தேவதாஸை காணவில்லையே ....?

காதல் அழுகிறது ...
என்னை காதலித்த  என் உயிர் ...
தேவதாஸை காணவில்லையே ....?
அவன் காதலியை விரும்பியதை ....
காட்டிலும் என்னையே (காதல் )....
காதலித்தான் .......!!!

கையிலே ஒரு காதலி .....
கைபேசியில் ஒரு காதலி ....
கைவிட்டு காதல்  போனால் ....
கைகுலுக்கும் காதலர்கள் .....
இதை காதல் என்று சொல்லும் ....
காதலர்களே -  தேவதாஸை
கேவல படுத்தாதீர் .....!!!

காதலில் தோற்றால் ...
நாங்கள்  தேவதாஸ் இல்லை ....
காலத்துக்கு ஏற்றால் போல் காதல் ...
செய்கிறோம் என்று கூறும் ....
காதலர்களே .....
காலங்கள் மாறினாலும்
காதல் மாறுவதில்லை ....
காமத்தை காதலாக கருதாதீர் ....
காதல் என்றும் காதல் தான் ....!!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்