தனை அன்போ .....? உம் வயிறும் நிரம்ம போவதில்லை ..... என் போன்ற வழிப்போக்கனின் ..... வயிறும் நிரம்ம போவத்தில்லை ..... பணம் படைத்தவன் வயிறும் .... மனமும் நன்றாக நிரம்புகிறது ..... அவர்கள் பார்த்து நமக்கு .... படைத்தால் தான் நம் வயிறு ...... நிரம்ப முடியும் ..........!!! அதுசரி உமக்கும் புத்தனுக்கும் ..... அப்படியென்ன அரசமரத்தில் .... காதல் - எங்கெல்லாம் அரசு  முளைக்கிறதோ அங்கெல்லாம் .... இருவரும் அரசை பிடிப்பதுபோல் .... அரச மரத்தை பிடிக்கிறீர்கள் ..... அரசை...

இருட்டு தான் அழகு

-------------------------------- கடல் வழிக்கால்வாய்  -------------------------------- .........இருட்டு தான் அழகு  ....... ^^^^^^^^^^^^^^^^^ எல்லோரும் வெளிசத்தை .... பார்த்தே மகிழ்ச்சி அடைகிறோம் ...... காலையில் சூரிய ஒளி அழகு .... மதிய சூரிய ஒளி இன்னுமொரு அழகு ..... அந்திவான சூரிய ஒளி அழகிலும் அழகு ..... இரவு நேர நட்ஷத்திரங்கள் அழகு ....!!! ஆலயங்களில் தீப ஒளி அழகு .... வீடுகளில் குத்து விளக்கு அழகு ..... திரை அரங்கில் வெள்ளி திரை அழகு .... ஆளுக்காள் போட்டிபோடும் .... அலங்கார விளக்குகளும் அழகு ... செயற்கை மின் குமிழ்களும் அழகு .....!!! வெளிசத்தில் அழகுதான் அதிகம் ..... இருளில் அழகும் அதிகம் ..... இருளில்தான் அறிவும் உதயம் ..... நாம் பிறக்கமுன் கருவறை இருள் .... விதை முளைக்கமுன் விதை இருள் ..... கருவறையில் சாமி  இடமும் இருள் .... கல்லறையும் இருள் தான் .....!!! வெளிசத்தில் தான் வேறுபாடுகள் ..... வெளிசத்தில் பார்க்கும்போதே .... குட்டை  நெட்டை வேறுபாடு ..... அழகு  அசிங்கம் வேறுபாடு .... இத்தனை ஏற்றத்தாழ்வுகள் .... இருளுக்கு எல்லாம் சமத்துவம்.....! இருளில் மனிதனும் ஒன...

சிந்திக்க ஹைக்கூ க்கள்

பறப்பதாக நினைத்து பரலோகம் போகிறான் போதைக்காரன் @@@ அரசாங்க அனுமதியோடு உடலை கருக்கும் செயல் சிகரெட் @@@ பேச்சில் ஒரு வாழ்க்கை நிஜத்தில் ஒரு வாழ்க்கை அரசியல் & கவிப்புயலின் ஹைக்கூக்கள்