இடுகைகள்

தரையில் துடிக்கும் மீன்

நீ நிலா நான் நட்சத்திரம் .... அமாவாசையிலும் .... இருப்பேன் ....!!! உன் சிரிப்பு ... இதயசிறையை... உடைத்தெறிந்து.... விட்டது....!!! காதலால் .... தரையில் துடிக்கும்... மீனாகவும்.... கூட்டில் அடைபட்ட.... கிளியாகவும் இருக்கிறேன் .....!!! + கே இனியவன் - கஸல் 85

காற்று போன வண்டி

நீ  என்னோடு... வாழுகிறாய் ..... நமக்கிடையே மௌனம்.... வாழுகிறது .... பிரிவை தடுக்கிறது....!!! உன்  ஒவ்வொரு பார்வையும் எனக்கு கவிதை உன் மௌனம் .... எனக்கு மரணம் ....!!! காதலில் நான் .... காற்று போன வண்டி ..... காற்றோடு நீ வந்தால் ... இயங்குவேன் ....!!! + கே இனியவன் - கஸல் 84

என் கவிதைகள் பிரபல்யம்

என் கவிதைகள்...! காதலர் இடையில் .... பிரபல்யம் -கவிதை.... நன்றாக இருப்பதல்ல..... நம் காதல் சோகம் ... அவர்களுக்கும் .... பொருந்துகிறது ....!!! நீ எப்போதே... சென்று விட்டாய்... என் இதயம் நான் .... சொன்னாலும் .... நம்புவதாய் இல்லை ...!!! மீண்டும் வந்தாய் .... காதலியாய் இல்லை .... வானத்து தேவதையாய் ... உயிரே உன்னிடம் நானும் .... விரைவில் வருவேன் ....!!! + கே இனியவன் - கஸல் 83

கைபேசி என் உயிர் பேசி ...!!!

கையோடு ஒட்டி இருக்கும் ... கைபேசியை போல் ... நெஞ்சோடு ஒட்டியிருக்கும் .... நினைவுகளும் .... தூங்காத இரவுகளை .... நீண்டுசெல்ல வைக்கிறது ...!!! உன் அழைப்பு வரை  தலையணையோடு..... என்னோடு காத்திருகிறது .... கைபேசி - என்ன செய்வது ...? என்னோடு சேர்ந்து அம்மாவிடம் .... திட்டு வாங்குகிறது அதுவும் ...!!! மற்றவர்களிடம் இருப்பது .... கைபேசி - என்னிடம் இருப்பது ... உன்னோடு பேசும் உயிர் பேசி ...!!!

கே இனியவன் - கஸல் 82

கவலையிலும் ... சிரிக்க கற்றுதந்தவள் .... கவலையை விட .... எதையும் கற்று தராதவள் ...!!! என் இதய சுற்றோட்டம் இரத்தத்தால் -இல்லை உன் நினைவால் தான் இயங்குகிறது....!!! நான் அவசர சிகிச்சையில்.... நீ உயிர் விடும் மூச்சு ...!!! + கே இனியவன் - கஸல் 82

கே இனியவன் - கஸல் 81

கண்ணீர் வெறும் தண்ணீர் ..... அது உனக்கே ....! எனக்கோ ... இதயத்தில் .... வடியும் இரத்தம் ....!!! நரகத்தில் வாழ்வேன் சொர்கத்தில் வாழ்வேன் ... உன் பதிலில் இருக்கு ...!!! குடிப்பதற்கு மது ... துடிப்பதற்கு மாது .... என்னவளே நீ ... மதுவும் மாதுவும் ....!!! கே இனியவன் - கஸல் 81

கே இனியவன் - கஸல் 80

ரத்தமாய் . சிவந்திருக்கிறது என் வீட்டு ரோஜா நீ தந்ததாலோ ...? என் இறந்த இதயத்தின் -மேல் காதல் கவிதை ..... எழுத சொல்கிறாயே ....!!! நீ .... எனக்குபன்னீர் .... தெளிக்கவேண்டும் ... கண்ணீர் தருகிறாய் ....!!! + கே இனியவன் - கஸல் 80

தேனே என்னை இழந்தேனே

அழைத் தேன்  நின்றாய் பார்த் தேன் பார்த் தேன்  என்னை மறந் தேன் மறந் தேன்  உன்னிடம் விழுந் தேன் விழுந் தேன்  உன்னோடு மகிழ்ந் தேன் மகிழ்ந் தேன்  உயிராய் நினைத் தேன் நினைத் தேன்  காற்றாய் சுவாசித் தேன் சுவாசித் தேன்  உன்னையே நேசித் தேன் நேசித் தேன்  காதலாய் வாழ்ந் தேன்

காதலித்- தேன்

நினைத்- தேன்  கேட்டதை தந்தாய் ...! திகைத்- தேன்  முத்தம் தந்தாய் .......! சிரித்- தேன்  காதலை தந்தாய்.......! மகிழ்ந்- தேன்  உன்னை தந்தாய் ....! சுவைத்- தேன்  வாழ்க்கை தந்தாய் ..! வாழ்ந்- தேன்  உயிரை தந்தாய் ..........! துடித்- தேன்  நினைவுகள் தந்தாய் ......! அழைத்- தேன்  பிரிவை தந்தாய் ....!

காதல் செய்யாதே ...!!!

நீ என்னில் வாழ்வதும் நான் உன்னில் வாழ்வதும் -தான் காதல்....! என் பிரிந்தாய் ...? குத்துவிளக்கு.. ஏற்றினாலும்... மின்விளக்கு... ஏற்றினாலும்... வெளிச்சம் .... ஒன்றுதான் ... வசதிக்காய் ... காதல் செய்யாதே ...!!! நீ பேசினாலும் பேசாவிட்டாலும் வலிப்பது என் இதயம் தான் கே இனியவன் - கஸல் 79

சாம்பலாகி விட்டேன்

நான் இறந்தால் ... புதைப்பார்களா ...? எரிப்பார்களா ...? என்றோ அவளின் .... வார்த்தையால் ... சாம்பலாகி விட்டேன் ...!!! அழகுக்கு அழகுதருவது காதல் உண்மைதான் ... உன்னோடு இருக்கும் .. காலத்தில் உணர்ந்தேன் ...!!! தட்டிய தீக்குச்சி விரைவாக அணைந்துவிடும் அந்த மன வேதனைதான் எனக்கும் ...!!! கே இனியவன் - கஸல் 78

கே இனியவன் - கஸல் 77

நீ மூட்டிய காதல் தீயை -நீயே கண்ணீரால் அணைக்க சொல்லுகிறாய்...!!! வீட்டு தோட்டத்தில் பூத்தும் வாடியும் ... இருக்கும் மலர்கள் ... உன்னை நினைவுக்கு ... கொண்டு வருகிறது ....!!! உயிர் பிரிந்தபின்பும் வாழும் ஒரே ஒரு விடயம் காதல் ...!!! கே இனியவன் - கஸல் 77

ஏமாளியாக இருக்கவில்லை....!!!

ஏழையாக இருக்கிறேன் ஏமாளியாக இருக்கவில்லை....!!! ஏழ்மையில் வாழ்கிறேன் எடுப்பார் கைப்பிள்ளையக இருக்கமாடேன்....!!! மன்னிக்க மனம் அதிகமில்லை மனம் புண்படுமாறு நடப்பதில்லை....!!! கற்காதவர் மத்தியில் பேசமாட்டேன் கற்றவர் மத்தியில் கவனமாக பேசுவேன்...!!! அறிவாளியாக என்னை கருத மாட்டேன் அறிவை தேடாமல் இருக்க மாட்டேன்....!!! எல்லாம் முடியும் என்னால் என்று கூறமாட்டேன் எதுவும் முடியாது என்று இருக்கமாட்டேன்....!!! எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டு... என்பதை நிச்சயம் நம்புகிறேன் .. முடிவு இல்லையென்றால் ...... முடிவில்லையென்று கலங்கமாட்டேன் ..!!! + கவிப்புயல் இனியவன் 

உண்மையை ஊமையாக்காதே ..

உண்மையை ஊமையாக்காதே .. உறவுகளை அதிகம் நம்பாதே .. உணர்வுகள் இறந்தாலும்.... உயிர் இத்துப்போனாலும்.... உறுதியிழந்து வாழாதே.... உறுதி கொள் -நிச்சயம்.... உறுதியான வெற்றிஉண்டென்று.... உன் முகத்தை திருத்து.... உலகத்துக்கு நீ ஒரு கண்ணாடி.... உள்ளத்தில் கசப்பு ஏற்பட்டாலும்.... உதட்டில் உண்மைபேசு.... உலகம் இப்போ விலை உலகம்.... உலகமயத்தில் இது சாதாரணமப்பா .. உன்னை நீ மதிப்பீடு செய்.... உண்மையில் கிடைக்கும் பெரு வெற்றி ....!!!

தாயே என்னை மன்னித்துவிடு

உறுதியில்லாத வாழ்வில்..... உறுதியான நேர்மையுடனும்..... உறுதியான நியாயத்துடனும் ... உண்மையாக வாழ்வாயாக .... என் தாயின்வேண்டுகோள் ...!!! ஆம் என்றேன்...!!! உண்மை பேசினேன்.... உளருகிறான் என்றார்கள்.... நியாயம் சொன்னேன்... நீ என்ன நீதிபதியா....? வினா எழுப்பினார்கள்..... உண்மை கூற ஓயாமல்... உழைத்தேன் -ஆனால்.... கேட்பார் யாரும் இல்லை..... வெடித்தது -இதயம்... வேதனைப்பட்டேன்... வெட்கப்பட்டேன்......!!! ஓயவில்லை நான் ...!!! சமூக சேவை செய்தேன்.... இந்த பூச்சாண்டி வேலையெல்லாம்..... எங்களுக்கு காட்டாதே என்றார்கள்..... சமூக சீர்திருத்தத்துக்காக.... சிந்தனை பேச்சு பேசினேன்.... மாரி தவளைபோல்... கத்துகிறான் என்றார்கள்.....!!! ஓரமாக இருந்து யோசித்தேன்...??? சமூக சிந்தனையை ... சுய சிந்தனையாக்கினேன்.. நியாயம் இல்லாமல்... காலில் விழுந்தேன்.... பிழைக்க தெரிந்தவன்.... என்று பாராட்டினார்கள்......!!! பொருள் வந்தது... பதவி வந்தது.... தலைவா,,,!!! தலைவா ,,,!!! கூச்சல் இட...... ஒரு கூட்டமும்.... சேர்ந்தது........!!! எல்லாம் வந்தது... அன்னையின்... ஆசைபோனது......! மனிதத்தை விற்றுவிட்டு... மனிதனாக நடிக்கிறேன்..... என...