இடுகைகள்

அதிசயக்குழந்தை -எழுத்து

அதிசயக்குழந்தை -எழுத்து ---------------- அழகான வர்ணம் பூசிய ..... ஒரு வீட்டின் வெளிப்புற .... சுவரில் அதியக்குழந்தை.... கிறுக்கி விளையாடி.... கொண்டிருந்தான்.......!!! டேய் சுவரை அசிங்க படுத்தாதே.... என்று கொஞ்சம் கோபத்தோடு ... ஆசான் என்ற போர்வையில் .... அவனை அதட்டினேன் ....!!! சிரித்த படியே ..... சொன்னான் - ஆசானே .... நீங்கள் தானே சுவர் இருந்தால் ..... சித்திரம் வரையலாம் என்றீர்கள் .... நான் அதைதானே செய்கிறேன் ...!!! குழந்தாய் ... அந்த சுவர் என்றது .... உடம்பை குறிக்குமடா.... ஆரோக்கியம் இருந்தாலே .... சாதிக்கலாம் என்பதாகும் .....!!! ஆசானே .... உடம்பும் ஒரு கலவைதானே .... அது இருக்கட்டும் ஆசானே .... உணர்வுகளின் ஓசை மொழி .... ஓசையின் பரிமாணம் பாஷை.... பாசையின் அலங்காக வடிவம் .... எழுத்து - எழுத்தின் " கரு"  கிறுக்கல் ... அதேயே  செய்தேன் ஆசானே .... கிறுக்கியது தவறு இல்லை .... உங்களுக்கு புதிய சுவர் ... என்பதுதானே கவலை .... மெல்ல சிரித்தபடி நகர்ந்தான்...!!! ^ அதிசயக்குழந்தை வசனக்கவிதை கவிப்புயல் இனியவன் தொடர் - 08

காதல் - இரு - வாசகங்கள்

காதல் பரம்பரை சொத்துமல்ல  பரம்பரை கடத்தியுமல்ல  ^ ---- நான் காதலாக இருந்து பயனில்லை  நாம் காதலாய் இருக்க வேண்டும்  ^ ----- தவித்து கொண்டிருப்பதும் காதல் தவிர்க்க வேண்டியதும் காதலில் உண்டு  ^ --- காதலி பிரிந்தால் சோகம்  காதல் பிரிந்தால் மரணம்  ^ ----- இரக்க காதலுக்கு அருகில் இரு  ஏக்க காதலுக்கு தூரத்தில் இரு  ^ ---- காமத்துக்கு ஆசைப்படுபவர்கள்  காதலில் தோல்வியை தழுவுவர்  ^ ----- காதலித்து திருமணம் செய்த பெற்றோர்  பிள்ளைகளின் காதலை ஏற்க தயங்குவர்  ^ ---- காதலை காதலியை உயிராகப்பார்  உயிர் பிரியும் வரை காதல் இருக்கும்  ^ ----- உயிர் இல்லாததால் உடலும்  காதல் இல்லாத உயிரும் ஒன்றே  ^ ---- அறிவோடு காதல் செய் வெற்றி  அறிவில்லாதகாதல் தோல்வி  ^ -----

காதல் - இரு - வாசகங்கள் 03

இரக்க காதலுக்கு அருகில் இரு ஏக்க காதலுக்கு தூரத்தில் இரு ^ ---- காமத்துக்கு ஆசைப்படுபவர்கள் காதலில் தோல்வியை தழுவுவர் ^ ----- காதல் - இரு - வாசகங்கள் கவிப்புயல் இனியவன்

காதல் - இரு - வாசகங்கள் 02

தவித்து கொண்டிருப்பதும்  காதல் தவிர்க்க வேண்டியதும் காதலில் உண்டு ^ --- காதலி பிரிந்தால் சோகம் காதல் பிரிந்தால் மரணம் ^ ----- காதல் - இரு - வாசகங்கள் கவிப்புயல் இனியவன்

காதல் " இரு " வாசகங்கள்

காதல் பரம்பரை சொத்துமல்ல பரம்பரை கடத்தியுமல்ல ^ ---- நான் காதலாக இருந்து பயனில்லை நாம் காதலாய் இருக்க வேண்டும் ^ ----- காதல் - இரு - வாசகங்கள் கவிப்புயல் இனியவன்

நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன் 02

தந்தை தாய் உட்பட .... குடும்ப உறுப்பினர் பத்து .... ஆதவன் நடுப்பிள்ளை ஐந்து.... பிறந்த நாளில் இருந்து .... ஒருவாரம் வரை கடும் மழை .... அருகில் இருந்த ஆறு உடைக்கும் ... ஆபத்தான நிலையில் .... ஆற்றுக்கு அருகே ஆதவன் .... குடிசை வீடு .......!!! ஆதவன் தந்தை சாமி .... சாமி ஆறு உடைக்கபோகுது .... சீக்கிரம் வீட்டுக்குள் இருந்து .... வெளியே வா என்ற அயலவர் ..... அவசர குரல் கேட்க - ஆதவனை .... ஒரு துணியால் சுற்றிய படி .... வெளியே சாமி குடும்பம் .... வந்த போது  சில நிமிடத்தில்.... அந்த மண் குடிசை இடித்து .... விழுந்தது ......!!! ^^^ தொடரும் இவன் போராட்டம்  ^^^ வாருங்கள் இவனின் வாழ்கையை கேட்போம் .... ^^^ நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன் ^^^ கவிப்புயல் இனியவன் 

கனவாய் கலைந்து போன காதல் 03

பூவழகன் .... பரீட்சை முடிவுகள் ... அந்தளவுக்கு சிறப்பில்லை .... இதனால் இவனை எல்லோரும் .... விவேகம் அற்றவன் என்றே.... கருதினர் - அது கூட உண்மை ....!!! பூவழகனின்.... ஒரு சிறப்பு இருப்பதை ... அழகாக பாவிப்பது .... இல்லாதவற்றை நினைத்து .... ஏங்குவதில்லை ...... தினமும் அழகாக உடுத்து .... வருவான் ஆனால் அவை .... புதியதல்ல .....!!! இந்த காலத்தில் தான் .... பூவழகன் படிக்க சென்ற .... பாடசாலைக்கு வெளிமாவட்ட .... பெண் ஒருத்தி புதிய மாணவியாய் .... வரப்போகிறாள் அந்த செய்தியுடன்..... இந்த நாள் பாடசாலை நாளும் .... முடிவுக்கு வந்தது ....!!!  ^^^ தொடர்ந்து வருவான் ... இவன் கதை கூட உங்கள் ... கதையாக இருக்கலாம் .... கனவாய் கலைந்து போன காதல் வசனக்கவிதை....!!! ^^^ கவிப்புயல் இனியவன்

தோல்வியால் கவிஞர் ஆகிறோம்

வாழ்க்கை  .... அடைமழை காதல் .... வழிந்தோடும் ... வெள்ளம் .....!!! காற்றை போல் நீ எப்போது வருவாய் ... எங்கே முடிவாய் ....? காதலித்ததால் .... கவிஞராவதில்லை .... காதல் தோல்வியால் .... கவிஞர் ஆகிறோம் ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 960

கண்மணி நீ .....!!!

என் கண்ணீரில் ... பூத்த கண்மணி .. நீ .....!!! உன் காதலோடு காணாமல் .... போன ஆண்மகன் நான் ....!!! குளம் வற்றியபின் .... கொத்த காத்திருக்கும்... மீன் கொத்தி பறவை ... நீ ......!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 959

தண்டிக்கிறேன்

உன்னை நினைத்து ... நினைத்து -நான் அனாதையாகினேன்....!!! நீ என் கண்ணீர் துளியில் நீச்சல் அடிக்கிறாய் ....!!! உன்னை .... என்னை கேட்காமல் ... காதலித்த  இதயத்தை.... நீ தந்த வலிகளால்... தண்டிக்கிறேன் ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 958

நீ ஆழ்கடல் காதல்

நீ ஆழ்கடல் காதல் .... அதில் தத்தளிக்கும் .... சிறு ஓடம் நான் ....!!! துப்பாக்கியால் .... காயப்படுவதும் .... உன் " கண்" படுவதும் .... ஒன்றுதான் ....!!! நீ கனவாய் இருக்கபார் .... இல்லையேல் தூக்கமாக .... வந்துவிடு ... இல்லையென்றால் ... காதலில் என்னபயன்...?  ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 957

கல் எறியாதே

நீ..... காதல் வீட்டில் இருந்து ... கல் எறியாதே .....!!! என்னை காயப்படுத்தி ..... உன்னால் வாழமுடியும் .... என்றால் இன்னும் நல்லா ... காயப்படுத்து ....!!! நான் ..நீ ...காதல் ஒரு முச்சந்தி .... சந்தித்தே ஆகவேண்டும் ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 956

நட்பென்றால் இதுதான் நண்பா

நட்பென்றால் இதுதான் நண்பா ---------------- நட்பு உலகின் தோற்றத்திலிருந்து ..... படைத்தவனால் கிடைத்த அமிர்தம் ....! காவியங்கள் காப்பியங்கள் கதைகள் .... இலக்கியங்கள் புராணங்கள் மற்றும் .... மறை நூல்கள் ,சொல்லாத விடயத்தையா .... நான் சொல்லிவிடப்போகிறேன் ....? எல்லாம் அங்கிருந்தே எடுக்கிறோம் ....!!! புனித குர்ரானில் சொல்லாத நட்பா ....? புனித பைபிளில் சொல்லாத நட்பா ....? மறைநூல் திருக்குறளில் சொல்லாத நட்பா ....? இதுவரை எழுதிய கவிஞர்கள் சொல்லாததா...? நடித்து கலைத்த நாடகங்கள் சொல்லாததா...? சிந்தனையாளர் கொட்டி தீர்த்த சிந்தனையை .... விடவா நான் நட்பை விளக்கிடபோகிறேன்...? முடிந்தவரை நண்பா நட்பு என்றால் என்ன ....? பொறுக்கி எடுத்ததில் பெருக்கி சொல்கிறேன் ...!!! மனைவியிடம் எதையும் மறைக்காமல் ..... பகிர்ந்தால் குடும்பம் பிரியும் என்று .... புரிந்தும் உண்மையை சொல்லும் கணவன் .... " குடும்ப நட்பின் தலைவன் " ....!!! அவனுக்கு அவளுக்கு தலைவலித்தால் .... இவனுக்கு இதயம் வலிக்கும் என்று ... உள்ளத்தால் வேதனை படும் உயிர் .... " உறவு நட்புக்கு தலைவன் ".....!!! ...

நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன்

வறுமை எல்லோருக்கும் பொதுமை  ..... உலகில் சதித்தவனும் .... சாதிக்க போகிறவனுக்கும் .... மூலதனம் - வறுமை ....!!! இவனுக்கோ .... பிறப்பிடமே - வறுமை - என்றால் .... கொஞ்சம் கேட்கவும் சகிக்கவும் .... உங்களுக்கு கடினமாய் தான் .... இருக்கப்போகிறது .....!!! யார் இவன் ...? அடிப்படை வசதிகள் குறைந்த .... அடுத்த வேளை சாப்பாட்டுக்கு ... தன்மானத்துடன் காத்திருந்து .... கிடைத்தால் சாப்பிட்டு .... கிடைக்கா விட்டால் ஈரதுணியை .... வயிற்றில் கட்டி வாழ்ந்த .... கௌரவம் மிக்க வறுமை குடும்ப .... நாயகன் - " ஆதவன் ".......!!! இவனது வாழ்கை தற்காலத்துக்கு .... எந்தளவுக்கு பொருந்தும் ... ஏற்கும் என்று தெரியாது .... ஆனால் இவனின் வாழ்கை .... இவனுக்கு முழு உண்மை .....!!! ^^^ வாருங்கள் இவனின் வாழ்கையை கேட்போம் .... ^^^ நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன் ^^^ கவிப்புயல் இனியவன்

கனவாய் கலைந்து போன காதல் 02

பூவழகன் .... ஒரு கிராமிய இளைஞன் .... நவ நாகரீகம்  தெரியாதவன் .... அதிகம் பேசாதவன் ..... பெரும் படிப்பு என்றுமில்லை .... படிப்பு இல்லையென்றுமில்லை .... ஆனால் வறுமை என்றால் .... நன்கு தெரிந்தவன் ....!!! கிராம புறத்தில் சாதாரண .... படிப்பை முடித்து நகர்புறம் ..... உயர் கல்விக்காய் போகிறான் ..... நகர புறத்தில் இருபால் பாடசாலை ..... பொதுவாகவே பெண்கள் என்றால் .... பூவழகனுக்கு ஒருவித பயம் ..... பாடசாலையோ கலவன் ..... புதிய முகங்கள் நகர்புற பெண்கள் .... பூவழகனை காட்டிலும் உசார் ....!!! முதல் நாள் பாடசாலை வாழ்க்கை ..... கிராம புறத்திலிருந்து நகர்புறம் ..... இடம்மாறிய பதட்டம் ,பயம் .... பூவழகனை சுற்றி நண்பர்கள் .... குசலம் விசாரிப்பதில் மும்மரம் .... பயத்தோடும் அசட்டை துணிவோடும் ... அன்றைய நாள் முடிவுக்கு வந்தது ....!!! ^^^ தொடர்ந்து வருவான் ... இவன் கதை கூட உங்கள் ... கதையாக இருக்கலாம் .... கனவாய் கலைந்து போன காதல் வசனக்கவிதை....!!! ^^^ கவிப்புயல் இனியவன்