இடுகைகள்

பகலில் நிலாதெரியும்..

காதலரின் பயிற்சி களம் நிலகண்ணாடி..... காதலரின் முயற்சி களம் முக கண்ணாடி ...!!! @@@ காதலித்துப்பார் பகலில் நிலாதெரியும்.. காதலில் தோற்றுப்பார் இதயத்தில் சூரியன் எரியும் ....!!! + கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

காதலில் துன்பம் ...!!!

இதயத்தில் வருவது முக்கியம் இல்லை .. இதயமாக இருப்பதே முக்கியம் .....!!! ### காதலில் சின்ன சண்டை இன்பம்.... சின்ன சந்தோகம் காதலில் துன்பம் ...!!! + கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

மீன் தொட்டியில் இருக்கும் மீனைப்போல் .... உன்னையே சுற்றி சுற்றி வருகிறேன் காதலால் ...!!! @@@ நீ என் காதல் பூவா...? முள்ளா ..? உண்மை காதல் உண்மை சொல்லும் ....!!! + கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை ###### என்னை சுற்றி அடைக்க பட்ட முள் வேலி நீ ...!!! உன்னை சுற்றி வரையப்பட்ட வட்டம் நான் ...!!! $$$ காதல் ஒரு மாதுவால் வரும் மது....!!! கவிதை மாதுவால் வந்த வலி ....!!! + கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

ஒரு நாள் அழுவாய் ....!!!

காதலித்துப்பார் ஆரம்பத்தில் சிரிப்பாய் .... என்னைப்போல் ஒரு நாள் அழுவாய் ....!!! @@@ இதமாக இருந்த இதயத்தை .... இதய சோலையாக மாற்றும் காதல் ...!!! + கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

வாழ்க்கை சிறக்கும்

அன்று வேப்பெண்ணெய் தந்தாள் இனித்தது .... இன்று கற்கண்டு தந்தாள் கசக்கிறது ....!!! ----- காற்றிருந்தால் தான் பட்டம் பறக்கும் காதல் இருந்தால் தான் வாழ்க்கை சிறக்கும்

கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

காதல் ஒரு வழி பாதை புரிந்து கொள்  நினைக்க தெரியும் மறக்க தெரியாது....!!! ----- உன்னோடு வாழவும் துடிக்கிறேன்.... மண்ணோடு மடியவும் துடிக்கிறேன் ....!!! ----- உதடு சிரிக்கிறது ... இதயமோ அழுகிறது ......!!! ------ + கவிப்புயல் இனியவன்  இரு வரிக்கவிதை

SMS அனுப்புங்கள்

நேசிப்பாதாய் மட்டும் ..... இருக்காதே -என்னை ... சுவாசிப்பாதாய் -இரு ...!!! + குறுங்கவிதை SMS அனுப்புங்கள் 

கெட்ட நடத்தையால் கெட்டுப்போகாதே

கெ டுதி கொண்ட உணவுகள் வேண்டாம் .... கெ டுதி கொண்ட உணர்வுகள் வேண்டாம் .... கெ டுதி என தெரிந்த செயல்கள் வேண்டாம் .... கெ டுதி கொண்ட எண்ணங்கள் வேண்டாம் .... கெ டுதிக்கு கெடு வைக்காமல் வாழ்ந்திடுவோம் .....!!! கெட்ட  உணர்வால் கெட்டார் கோவலன் .... கெட்ட  எண்ணத்தால் கெட்டனர் கௌரவர் ..... கெட்ட  செய்யலால் கெட்டார் ராவணன் .... கெட்ட  நடத்தையால் கெட்டுப்போகாதே ..... கெட்ட வன் என்றபெயர் சடுதியில் நீங்காது ....!!! கெச்சை க்கு தேர் கொடுத்தான் பாரி .... கெட்டி யாய் வள்ளல் பெயர் பெற்றான் பாரி .... கெம்பி  செய்யும் செயல்களால் கெட்டவர் அதிகம் ...... கெக்கலி த்து சிரிக்கவைக்கும் செயல்வேண்டாம் .... கெடி யுடன்  கெழி  கொண்ட வாழ்க்கை வாழ்வோம் ....!!!

நீ அதை கவிதை என்கிறாய் ...!!!

என் காதல் வலிகளை.... வார்த்தையால் தர .... முடியவில்லை .....!!! வரிகளாய் தருகிறேன் ....!!! நீ அதை கவிதை என்கிறாய் ...!!! + கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

அடிக்கடி பார்த்திருகிறாய்....?

நீ என்னை எத்தனை முறை .... அடிக்கடி பார்த்திருகிறாய்....? நான் எத்தனைமுறை உன்னை ... பார்த்து கண்சிமிடினேன் ....? வானத்து நட்சத்திரங்கள் .... தான் பதில் சொல்லனும்...!!! + கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

ஏமாற்றம் அதிகம் ....!!!

ஒரு.... தலை காதலில் .... ஏக்கம் அதிகம் .... இரு...... தலை காதலில் .... ஏமாற்றம் அதிகம் ....!!! + கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

கனவில் காண விரும்பவில்லை

உன்னை கனவில் காண ..... விரும்பவில்லை உயிரே .... கனவுபோல் களைந்து .... விடகூடாது என்பதால் ....!!! நினைவிலும்  வாழ விரும்பவில்லை ..... தூக்கத்தில் நீ தொலைந்து .... விடுவாய் என்பதற்காக ..... உயிரே உன்னை உயிராய் .... காதல் செய்யவே தவிக்கிறேன் .... உயிர் உள்ளவரை காதல் செய்ய ....!!! + கவிதையால் காதல் செய்கிறேன் 15 கவிப்புயல் இனியவன்

உணர்வு தெரியும் உயிரே

உன்  வருகைக்காக தினமும் .... காத்திருக்கிறேன் .... நீ வந்தாயா ..? என்னை .... கடந்து சென்றாயா ,,,,,? யார்கண்டது ....? நிச்சயம் என்னை - நீ  கடந்து சென்றிருக்க மாட்டாய் .... கடந்து சென்றிருந்தால் ..... இதயத்தில் ஒரு பாரம் .... ஏற்பட்டிருக்கும் ..... முகம் தெரியாவிட்டால் என்ன ....? மூச்சுகாற்றின் உணர்வு .... தெரியும் உயிரே ....!!! + கவிதையால் காதல் செய்கிறேன் 14 கவிப்புயல் இனியவன்

மூச்சு உள்ளவரை வாழ்வேன்

ஒருமுறை .... காதல் செய் உயிரே .... மறு ஜென்மம் வரை ... உன்னையே காதல் .. செய்வேன் ......!!! என்னை நிழலாக .... ஏற்றுகொள் உன்னையே .... பின்தொடர்ந்து வருவேன் .... என்னை மூச்சாக ஏற்றுக்கொள் .... உன் மூச்சு உள்ளவரை .... வாழ்வேன் .....!!! + கவிதையால் காதல் செய்கிறேன் 13 கவிப்புயல் இனியவன்

உயிரை உருக்குகிறேன்.....!!!

என் கவிதையை ... பார்ப்பவர்கள் என்னை .... காதல் பித்தன் என்கிறார்கள் .... சொல்லிவிட்டு போகட்டும் ... காதலை வார்த்தையாய் .... பார்கிறார்கள் - நான் காதலை .... வாழ்கையே பார்கிறேன் ....!!! எல்லோருக்கும் ..... ஒருநாள் நல்ல பதில் உண்டு .... உன் பதிலில் தான் உண்டு .... உயிரே உன்னை நினைத்து .... உயிரை உருக்குகிறேன்.....!!! + கவிதையால் காதல் செய்கிறேன் 12 கவிப்புயல் இனியவன்