இடுகைகள்

தமிழ் விஞ்ஞான தந்தை கலாம் ,,,,,

படம்
தமிழினத்தை உலகறிய ..... உச்சத்துக்கு கொண்டுசென்ற ..... உத்தம மனிதர்களில் ஒருவர் ..... மேன்மை தங்கிய தமிழ் .... விஞ்ஞான தந்தையே கலாமே ...! உங்கள் பங்கும் வற்றாத நதி அய்யனே .....!!! அடுத்த வேளை உணவுக்கு .... அல்லல் பட்டாலும் நம்பிக்கையை .... தளராமல் விடாமல் முன் செல் ... வெற்றி நிச்சயம் சாதனை நிச்சயம் .... வாழ்துகாட்டிய எம் தந்தையே ... அய்யனே .....!!! எப்போது எதிர்காலம் உங்கள் ... கையில் இளைஞர்களே மாணவர்களே .....! உச்சாகம் ஊட்டுவதில் உம்மை தாண்டிய .... எவரையும் நாம் பார்தத்தில்லை -சான்று ..!!! உயிர் பிரியும் வேளையிலும் மாணவர்களின் .... அருகிலேயே உயிரையும் விட்டீர்களே ....!!! அய்யனே ..... நீங்ககள் விதையை ஊன்றிவிட்டு .... சென்றுள்ளீர்கள் - நிச்சயம் ... மரமாகும்... தோப்பாகும் ...வனமாகும் ....!!! இருபத்தொராம் நூற்றாண்டின் ..... விஞ்ஞானத்தின் தந்தை மட்டுமல்ல .... இளைனர்களின் கனவு தந்தையும் .... நீங்கள் தானே அய்யனே .....!!! [/font]

அதுவே உனது இறைவன்.....!!!

ஒருசொல்லை .... தினமும் உச்சரித்துகொள்..... ஒவ்வொரு மணியும்  உச்சரித்துகொள்.... ஒவ்வொரு நிமிடமும்  உச்சரித்துகொள்.... ஒவ்வொரு நொடியும் உச்சரித்துகொள்.... அதுவே உனது மூலமந்திரம் ....! மந்திரமென்று எதுவும் இல்லை ....!!! ஒன்றில் அன்புவை ...... காதல் செய் ..... தினமும் அதனை நேசி ..... ஒவ்வொரு மணியும் நேசி ஒவ்வொரு நிமிடமும் நேசி .... ஒவ்வொரு நொடியும் நேசி .... அதுவே உனது இறைவன்.....!!! + கே இனியவனின் பல்வகை கவிதைகள் ஆன்மீக கவிதை

காதல் வரும்போது சொல்

கண்ணால் விபத்து ..... கவனம் காதல் வரும் .... காதல் வந்தால் கவனம் .... கண்ணீரும் வரும் ....!!! நீ  மூச்சு விடும் இதயத்தோடு .... வாழ்கிறாய் -காதல் இதயம் ... வரும்போது சொல் -நான்  காதலிக்கிறேன் .....!!! நன்றி உயிரே .... எனக்குள்ளும் காதல் ... இருக்கு என்பதை .... புரியவைத்தமைக்கு .... உனக்கு என்ன ஆயிற்று ....? + கவிப்புயல் இனியவன்  தொடர் பதிவு கஸல்  கவிதை ;820

கவலை படவில்லை

கவலை படவில்லை  உன்னை இழந்ததால் ...! காதலும் கவிதையும் .... உன்னால் கிடைத்தது ....!!! என்  ஒவ்வொரு மூச்சும்  உனக்கான கவிதை ....!!! என்னை அழவைத்து .... பார்ப்பது உனக்கு பிடிக்கும்  என்று எனக்கு தெரியும் .... இன்னும் தா வலியை....!!! + கவிப்புயல் இனியவன்  தொடர் பதிவு கஸல்  கவிதை ;819

என்னையும் அழைத்து செல்

திக்கு தெரியாத காடு .... தனிமையில் நின்றவன் .... நிலைபோல் ஆகிவிட்டது .... என் காதல் ....!!! நான் வாசனையில்லாத மலர் .... எப்படி விரும்புவாய் ....? என்னையும் அழைத்து .... செல் என்று அழுகிறது .... உன்னிடம் இருக்கும் .... என் இதயம் ....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;818

தலை குனிந்தது -நீ

காதல் ஆரம்பத்திலும் .... முடிவிலும் .... தலை குனிந்தது -நீ மழைக்கால ஓடை மழைபொழிந்தால் அழகு .... உன் காதலும் அதுபோல் ... சில வேளை அழகு ....!!! நம் காதல் தூக்கதில் அழகு..... அப்போதுதானே கனவில் .... இனிமை தருகிறாய் ....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;817

குறுங்கவிதை

நாம் ஒவ்வொருவரும் ... பொய்யர்கள் தான் ... நம் நிழல் காட்டுகிறது ....!!! + கே இனியவனின் பல்வகை கவிதைகள் குறுங்கவிதை

ஒரு உடலில் இரண்டு இதயம்

ஒரு உடலில் இரண்டு .... இதயம் - என்ன ஆச்சிரியமா ....? ஒவ்வொரு தாயும் .... கருவுற்றிருக்கும் போது .... இரண்டு இதயம் தானே ....!!! வாழ்கை ஒரு சுமை .... சுமந்து காட்டியவர் -நம்  அன்னை .....!!! வாழ்கையை சுமையாய் .... நினைக்காதே -வாழ்ந்து  காட்டியவர் - அன்னை ....!!! + கே இனியவனின்  பல்வகை கவிதைகள்  அம்மா கவிதை

முயற்சிக்காமல் இருக்காதே ....!!!

முயற்சிக்க கூடாததை ... முயற்சிக்காதே .... முயற்சிக்க கூடியதை .... முயற்சிக்காமல் இருக்காதே ....!!! முயற்சி  தெருவில் இருப்பவனையும் .... திருவினையாக்கும்  முயற்சி இல்லாதவன் ... முழுவதையும் இழப்பான் ....!!! + கே இனியவனின்  பல்வகை கவிதைகள்  முயற்சி கவிதை

இன்று நான் இறக்கபோகிறேன்

காற்றோட்டம் பெற ..... மரங்களுக்கிடையில் .... நடந்துசென்றேன் ..... மரங்கள் என்னோடு .... பேசத்தொடங்கின .....!!! வேப்பமரம் ....! ஏய் இனியவரே ..... எனக்கு கீழ் ஒரு அம்மன் .... உருவத்தை வைத்துவிட்டு .... செல் என்றது - திகைத்தேன் .... நான் என்ன ஞானியா ...? மந்திர வாதியா ....? சிலையை உடன் வரவழைக்க ....? அரசமரம் .....! ஏய் இனியவரே .... எனக்கு கீழ் ஒரு பிள்ளையார் .... சிலையொன்றை வைத்துவிட்டு ... செல் என்றது - புன்னகைத்துவிட்டு .... மேலும் சென்றேன் .....!!! ஆலமரம் .....! ஏய் இனியவரே .... எனக்கு கீழ் ஒரு பைரவர் ... சூலத்தை வைத்துவிட்டு ... செல் என்றது - ஒரு பெரு மூச்சை ... ஆழமாக எடுத்துவிட்டு சென்றேன் .... அடுத்த மரம் என்னிடம் ..... எதையும் கேட்கவில்லை ..... வியப்படைந்தேன் - ஏய் மரமே .... உனக்கு கடவுள் நம்பிக்கை .... இல்லையா ...? ஏன் எதையும் .... கேட்கவில்லை என்று நான் ... வினாவினேன் .....!!! போங்க இனியவரே .... அவைகளெல்லாம் ஞானத்தால் .... சிலைகளை கேட்கவில்லை .... தம்மை விட்டிவிடகூடாது ... என்ற பயத்தால் கேட்கிறார்கள் .... அப்படியென்றாலும் தம்மை .... வெட்டும் அளவு குறையுமே .... அற்ப ஆசை தான் இனிய...

எங்கள் தமிழ் மொழியே .....!!!

தமிழ்மொழி இனிமை மொழி ..... உலகின் பழமொழி தோற்றதுக்கு .... உயிர் கொடுத்த மூலமொழி ..... " ழ் " என்ற சிறப்பு உச்சரிப்பை ..... உன்னதமாய் கொண்ட மொழி ....!!! என் தமிழ் மொழி .... தேன் சுரக்கும் இனியமொழி .... உச்சரிக்ககூடிய் எளிய மொழி ,,,,, மொழிகளில் பழமை மொழி ..... மொழிகளில் சிறப்பு மொழி ..... உலகத்திலே தனித்துவ மொழி ....!!! தமிழன் என்றால் ஒழுக்கமே .... தமிழன் என்றால் பண்பாடே ..... தமிழன் என்றால் கற்பே ...... தமிழன் என்றால் வீரமே .... கற்று கொடுப்பது என்றும் .... எங்கள் தமிழ் மொழியே .....!!! + கே இனியவனின்  பல்வகை கவிதைகள்  தமிழ் மொழிகவிதை

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உ ள்ளம் தூய்மையாக இருப்பின்... உ ள்ளிருக்கும் மனது இறைவன்......! உ ள்ளதூய்மை என்பது .... உ யிரினங்கள் அனைத்திலும் .... உ ள்அன்பை செலுத்துவதாகும் ....!!! உ றவுகளே எனது இனிமையான .... உ ள்ளங்கனிந்த வாழ்த்துக்கள் .... உ ழைப்பை உயிராய் மதிப்போம் .... உ ற்றார் உறவினரை மகிழ்விப்போம் ..... உ ற்சாகமாய் வாழ்ந்திடுவோம் .....!!! உ ள்ளொன்று வைத்து புறம்பேசாதே..... உ ள்ளவனுக்கு பகட்டுக்கு உதவிசெய்யாதே ..... உ ண்டு களித்தே உடலை நோயாக்காதே..... உ ண்மை அன்பை உதறி விடாதே ..... உ ள்ளத்தை ஊனமாக்கிடாதே.....!!! உ ள்ளதை கொண்டு இன்பமாய் வாழ்வோம் .... உ லகிற்கு ஏதேனும் செய்துவிட்டு இறப்போம் ..... உ ள்ளதில் ஓரளவேணும் ஈகை செய்வோம் .... உ ள்வரவு எதிர்பார்க்காமல் உதவி செய்வோம் உ யிர்பிரிந்தபின்னும் உலகோடு வாழ்வோம் ......!!!

தொ(ல் )லைக்காட்சி ஆதிக்கம் ....!!!

நீண்டுகொண்டே போகிறது ... தொலைகாட்சி தொடர்கள் .... சுருங்கிக்கொண்டே போகிறது ... உறவுகளின் தொடர்பு ....!!! வந்த உறவை வரவேற்க ..... நேரமற்று... விருப்பமற்று .... படலையுடன் திருப்பியனுப்பும்.... தொ(ல் )லைக்காட்சி ஆதிக்கம் ....!!! + கே இனியவனின்  பல்வகை கவிதைகள்  வாழ்கை கவிதை

கொடுமையை உணர்கிறேன் ....!!!

காதலுக்கு தெரியவில்லை எல்லை ... அதிகம் நேசித்துவிட்டேன் .... விஷத்தை பருகிய ... அவஸ்தை படுகிறேன் ....!!! நீ என்னை விலக்கும் போதெலாம் -தனிமையின் கொடுமையை உணர்கிறேன் ....!!! + கே இனியவனின் பல்வகை கவிதைகள் காதல்தோல்வி  கவிதை

உன்னோடு எடுத்த செல்ஃ யும் ..

உன்னோடு .... எடுத்த செல்ஃ யும்  நீ பேசிய வார்த்தையின் .... கைபேசி பதிவும் .... உன் ப்ரோஃ பைல் படமும் ... நாம் பிரிந்திருந்தாலும் ..... நினைவுகளை உயிர்கிறது ...!!! + கே இனியவனின்  பல்வகை கவிதைகள்  கைபேசி கவிதை