இடுகைகள்

காதலிக்கிறாயா ...?

இரும்பை காந்தம் கவரும் ..... எறும்பை கரும்பு கவரும் ..... காரணம் இல்லாமல் பேசினேன் ..... காதலிக்கிறாயா ...? கண்டுபிடித்துவிட்டான் நண்பன் ....!!! + ஐந்து வரி கவிதைகள் ......!!! காதல்கவிதை கவிதை எண் 22

காதல் பிரியாத புதிராய்

கண்ணால் தோன்றிய காதலுக்கு  ..... கண்ணுறு பட்டுவிட்டது ..... கண்ணுக்கு தெரியாத காதலுக்கு .... கனவு தான் மிஞ்சியது ..... காதல் பிரியாத புதிராய் ....!!! + ஐந்து வரி கவிதைகள் ......!!! காதல்கவிதை கவிதை எண் 21

காரணத்தோடு பிரிந்தாலும்

நீ காரணத்தோடு பிரிந்தாலும் ..... நான் காலமெல்லாம் காதலிப்பேன் .... எப்படியும் வாழ்வது உன் புத்தி .... உன்னோடே வாழ்வது என் பக்தி .... தனியே இருந்தாலும் நினைவில் -நீ  + ஐந்து வரி கவிதைகள் ......!!! காதல்கவிதை  கவிதை எண் 20

நான் அழகில்லை

சிரித்து சிரித்து பேசியவள் .... மற்றவர்கள் சிரிக்கும் படி ..... வைத்துவிட்டாள்.....!!! நான் அழகில்லை தான் ... நீ அழகாக இருப்பதால் ....!!! + ஐந்து வரி கவிதைகள் ......!!! காதல்கவிதை  கவிதை எண் 19

காத்திரு என்கிறாயே .....!!!

என்னவளே உறக்கத்தை  தொலைக்கும் அளவுக்கு .... நினைவுகளை தந்துவிட்டு ..... கனவில் இன்று வருவேன் ... காத்திரு என்கிறாயே .....!!! + ஐந்து வரி கவிதைகள் ......!!! காதல்கவிதை  கவிதை எண் 18

செயலிழந்து வாழ்கிறேன் ....!!!

நீ சிரித்துவிட்டு போய்.... விட்டாய் நானோ ..... செயலிழந்து வாழ்கிறேன் ....!!! நீ அழுதுவிட்டு போயிருந்தால் ..... நான் இறந்துகொண்டிருப்பேன்.... காதல் இன்பத்தில் துன்பம் ....!!!

பெண் ஒருத்தி ....

பெண் ஒருத்தி .... தன் காதலை காப்பாற்ற  .... எத்தனை துன்பங்களையும் .... தாங்கிக்கொள்வாள் .....!!! ஆண் ஒருவன் ..... தன் காதலை காப்பாற்ற  .... எத்தனை அவமானங்களையும் .... தாங்கிக்கொள்வான் ....!!! + காதல் இன்பமும் துன்பமும் 

காதலின் இன்பமும் துன்பமும் ...!!!

உன் மீது கொண்ட .... ஆசையும் .... இன்பமும்  .... காதலின் வலிக்கு.... காரணம் என்பதை .... உணர்ந்தேன் .....!!! காதலுக்கு .... இரு வலிகள் .. உன்னால் எனக்கு .... வரும் வலி .... என்னால் எனக்கு .... வரும் வலி .....!!!

மூன்று கடுகு கவிதை

உன்னை இன்பபடுத்த என்னிடம் இருக்கும் ஒரே சொத்து கவிதை @@@ காணமல் போன என்னை உன்னிடம் கேட்ட  ஒரு முட்டாள் நான்....!!! @@@ காகிதத்தில்  வரிகள்  வலிக்கிறது  கவிதையில் காதல் வலிக்கிறது ...!!!

தமிழ் பொறுக்கி.....!!!

நான் எழுதும் கவிதை உனக்குவிளங்கினால் போதும் சங்கதமிழ்  தமிழ் பித்தனுமில்லை முத்தமிழ்  நக்கீரனும் இல்லை கண்ட இடத்தில் கண்டதை பொறுக்கும்  தமிழ் பொறுக்கி.....!!! கவிதை உணர்வுகளின் சுகம் .... உணர்வுகள் உணர்பவர்களுக்கே .... உணரமுடியும் ......!!!

என்னை உயிராய் நினைப்பாய்"

நீ வெறுக்கும் அளவுக்கு அசிங்கமானவன் நீ ஒதுக்கும் அளவுக்கு ஒன்றும் இல்லாதவன் நீ நினைக்கும் அளவுக்கு ஒழுக்கமில்லாதவன் நீ எதற்க்காக என்னை காதலிக்கிறாய் ..? "எதுவுமே இல்லாத ஒருவனை விரும்பினால் தான் எல்லாம் இருக்கின்ற என்னை உயிராய் நினைப்பாய்" @@@ நிமிடத்துக்கு  துடிக்கும் ..... என் இதயம் ..... எதிர்பார்த்து நிற்கையில் பலமணி  துடிக்க விரும்புகிறது .... உன்னை கண்டவுடன் ...... ஜென்மம்  துடிக்க விரும்புகிறது .... துடிப்பது என் இதயம்,,, உனக்கு எப்படி விளங்கும் நீ என்னை விட்டு செல்லும் ..... நிமிடத்தில் இறங்குமுகமாய் .... துடிக்கிறது .....!!!

மூன்று வரிக்கவிதை

தண்ணீரில் மூழ்கினால் கூட-இவ்வளவு தண்ணீரை  கண்டிராது என் கண்கள் ...... கண்கள் குளமாகியபோது உணர்ந்தேன் ....!!! + மூன்று வரிக்கவிதை கே இனியவன்

போராட்ட கவிதை

காற்றோடு போராடுவது -பஞ்சின் வாழ்க்கை நினைவோடு போராடுவது-காதலின் வாழ்க்கை பசியோடு போராடுவது-ஏழையின் வாழ்க்கை பூனையுடன் போராடுவது-எலியின் வாழ்க்கை கடனோடு போராடுவது-விவசாயியின் வாழ்க்கை சூரியனோடு போராடுவது-பூவின் வாழ்க்கை தமிழோடு போராடுவது- கவிதையின் வாழ்க்கை உரிமைக்காய் போராடுவது தமிழன் வாழ்க்கை உயிர் வாழ போராடுகிறது மனித வாழ்க்கை ....!!!

காதலிக்காமல் இறந்துவிட கூடாது ..

காதலிக்காமல் இறந்துவிட கூடாது ... சரியா தவறா ...? ஏற்போமா ஏற்பாளா ....? இதயத்தில் ஆயிரம் .... கேள்விகள் சந்தேகங்கள் .... காதல் என்றால் சந்தோசம் ... இல்லை என்றால் என்னில் .... எனக்கே சந்தேகம் .....? காதல்  கிடைப்பது பெரித்தில்லை .... காப்பாற்றுவதே பெரிது ..... திருமணமாகாமல் இறக்கலாம் .... காதலிக்காமல் இறந்துவிட கூடாது ... பிறப்பின் பிறவிபயனே.... இறந்து விடும் .......!!!

இதயம் கல்லறையானது ....!!!

என்னவளின் கொலுசு சத்தம் காதலை  கொண்டுவந்தது.....!!!  என்னவளின் மெட்டி சத்தம் கேட்டு .... இதயம் கல்லறையானது ....!!! + இன்றைய sms கவிதை  கவிப்புயல் இனியவன்