இடுகைகள்

மூன்றுவரி கவிதைகள் 

ஞாபங்கள் புற்றாய் வளரும் ..... கற்பனைகள் பட்டமாய் பறக்கும்  ... கவிதை அருவியாய் பாயும் -காதல் ...!!! + மூன்றுவரி கவிதைகள் கவிப்புயல் இனியவன் #### நான்  உன்னை நேசித்தேன் .... நீ என்னை நேசித்திருந்தால் .... ஒருதுளி கண்ணீர் வந்திருக்கும் ....!!! + மூன்றுவரி கவிதைகள் கவிப்புயல் இனியவன் #### பேசாமல் இருந்தபோது இன்பமானாய் .... பேசி பிரிந்த போது துன்பம் தந்தாய் .... இருநிலையிலும் கவிஞனானேன் ....!!! + மூன்றுவரி கவிதைகள் கவிப்புயல் இனியவன்

தினமும் இதனை பாடுங்கள் அனுகூலம் நிச்சயம்

தினமும் இதனை பாடுங்கள் அனுகூலம் நிச்சயம் ------------------------------------------------------------------------ வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் ...............மிகநல்ல வீணை தடவி ...................... மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் ...............உளமே புகுந்த அதனால் .................... ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி ...............சனிபாம்பி ரண்டும் உடனே .............. ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல .............அடியா ரவர்க்கு மிகவே .................... அனைத்து கிரக தோஷங்களும் நிச்சயம் நீங்கும் எல்லா கிரகங்களும் எப்போதும் நன்மையே புரியும் நம்புங்கள் நல்லதே நடக்கும் 

காதல் செவ்வந்தியே

காதல் செவ்வந்தியே ....!!! ----- செவ்வந்திபோல் ... செவ்வாயை கொண்டவளே .... கருங்கூந்தலின் வாசனைக்கு ... நிகராகுமோ செவ்வந்தி ...? கொத்து கொத்தாய் ... பூக்கும் செவ்வந்தியே .... என்னவளை கொத்தி .... கொண்டு சென்று விடாதே ...!!! ^ பூக்களால் காதல் செய்கிறேன் கவிப்புயல் இனியவன் 04

காதல் அள்ளியே

காதல் அள்ளியே ----- ஆருயிர் அழகு அள்ளியே .... உன்னை கிள்ளி .... காதல் கள்ளியிடம் ... கொடுக்க என் மனம் துள்ளி குதிக்குதடி ....!!! அள்ளியே .... உன்னை அள்ளி வந்து ... என் இதய கள்ளியிடம் ... கொடுக்கபோகிறேன்... அவள் என்னை கிள்ளி ... நகைக்கும் அழகை பார் ...!!! ^ பூக்களால் காதல் செய்கிறேன் கவிப்புயல் இனியவன் 04

தாங்கி கொள்ளவே முடியாது ....!!!

என்னை அவமானபடுத்து .... பரவாயில்லை ....!!! நீ அவமானபட்டுடாதே ... அந்த அவமானத்தை ... நிச்சயம் என்னால் .... தாங்கி கொள்ளவே ... முடியாது ....!!! ^^^ மின் மினிக் கவிதைகள் -57 கவிப்புயல் இனியவன்

எனக்கு கிடைத்த பரிசு

உன்னை உண்மையாக காதலித்த ... எனக்கு கிடைத்த மிக ... உன் வலிகளையும்.... சேர்த்து சுமப்பதே ....!!! காதல் தோன்றும் போது சுகம்  ... துவண்டு விழும் போதுதான் .... பாரிய சுமை ......!!! ^^^ மின் மினிக் கவிதைகள் -56 கவிப்புயல் இனியவன்

மின் மினிக் கவிதைகள்

நீ என்னை நினைத்து .... கொண்டிருகிறாய் ..... என் இதயம் சிரித்து .... கொண்டிருக்கிறது ....!!! நேரில் பார்க்க ... உனக்கு முடியவில்லை ... என்னை நினைவில் .... வரவழைத்துவிடு .... நிச்சயம் உன்னை பார்ப்பேன் காதலால் .... நிச்சயம் முடியும் ....!!! ^^^ மின் மினிக் கவிதைகள் -55 கவிப்புயல் இனியவன்

உன்னதத்தை உணர்வேன் ...!!!

கடந்தகால .... வலிகளை மறக்கவே .... உன்னை விரும்பினேன் ... மீண்டும் பழைய  வழியை .... காட்டி விடாதே ....!!! அன்பே .... ஒருநாளைக்கு ஒருமுறை .... ஒரே ஒருமுறை என்னோடு .... பேசிவிடு அன்று நான் .... உயிரோடு இருப்பதன் ... உன்னதத்தை உணர்வேன் ...!!! ^^^ மின் மினிக் கவிதைகள் -54 கவிப்புயல் இனியவன்

சிந்தித்து சிரிக்க சென்ரியூ

மகளீர் நிகழ்ச்சி படபிடிப்பு   மகளீருக்கு மட்டும் அனுமதி  தொலைகாட்சியில் ஒளிபரப்பு ^ சிந்தித்து  சிரிக்க சென்ரியூ 01 கவிப்புயல் இனியவன்  ^^^ சுவாமி தரிசனம்  நூற்றுக்கணக்கான பக்தர் குவிந்தனர்  ஆயிரக் கணக்கான படைகள் பாதுகாப்பு  ^ சிந்தித்து சிரிக்க சென்ரியூ 02 கவிப்புயல் இனியவன்  ^^^ காதலர் மனமுறிவு மணிக்கணக்கில் வாக்குவாதம்  தொலைபேசி நிறுவனம் மகிழ்ச்சி  ^ சிந்தித்து சிரிக்க சென்ரியூ 03 கவிப்புயல் இனியவன்

காதல் மல்லிகையே ....!!!

காதல் மல்லிகையே ....!!! --- உன்னை பற்றிய.... எண்ணங்கள் எப்போதும் ... மல்லிகையின் மணம்.....! நினைக்கும் போதெல்லாம் .... நறுமணமாய் இருகிறாய் ....!!! உன்னையே நீ உன் கூந்தலில் சூடுகிறாய்.... உன் கூந்தலாய் மாற ... துடிக்கிறது இதயம் ....!!! ^ பூக்களால் காதல் செய்கிறேன் கவிப்புயல் இனியவன் 03

காதல் தாமரையே ....!!!

காதல் தாமரையே ....!!! ---- தாமரைபோல் ... இதழ்களாய் விரிந்திருக்கும் .... முக அழகியே ..... தாமரையின் நடுவில் ..... இறுக்கமாய் குவிந்திருக்கும் .... இதழ்கள் போல் உன்னை .... இதயத்தில் இருக்கமாய் .... வைத்திருக்கிறேன் ....!!! தாமரையில் தண்ணீர்போல் .... என்னை காதலித்து விடாதே ....!!! ^ பூக்களால் காதல் செய்கிறேன் கவிப்புயல் இனியவன் 02

காதல் ரோஜாவே

நீ ரோஜாவின் இதழாய் .... இருந்துவிடு -இல்லையேல் ... முள்ளாய் இருந்துவிடு .... உன்னை செடியாய் ... நான் தாங்கியிருப்பேன் ...!!! உதிர்ந்து விழுவதா ...? முள்ளாய் குத்துவதா ...? நீ எடுக்கும் தீர்மானம் .... என்றும் இதய ரோஜா .... நீயேதான் ரோஜாத்தி....!!! ^ பூக்களால் காதல் செய்கிறேன் கவிப்புயல் இனியவன் 01

பூக்களால் காதல் செய்கிறேன்

பூக்கள் அழகானவை ..... கற்பனயில் பூக்கும் -நீ பூக்களின் ராணியாக .... அழகாய் இருக்கிறாய் ....!!! உன் உடலின் வியர்வைகள் ... பனித்துளிபோல் அழகாய் .... உன் மூச்சு காற்று எங்கும் ... வாசமாய் மனம் கவர்கிறாய் .... நீ உதிர்ந்து விழுந்தாலும் ..... உன்னை தாங்கும் காம்பு யான்  ... மீண்டும் பூப்பாய் என்று ... காத்திருக்கிறேன் ....!!! ^ பூக்களால் காதல் செய்கிறேன் கவிப்புயல் இனியவன் 

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

இட்ட முட்டை சுடுகிறது  எடுத்து சென்றாள் கருவுற்ற பெண்  ஏக்கத்தோடு பார்த்தது கோழி  ^^^  கடத்தல்காரன் கையில் பணம்  வன அதிகாரிகள் பாராமுகம்  ஓடமுடியாமல் தவிர்க்கும் மரம்  ^^^  காடழிப்பு  ஆற்று நீர் ஆவியானது  புலம்பெயரும் அகதியானது கொக்கு  ^^^  குடும்ப தலைவர் மரணம்  ஒன்பது பிள்ளைகளும் ஓலம்  கருத்தடை செய்த நாய் சாபம்  ^^^  சட்டம் ஒரு இருட்டறை  கருவறை இருட்டறை  சிசு மர்மக்கொலை  ^^^^^  வியர்வை சிந்தாமல் வேண்டாம்  வியர்வை உலர்ந்தபின் வேண்டாம்  ஊதியம்  @  கண் வரைதல் ஓவிய போட்டி  முதல் பரிசு பெற்றான் மாணவன்  பார்வையற்ற மாற்றுத்திறனாளி  @  தொட்டிக்குள் இலை குவிகிறது  தூய்மையானது சாப்பாட்டுக்கடை  ஏழை வயிறு நிரம்பியது  @  பூமி உருண்டை  அதுதான் சிறிதாக இருக்கிறது  தொட்டிக்குள் மீன்  @  வெற்றி கிடைக்குவரை  கட்சி மீது விசுவாசமாய் இரு  தேர்தல் ராஜ தந்திரம்  @@@ 

என்னுயிருக்கு ஒரு காதல் கடிதம் ....!!!

......................................................................முகவரி ......................................................................இதய ராஜ மன்மதன் ......................................................................இதய இடதுபுற ஒழுங்கை ......................................................................காதல் குறுக்கு தெரு ......................................................................காதல் நகர் இன்று இலத்திரனியல் சாதங்கள் உலகையே ஆக்கிரமித்து விட்டன . காதலர்கள் இயந்திரமயமாகி விட்டனர் . கிடைக்கும் நேரத்தில் முகநூல் ,வாடசப் .ஈமெயில் வைபர் என்று இலத்திரனியல் சாதனத்தில் காதலை பரிமாறுகிறார்கள் அவை பரிமாற்று சாதனங்களாக இருக்கின்றனவே தவிர .உணர்வை மீட்கும் சாதனமாக காணப்படுவதில்லை . படித்தவுடன் டிலீற் பண்ணுவதுடன் அதன் உணர்வும் இறந்து விடுகிறது ஆனால் காதல் கடிதம் அப்படியல்ல ........!!! ........................................கடித்தத்தில் ஆயிரம் வர்ணனைகள் பிடிக்குமோ பிடிக்காதோ எழுதியே ஆவோம் அந்த கடிதத்தை பாதுகாக்க படும் போராட்டம் வாழ்கையின் பெரும் இன்பம் . யா...