இடுகைகள்

காதல் புதிர் ...!!!

என்னை கொஞ்சம் ... கொஞ்சமாக வருத்தவே ... கவிதை எழுதுகிறேன் ....!!! நீ  புரிய முடியாத புதிர்  நான் புரிந்தும் புரியாத  காதல் புதிர் ...!!! நீ என்னோடு ... நடந்து வந்த தூரம் ... பாதையில் குழி வரவில்லை .. இதயம் பள்ளமாகவே ... போய் விட்டது ....!!! கே இனியவன் கஸல்  கவிதை ;755

பிரிவும் காதல் தான் ....!!!

கல்லை உரசி ... நெருப்பு மூட்டியது அறிவு  நீ என் கண்ணை... உரசி காதல் தந்தாய் ... அதுதான் சாம்பலானதோ...? எனக்கும் உனக்கும் .... உறவும் காதல் தான்....  பிரிவும் காதல் தான் ....!!! சீ ....உனக்கு காதலிக்க கூட  .. தெரியாது என்று ... இழிவாக பேச ... வைத்துவிட்டாய் .....!!! கே இனியவன் கஸல்  கவிதை ;754

உன்னை நினைத்து

உன்னை நினைத்து  அன்பாகத்தான் கவிதை ... எழுதுகிறேன் ... எப்படியோ வலியாக... மாறி விடுகிறது ...!!! காதலுக்கு  மரணம் இல்லை ... எப்படி நம் காதல்  புதைகுழிக்குள்  நடக்கிறது  ....!!! என்னை விட உலகில்  ஏழை யாரும் இல்லை  இன்ப வரிகளே  வருகுதில்லை ......!!! கே இனியவன் கஸல்  கவிதை ;753

கற்றுக்கொண்டேன் ...!!!

உன்னை  காதலித்ததில் .... நன்றாக அழுவதற்கு ... கற்றுக்கொண்டேன் ...!!! நீ வார்த்தையால் .. சொன்னதை நான் ... கண்ணீரால் எழுதுகிறேன் ...!!! உனக்காக  காத்திருந்த இரவுகளால்  என் கருவிழி ... வெண்மையாகிவிட்டது ...!!! கே இனியவன் கஸல்  கவிதை ;752

கண்ணீர் வரவைகிறது ...!!!

காற்றை போல் உனக்கு ... வாசமுமில்லை  நிறமுமில்லை ..... காதலில் பயன்  படுத்தாதே .....!!! இரவின் கனவும் ... உன் நினைவுகளால் .. கண்ணீர் வரவைகிறது ...!!! நான்  உன் கண் இமையை.... ரசிக்கிறேன் நீயோ ... அழித்து விடுகிறாய் ....!!! கே இனியவன் கஸல்  கவிதை ;751

பலன் இருக்கும் ....!!!

நீ தூக்கி எறிந்த இதயம் ... தவமிருகிறது -மீண்டும் நீ வருவாய் என்று ....!!! எந்த தவத்துக்கும் பலன் இருக்கும் ... உன் மௌனத்துக்கும் பலன் இருக்கும் ....!!!

நீதான் நினைகிறாய் ....

நீதான் நினைகிறாய் .... உன்னை விட்டு நான் ... தூரத்தில் இருக்கிறேன் ... விலகி இருக்கிறேன் ... பாசமில்லாமல் இருக்கிறேன் ... என்கிறாய் ....!!! உனக்கு புரியுமா ...? நான் இங்கு பார்க்கும் பார்வைகள் அனைத்திலும் .. நீயே இருகிறாய் ... தெரிகிறாய் .... பேசுகிறாய் ......!!!

ஒரு இதயம் தான் ....!!!

நீ நினைக்கும் போதும் ... விரும்பும் போதும் ... என்னை பார்த்து சிரிப்பதும் பேசுவதும் ....!!! நீ விரும்பாதபோது ... விலகி நிற்பதும் ... உன்னால் எப்படி ... முடிகிறது ...? என்னிடம் இருப்பது ஒரு இதயம் தான் ....!!!

எங்கே புரியப்போகிறது ...?

உனக்கு எங்கே புரியப்போகிறது ...? வலியின் வலி ...? பிறப்பின் போது தாய் ... உன் வலியை சுமர்ந்தார் ...!!! காதல் இறப்பின் போது .... உன் வலியை நான் .. சுமக்கிறேன் ....!!!

அகராதி தமிழில் கவிதை 02

ஆருயிர் நண்பா .....!!! ஆட்கொண்டாயடா தூய அன்பில் ... ஆதாயம் எதுவும் இல்லாமல் .... ஆதரவு ஒன்றே போதும் என்று ... ஆபத்தென்றால் அருகில் இருப்பவனே ....!!! ஆகம் நிறைந்து வாழ்பவனே .... ஆகாரம்  இன்றி வாழ்வேன் -உன் ஆறுதல் என்றும் எனக்கு இருந்தால் ... ஆகூழ் மூலம் கிடைத்தவன் -நீ ஆகாயம் அழியும் வரை நீ இருப்பாய் .....!!! ஆக்கிரமித்தல் அன்பிலும் உண்டு ... ஆச்சியம் போல் உருகுதடா மனசு .... ஆணு தரும் நினைவுகள் தருவாய் .... ஆதிவாரம் நாம் பெறும் ஆணு .... ஆச்சரியமான அன்பு வெள்ளமடா ....!!! ஆத்திகனுக்கு சமனானவனே...... ஆதவன் போல் பிரகாசமானவனே ..... ஆதிமுதல் அந்தம் வரை இருப்பாயடா ... ஆரி கொண்டேனடா உன் அன்பில் ... ஆசந்திக்குள் இருவருமே போவோம் நண்பா ....!!! ஆகம் - நெஞ்சு  ஆகூழ் - நல்வினைபயன்  ஆணு - இன்பம்  ஆசந்தி - சவபெட்டி  கவிதை ; அகராதி தமிழ் நட்பு கவிதை கவிஞர் ; கே இனியவன்

காதல் குறட்கூ கவிதைகள்

காதல் குறட்கூ கவிதைகள்  காதல்  அழகானமலர்  அழகானவை ஆபத்து  ####### கண்ணால்  காதல் வருகிறது  இதயம் நொறுங்குகிறது  ####### கற்பனையில் மனம் இருக்கும்  இதயம் உன்னிடம் இருக்கும்  ######## நொடிமூச்சு  நிலையில்லை  காதல் நிலையானது  ######### உறவுகள் பறிபோனது  காதல் வந்தது

அகராதி தமிழில் கவிதை

அழகு அழகு தமிழ் போல் நீ அழகு ... அகங்காரம் கொண்டவளே நீ அழகு .... அலங்காரம் இல்லாவிடினும் நீ அழகு .... அகடவிகடம் கொண்டவளே நீ அழகு .... அகத்திணை ஏற்படுதுபவளே நீ அழகு ....!!! அகம் முழுதும் நிறைந்தவளே ..... அகமதியால் காதலை இழந்தவளே.... அகோராத்திரமும் நினைவில் நிற்பவளே ...... அகோரமாய் இருக்குதடி உன் நினைவுகள் .... அக்கினியால் கருகுதடி நம் காதல் ....!!! அச்சப்படாதேயடா என்னவனே ..... அச்சுதனடா என்றும் நீ எனக்கு ..... அகந்தையும்  அகமதியுமில்லை .... அடர்த்தி கொண்டதடா  நம் காதல் ...... அகிலம் போற்றும் காதலாகுமடா ....!!! அடைமழை போல் இன்பம் தந்தவளே .... அந்தகாரத்தில் வந்த முழுநிலவே ..... அபலைகளில் நீ எனக்கு அதிதேவதையடி .... அகராதி தழிழில் காதல் கவிதை தந்தேன் .... அகத்திலே நீ அத்திவாரமும் அந்தியமும் ...!!! அகமதி  - செருக்கு     அகோராத்திரம்  - பகலும் இரவும்  அந்தகாரம்  - இருள்  கவிதை ; அகராதி தமிழ் காதல் கவிதை  கவிஞர் ; கே இனியவன்

விரும்பவில்லை ....!!!

என் நண்பர்களுக்கு ... உன்னை எப்படி கூறுவது .... காதலி என்று சொல்ல .. உன் பதில் வரவில்லை ...!!! நட்பு என்று சொல்ல ... என் இதயம்... விரும்பவில்லை ....!!!

விரும்பவில்லை ...!!!

எனக்கு நன்றாக புரிகிறது ... நீ என்னை விரும்பவில்லை ...!!! உன்னை  என் இதயத்தில் ... இருந்து விட்டால் தானே .... காதலிப்பாய்  .....!!!

வேண்டாம் உன் பதில் ...!!!

நித்தம் நித்தம் .... மரண குழிக்குள் சென்று .. வருகிறேன் - இன்று நீ பதில் சொல்வாய் என்று ....!!! உன் பதில் உண்மையாக .... என்னை குழிக்குள் தள்ளாது.... என்று நம்புகிறேன்..... வேண்டாம் உன் பதில் ...!!!