கவிப்புயல் இனியவன் லிமரைக்கூ

லிமரைக்கூ 
ஆங்கிலத்தில் ‘லிமரிக்’ என்பது ஒரு கவிதை வடிவம். 5 அடிகளில் அமையும் இந்தக் கவிதை வடிவம் முக்கியமாக வேடிக்கை, வினோதம், நகைச்சுவை முதலிய உணர்வோடு இயங்கக் கூடியது. 

தமிழில் முதன்முதலாக ஈரோடு தமிழன்பன் ‘லிமரைக்கூ’வைப் படைத்துள்ளார். தமிழில் முதன்முதலாக ‘லிமரைக்கூ’வைப் படைத்த ஈரோடு தமிழன்பன் ஆங்கிலத்தின் ‘லிமரிக்’ வடிவத்தையும் / உள்ளடக்கத்தையும் [லிமரிக்கில் பயின்று வரும் இயைபுத் தொடையை 1 (முதல்) மற்றும் 3 (இறுதி) அடிகளில் இணைத்து] ஜப்பானிய ‘ஹைக்கூ’வின் வடிவத்தையும் இணைத்து 3 அடிகள் கொண்டு ‘லிமரைக்கூ’ என்ற புதிய தமிழ்க் கவிதை வடிவத்தை தமிழில் ஆரம்பித்து வைத்தார். இவ்வடிவமே தமிழின் லிமரைக்கூ வடிவமாக அமைந்து விட்டது.

அரச துறையில் தனியார் 
தொழில் சங்க தலைவர் இரட்டை வேஷம் 
இவரை கேட்போர் இனியார் 

^ 
கவிப்புயல் இனியவன் 
லிமரைக்கூ 01


ஜீரணத்துக்கு குடித்தான் மல்லி 
கட்டுப்படுத்த முடியாத விலை உயர்வு 
இழைத்து போனது உடல் ஒல்லி 


கவிப்புயல் இனியவன் 
லிமரைக்கூ 02

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்