இடுகைகள்

புனிதமாகும் நம் காதல்

புனிதமாகும் நம் காதல் *** என் சுவாசத்தை நிறுத்துவது .... எனக்கொன்றும் கடினமல்ல .... உன் நினைவுகளை .... நிறுத்துவதை .... காட்டிலும் அது இலகு ....!!! மரணத்தில் கூட .... புனிதமாகும் நம் காதல் ..... மனதால் தோன்றிய காதல் .... மரணத்திலும் புனிதம் ....!!! + ஈழத்து கவிஞர்  கவிப்புயல் இனியவன்

என்னோடு இருந்துவிடு

என்னோடு இருந்துவிடு **** உனக்காக ... எத்தனை வழிகளில் .... தயங்குகிறேன் .... என் கவிதைகள் ... உன்னை வருத்திவிடுமோ ....? தயங்கி தயங்கி .... எழுதுகிறேன் ....!!! என் விழிகள் திறந்திருக்கும் .... நேரமே என் இதயத்தில் ,,,, வந்தாய் .....!!! என் விழிகள் மூடும்வரை ... என்னோடு இருந்துவிடு ...!!! + ஈழத்து கவிஞர்  கவிப்புயல் இனியவன்

நம் காதலே வந்தது

நம் காதலே வந்தது *** ஓவியம் ,,,, வரைந்தேன் .... உன் முகமே வந்தது ....!!! காவியம் எழுதினேன் .... நம் காதலே வந்தது ....!!! கவிதை எழுதினேன் .... உன் நினைவுகளே .... வந்துகொண்டிருகிறது ....!!! + ஈழத்து கவிஞர்  கவிப்புயல் இனியவன்

கண்ணீரின் வலி கூறும்

கண்ணீரின் வலி கூறும் **** உன்னை காணாமல் .... இருந்த ஏக்கத்தை .... உன்னை கண்டவுடன் .... கண்ணோரத்தில் வடியும் .... கண்ணீரின் வலி கூறும் ....!!! நீ சென்ற பின் ..... என் இதயத்தின் வலியை..... நீ சுமந்துகொண்டு போகும் .... என் இதயத்திடம் கேள் .... கண்ணீர் விடு கதறும் ....!!! + + ஈழத்து கவிஞர்  கவிப்புயல் இனியவன்

காதல் சொல்லும் சின்ன கவிதைகள்

காதல் சித்தனாவேன் காதலுக்கு கிடைக்கும் .... மிகப்பெரிய பரிசு .... கவிதை ......!!! சோகத்துக்கும் கவிதை... சுகத்துக்கும் கவிதை .... நினைவுகளாலும் கவிதை ... கனவுகளாலும் கவிதை .... ஒன்றில்..... காதல் பித்தனாவேன்.... இல்லையேல் காதல் ... சித்தனாவேன் ....!!! + ஈழத்து கவிஞர்  கவிப்புயல் இனியவன்

அதிகமாய் நினைப்பதற்கே அன்பே .....!!!

பிரிந்து பார்த்தேன் பிரிய முடியவில்லை ...... வெறுத்துப்பார்த்தேன் வெறுக்கமுடியவில்லை  ..... மறந்து பார்த்தேன் மறக்கவும் முடியவில்லை .... பிரிவு வெறுப்பு மறதி எல்லாம் உன்னை ..... அதிகமாய் நினைப்பதற்கே அன்பே .....!!! + ஐந்து வரி கவிதைகள் ......!!! காதல் தோல்வி கவிதை கவிதை எண் 17 +++++ சொந்த மொத்தக்கவிதை = 6230

சொந்த மொத்தக்கவிதை = 6229

சுட்டெரிக்கும் சூரியனை விட ...... உன் வார்த்தைகள் சூடானவை ..... வலிமை கொண்ட மலையை விட .... உன் மனம் கடினமானது ....... பிரிவின் பெறுபேறு உணர்த்தியது ....!!! + கே இனியவன்  ஐந்து வரி கவிதைகள் ......!!! காதல் தோல்வி கவிதை  கவிதை எண் 16 +++++ சொந்த மொத்தக்கவிதை = 6229

கவிநாட்டியரசர் கே இனியவன்

காதலை காதலால் காதல் செய் கண் உறங்கி எழுந்ததுமே ...... +++ கண்முன் சிலையாய் நிற்கின்றாய்....!!! காலையில் குளிக்கும் தருவாயில் ...... +++ முத்து நீர்த்துளியாய் நினைவில் வருகிறாய் ....!!! உணவுண்ணும் உணவு தட்டில் நீ ....... +++ முழுநிலா அழகுடன் வருகிறாயே ......!!! வேலைக்கு செல்லும் தூரம் வரை ....... +++ என்னோடு அருகில் பயணம் வருகிறாய் ....!!! உனக்கென்ன உயிரே ஜாலியாய் ....... +++ உறங்கி கொண்டே இருகிறாய் ......!!! உனக்கும் சேர்த்து நானே காதலிப்பதால் ..... +++ இரண்டு இதயவலியை நானே சுமக்கிறேன் .....!!! அடுத்த ஜென்மம் நான் நீயாக பிறந்து .... +++ நீ நானாக பிறந்து உன்வேதனைபார்க்கணும் ......!!! உனக்காக உன் வலியையும் சுமக்கும் ..... +++ என் இதயத்துக்கு எத்தனை வலிமை .....!!! என்ன காரணத்துக்காய் என்னை மறந்தாய் .... +++ என் இதயத்திலும் உயிரிலும் தேடுகிறேன் ....!!! நீ கூறும் நிஜாயங்கள் நியமாக இருந்தால் .... +++ அந்தக் கணப்பொழுதே நான் மடிந்துடுவேன் ....!!! எனக்கென்று எதுவுமே இல்லாதபோது ..... +++ நான்உயிர்இருந்தென்ன சாதிப்பேன் ...??? அடுத்த ஜென்மத்தில் நீ பிறந்தால் ..... +++ க...

வாழ்வதற்கே - நீ

என் இதயத்தை .... உன்னை நினைக்காமல் .... இருக்க தடுப்பு சுவர் .... போட்டேன் - அதையும் தாண்டி உன்னை .... எட்டி வந்து பார்க்கிறது ... இதயம் ....!!! காதல் தனியே .... காதலிக்க மட்டுமல்ல .... காலமெல்லாம் உன்னோடு ... வாழ்வதற்கே - நீ காதலித்துவிட்டு சென்றுவிட்டாய் .....!!! + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை

காதல் முகவரியில் நீ

நம் காதல் கண்னில் .... ஆரம்பித்ததால் ..... கண்பட்டு விட்டது .... காயப்பட்டுவிட்டது ....!!! காதலில் நான் .... தொடக்கப்புள்ளி.... நீ வட்டம் ......!!! உனக்கு போட்ட .... காதல் கடிதம் ... எனக்கே திரும்பி .... வந்துவிட்டது .... காதல் முகவரியில் ... நீ இல்லையாம் .....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;842

அம்மா கவிதைகள்

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் .... எந்த மனகுழப்பமும் இல்லாமல் ... எந்த வேறுபாடும் இல்லாமல் ..... அன்புவைக்கும் உயிர் வேண்டும் ..... தாயே அது உன்னால் மட்டுமே முடியும் ....!!! + கே இனியவன்  ஐந்து வரி கவிதைகள் ......!!! அம்மா கவிதைகள்  கவிதை எண் 15

அம்மா கவிதைகள்

தன் தாயைப்போல் எல்லா .... தாயையும் நினைப்பவன் ஞானி ..... ஆனால் எந்த தாயையும் -நீங்கள் .... அம்மா என்று அழைத்துபாருங்க்கள் .... உங்களை தன் குழந்தையாகவே பார்க்கும் .....!!! + கே இனியவன்  ஐந்து வரி கவிதைகள் ......!!! அம்மா கவிதைகள்  கவிதை எண் 14

அம்மா கவிதைகள்

தான் எங்கிருந்து வந்தேன் .... என்பதை எனக்கு எடுத்துரைக்கவே ..... என்னை ஆலயத்துக்கு அழைத்து .... சென்றார் அம்மா என்பதை ...... மக்கு மண்டைக்கு புரியவில்லை ....!!! + கே இனியவன்  ஐந்து வரி கவிதைகள் ......!!! அம்மா கவிதைகள்  கவிதை எண் 13

அம்மா கவிதைகள்

தாயே உன்னை வார்த்தையால் ..... வரிகளால் அழைக்கும் போதும் ..... அம்மா என்று அழைத்த போதும் ..... உயிரில் அதிர்வு ஏற்படுகிறது .... உயிரில் கலந்த உறவு தானே .....!!! + கே இனியவன்  ஐந்து வரி கவிதைகள் ......!!! அம்மா கவிதைகள்  கவிதை எண் 12

அம்மா கவிதைகள்

அம்மா - இறைவனின் உன்னத படைப்பு .... அம்மா - இறைவனாக பார்க்கப்படும் பிறப்பு .... அம்மா - ஒவ்வொரு இதயத்திலிருக்கும் சாமி ..... அம்மா - இன்ப துன்பத்தை தாங்கும் கடவுள் .... அம்மா - எல்லா உயிரினங்களின் மூல கடவுள் ....!!! + கே இனியவன்  ஐந்து வரி கவிதைகள் ......!!! அம்மா கவிதைகள்  கவிதை எண் 11