இடுகைகள்

என் இதய கூண்டில் ....

பார்த்தவுடன் ... பாக்கதூண்டுவது காதல் ... பார்க்காமல் இருந்தால் ... பைதியமாவதும் காதல் ....!!! என் இதய கூண்டில் .... சோதிடம் சொல்லும் கிளி -நீ நல்ல சீட்டை எடு - நம் வாழ்க்கை அதில் உள்ளது....!!!

நானே காதலிக்கிறேன் ....!!!

நீ விழிகளால் சுட்ட வடுவும் ... நினைவுகளால் சுடும் வடுவும் ... இதயத்தில் அழியாத வடுக்கள் ...!!! நீ உன் காதலையும்... என் காதலையும் ... தந்துவிடு கவனமாக .. நானே காதலிக்கிறேன் ....!!!

ஒருமுறை என்னை ...

என்னிடம் புற்றுப்போல் .... படர்ந்திருக்கும் கவலையை .... உன்னால் மட்டுமே .... உடைத்தெறிய முடியும் ...!!! ஒருமுறை என்னை ... காதலோடு பார் ... மறுகணம் நான் இறந்து ... பிறப்பேன் ....!!! - 

காதலோடு வாழ்ந்தால் ...

மந்திரமான உன் பார்வை .... தந்திரமான என் பேச்சு .... பிறந்தது நம் காதல் ....!!! காதல் என்றால் கலகமும்... கலங்களும் இருக்கத்தான் .... இருக்கத்தான் செய்யும் ... காதலோடு வாழ்ந்தால் ... காதல் இனிமையானது ...!!!

அன்பே கவிதையோடு வாழ்வோம்

நீ காதலோடு வந்தாய் ... நான் இப்போ உனக்கு ... காதலனாக இருக்கிறேன் ... உலகிற்கு ... கவிஞனாக இருக்கிறேன் ...!!! உன்  சின்ன பார்வை ... நான் இரண்டு பிறப்பு ... பிறந்திருக்கிறேன் .....!!!

முத்தான மூன்று வரி கவிதைகள்

காலம் எல்லாம் காதல் வேண்டாம் ... என்னை காலன் அழைக்கும் வரை காதல் செய் ....!!! *********** காதலுக்கு கவிதை தேவை .... கவிதை எழுத காதல் தேவை .... காதல் செய் கவிதை வரும் ....!!! *********** புரிந்துபார் காதல் புரியும் பிரிந்து பார் காதலின் வலி புரியும் ....!!! ************ காதல் தவிர்ப்பில் உள்ளது .. தவிர்ப்புக்களின் வார்த்தையே ... கவிதை ....!!! ************ இதயம் இருக்கு என்பதற்காக ... காதல் செய்யாதே ... இதயமாக காதல் செய் ....!!!

காதலையும் சுமந்து வருகிறாய் ...

நீ தனியாக வந்த காலத்தில் .. தாங்க முடியாத என் இதயம் ... காதலையும் சுமந்து வருகிறாய் ... எப்படி முடிகிறது என் இதயத்தையும் .. சுமந்து கொண்டு வருவதற்கு ....!!! நீ பார்க்கும் போது அழகுதான் ... அதைவிட அழகு நீ என்னை ... பார்க்காததுபோல் பார்த்து போவது ... தூரத்தில் சென்று பார்க்க துடிப்பது ...!!! + இது தொடர் கவிதை அல்ல தொடரும் கவிதை - 03

முத்துப்போல் பல் அழகியல்ல ...

நீ பௌணமி அன்றுதான் ... பிறந்திருக்க வேண்டும் .... வட்டமுகத்துடன் .... வண்ண மேனியுடன் .... பிறந்திருகிறாய்....!!! முத்துப்போல் பல் அழகியல்ல ... உன் பல்லைபோல் முத்து அழகு ...!!! உன் கழுத்தை அலங்கரிக்க .... ஆபரணம் தேவையில்லை ... ஆபரணங்கள் அழகு பெற உன் .. கழுத்து தேவை ....!!! + இது தொடர் கவிதை அல்ல தொடரும் கவிதை - 02

இது தொடர் கவிதை அல்ல தொடரும் கவிதை

உண்மையை சொன்னால் .... உன்னை பற்றிய கவிதைதான் ... உன் அசைவுகளை வரிகலாக்குகிறேன்.... உள்ளத்தில் பட்டத்தை உள்ளபடி .... உரைக்கபோகிறேன்.... உன் உதடுகள் பேசத்தேவையில்லை ... அசைந்தாலே போதும் .... நான் ஆயிரம் கவிதைகள் எழுதுவேன் ...!!! + இது தொடர் கவிதை அல்ல தொடரும் கவிதை 

அன்புள்ள காதலே .....!!!

காதலே ... நான் உன்னை பிரியாதவரை ... நீ என்னை பிரியாது இரு .... இல்லையேல் நான் உலகை .... பிரியும் வரையாவது  நீ பிரியாமல் இரு ....!!! @@@@@ காதலே .... காயப்படாமல் இரு ... காயப்படாமல் இருந்தால் ... காதலே இல்லை என்கிறது ... காதல் ....!!!

அன்புள்ள காதலே .....!!!

உன்னை வெறுக்கத்தான் ... துடிக்கிறேன் - நெருப்பின் ..... மேல் விழுந்த நெய் போல் ... கொழுந்து விட்டு எரிகிறது ... உன் நினைவுகள் ...!!! @@@@@@@ காதலிக்க முன் கற்று கொள்ளுங்கள் ... காதல் நிலையானது ... காதலி நிகழ்தகவானது ...!!!

உயிர் எழுத்தும் நீதான் உயிரே ....!!!

அ அழகியே அன்பரசியே ... அழகுக்கெல்லாம் அழகியே... அற்புதங்களில் ஒன்றாய் உன் ... அழகையே அலங்கரிப்பேன் ...!!! ஆ  ஆருயிரே ஆனந்தியே .... ஆறறிவை அழித்தவளே ... ஆயுளை அரிதாக்கியவளே... ஆயுள் வரை ஆதரிப்பேன் ....!!! இ  இனியவளே இன்பரசியே .... இதயத்தில் இடம் பிடித்தவளே ... இரண்டர என்னோடு வாழ்பவளே ... இல்லறத்தில் நல்லறம் காண்பேன் ...!!! ஈ  ஈரவிழி ஈஸ்வரியே ... ஈன்ற தாய் போல் என்னை ... ஈரத்துடன் காப்பவளே .... ஈரேழு ஜென்மம் நீதானடி .....!!! உ  உயிரே உமையவளே .... உயிராய் நினைப்பவளே... உயிரில் கலந்தவளே ... உலகம் கவரும் காதலர் நாம் ...!!! ஊ  ஊன் உறக்கம் இன்றி என்னை ... ஊர் ஊற்றாய் சுற்ற வைத்தவளே ... ஊஞ்சல் ஆடுதடி உன் நினைவுகள் ... ஊரார் ஆசியுடன் வாழ்வோம் நாம் ....!!! எ  என் இதய எழில் அரசியே ... எதிர் பாராமல் என்னை சந்தித்தாய்  எதிர்காலமாகிவிட்டாய் -நீ  எத்தனை இடர் வந்தாலும் நீ தான் ...!!! ஏ ஏகாந்தம் போற்றும் ஏஞ்சலே ... ஏற்றமடைய வைத்தவளே .... ஏற்ற துணையாய் வந்தவளே ... ஏற்றமான வாழ்க்கை வாழ்வோம் ....!!! ஐ  ஐம்பொன் சிலை அழகியே .... ஐம்பொறியையும் அடக்கியவளே... ஐயம் இ...

என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

பிறக்கும் புத்தாண்டை .... பெற்றெடுத்த என் தாய்க்கு .... வாழ்த்துக்கு பயன்படுத்த .... பிறக்கும் புத்தாண்டுதான் ...,. பெருமை கொள்ள வேண்டும் ... தாயே என் வாழ்த்துக்கள் ...!!! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்  @@@@@ என்னை வழிநடத்தும் .... தந்தையே பிறக்கும் புத்தாண்டு ... புதிய வழிகளை பிறப்பிக்கும் ... பிறப்புக்கு காரணமான தந்தையே ... உங்கள் வாழ்த்தை பெறுவதற்காக  தந்தையே என் வாழ்த்துக்கள் ... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்  @@@@@ ஆண்டு தோறும் ஆயிரம் ஆயிரம் .... அர்த்தமுள்ள கருத்துக்களை ... அழகாக என்னுள் விதைத்த ... என் உயிர் ஆசானே - உம்மிடம்  இருந்து ஆண்டுக்கு ஆண்டு ... வாழ்த்துக்களை பெற்றேன் ... நானும் ஒருமுறையே வாழ்த்த... ஆசைப்படுகிறேன் குருவே .... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்  @@@@@ புத்தாண்டென்றால் கொண்டாட்டம்....  கொண்டாட்டம் என்றால் நட்புதான்... நண்பா நான் வாழ்த்தாவிட்டாலும்..... என்னை வாழ்த்த மறக்காதவனே.... வாழ்துகிறேனடா உனக்கு முன் ... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்  @@@@@ உணவின்றி உயிர் வாழமுடியாது ... உறவின்றி ஊரில் வாழமுடியாது ... உன்னதமான உறவுகளுக்க...

சிறு வரியில் சமுதாய கவிதை

பாம்பை ... கண்டால் படையும் ... நடுங்கும் என்கிறார்கள் ... பாம்பாட்டிக்கு பாம்பு நடுங்குதே ... பார்ப்பவனுக்கு பாம்பு .... பாம்பாட்டிக்கு தொழில் ...!!! + சிறு வரியில் சமுதாய கவிதை

சிறு வரியில் சமுதாய கவிதை

மண்ணை பொன்னாக மதித்து ...  மண்ணை பெண்ணாக மதித்து ....  மண்ணை உயிராக மதித்து ...  மண்ணை பொன்னாக்க விதைத்தான் ...  கடன் வட்டி தொல்லை அவனை ...  மண்ணுக்குள் கொண்டு சென்று ....  விட்டதே ....!!!  +  சிறு வரியில் சமுதாய கவிதை